Skip to main content

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்



ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.

எழுத்துக்கள் பற்றி கதைப்பதறகு எனக்கென்ன தகுதியிருக்கிறது, ஒரு நூறு புத்தகங்களையேனும் வாசித்து கடந்திருக்கிறேனா என எண்ணி பார்ப்பேன். அடுத்த கணமே யாரவது வந்து இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்றால் இப்போது தான் ஒரு கடைநிலை வாசிப்பாளனாக உருவாகிக் கொண்டிருக்கிறேன். ஜேகேயின் வாத்தியார் சுஜாதா என்பதற்காய் சுஜாதாவை இன்னும் ஆழமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன் . நீண்ட காத்திருப்பு ஜேகேயின் review காகவே தேடிப்பிடித்து வாசித்திருக்கிறேன். சமாதானத்தின் கதையை ஆதிரை வெளியிட்டதாலேயே ஆறாவடு வாசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் வாசித்திருக்கிறேன் நேற்றிலிருந்து கடல்புறா வாசிப்பதும் உறுதியாகிவிட்டது. இன்னும் ஆங்கில நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்துள்ளது . ஆக எனக்கு புத்தகங்களையும் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்துவது ஜேகேயின் எழுத்துக்கள்தான்.

சமாதானத்தின் கதை இது தான் நான் முதல் வாசித்த ஜேகேயின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் எனக்குள்ள ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திச்சு. ஒன்றிரண்டு நாளில வாசிச்சு முடிக்கிற சிறுகதைத்தொகுப்பில்லை. அவ்வளவு கனதி. விசையறு பந்து என்னை போட்டு தாக்கிச்சு. அன்றாடம் நிறைய இடங்களில அது புழு அப்பிடித்தானிருக்கும்னு ஆறுதல் தந்தது அது. ஒரு படைப்பு வாசித்து பல நாட்கள் கழிந்த பின்னரும் வாசகனோடு வாழச்செய்வதென்பது எவ்வளவு பெரிய விடயம் ??

சமாதானத்தின் கதை கலந்துரையாடலை யாழ்ப்பாணத்தில் வெண்பா ஒழுங்கமைத்திருந்தது. எப்படியாவது போய் ஜேகேயை பார்த்தாக வேண்டுமென முடிவெடுத்தாச்சு. புத்தக வெளியீட்டிலோ கலந்துரையாடலிலோ பங்குபற்றிய முன்னனுபவம் இல்லை. என் நட்பு வட்டத்தில் புத்தகம் வாசிக்கிற நண்பியான வராகினிக்கு call பண்ணி போவமா எண்டன் வேற அலுவலா நிக்கிறதால வரமுடியல எண்டு பதில் வந்தது. தனிய எப்பிடி போறது போகாட்டிக்கு ஜேகேயை எப்பிடி பாக்கிறது? புத்தகத்தை அப்பிடி வாசிச்சிருக்கன். மற்றவர்கள் எப்பிடி புத்தக அனுபவம் பகிர்ந்துகொள்ளுவார்கள் என்பதையறியவும் ஆவல் இல்லாமலில்லை. அதைவிட கவுதமி என்னோட வன்னியிலே ஒண்டாபடிச்சிருக்கிறா வேற. இப்பிடி எல்லாம் சேர்த்து 30நிமிஷம் சரியா இருக்க வீட்டில இருந்து என்னை கிளம்பவச்சது . சாவகச்சேரில இருந்து ஓரளவு இல்ல speedஆ போன தான் யாழ்ப்பாணம் 4கு போக முடியும். 4.10அப்பிடி இருக்கும் நான் குவிமாடக் கேட்போர் கூடத்தில நுழையேக்க. Bike ல செல்லும்போதே வித்தியாசமான உணர்வா இருந்திச்சு.எனக்கு பிடிச்ச மற்றும் நான் சந்திக்கப்போற முதல் எழுத்தாளர் என்ற பிரமிப்புணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தது . நேரமுகாமைத்துவம் இல்லை நாலு மணிக்கெண்டால் 3.55காவது நிக்க வேண்டாமோ என்ற படபடப்பும் இருந்தது.

உள்ளே சென்று இடைவரிசையில் அமர்ந்து கொண்டேன். நிகழ்வு தொடங்கவில்லை. முன் வரிசையில் பேச்சாளர்கள் அமர்ந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பேச்சாயத்தமாய் இருக்கலாம் .
ஜேகே தெரிந்தவர்களுடன் கை குடுத்து கதைத்துக் கொண்டிருந்தார். பிறகு எழும்பி வந்து மதிசுதா அண்ணாவோடு கதைத்துக்கொண்ட்டிருந்தார். கவுதமி முதல் வரிசை கதிரையிலிருந்து திரும்பி பார்த்து புன்னகைத்தார். எனக்கு fbல பாத்து நீதுஜன் அண்ணாவையும் வைதேகி அக்காவையும் தெரிந்திருந்தது. (முகத்தை அடையாளம் கண்டுகொள்ள தெரியும்.) சிறிது நேரத்தில் நிகழ்வு ஆரம்பித்தது. பேச்சாளர்கள் பேசத்தொடங்கினார்கள். நான் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தேன் .இன்னும் ஆழமாக ஒவ்வொரு சிறுகதைகளையும் தொட்டிருக்கலாமோ என்ற ஏக்கம் எழாமலில்லை. ஜேகே யின் உரை சுருக்கமாக இருந்தது. கலந்துரையாடல் நேரம் என சுதர்சன் அண்ணா அறிவித்தபோதே இருட்டியிருந்தது. வவுனியால இருந்து வந்த ஒரு அக்கா விசையறு பந்து பற்றி அது ஏற்படுத்தின தாக்கம் பற்றி அருமையா சொன்னா. ஒரு அண்ணா மன்னர்ல இருந்து சாப்பிடாம வந்திருந்தார் எண்டு சொன்னார். ஜேகேயின் எழுத்துக்களுக்கு பசி பொறுத்துக்கொள்ற சக்தி இருக்குனு மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டன் .

உவமைகள் பற்றிய கருத்து வர உமாஜி உவமைகள் இருந்தா ஜேகேயின் எழுத்துக்களை புறக்கணிப்பேன் எண்டது தூக்கிவாரிப்போட்டுது ஏனெனில் ஜேகேயின் உவமைகள்னு நான் ஒரு சின்ன noteல எழுதிவச்சிருக்கிறனான் வாசிக்கேக்க. ஜேகே உவமைகளை கையாளுற விதம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். விளைமீனில செதில் பறக்கிற போல சரசுமாமியின்ர நினைவுகள் பறக்குதுனு சொல்லியிருப்பார் இன்னும் நிறைய. (பிறகு ஒருநாள் உமாஜி ஏன் உவமையை வெறுக்கிறார்னு postஒண்டில பார்த்து தெரிஞ்சு கொண்டன். இருந்தும் பொருத்தமில்லாத உவமையை ஜேகே பாவிப்பார்னு எப்பிடி நினைக்கலாம் னு ஆதங்கப்பட்டுமிருக்கிறன்). இன்னும் சில காரசாரமான கருத்துக்கள். இலக்கிய சந்திப்புக்கள் இப்பிடி தான் இருக்கும்னு நினைச்சுக்கொண்டன். ஒருமாதிரி கலந்துரையாடல்கள் நிறைவுக்கு வந்திச்சு.

நான் bagல இருந்த சமாதானத்தின் கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜேகே கிட்ட போனன். நான் தாரணி .பஸ்ல போகேக்க யாரும disturb பண்ணினா கூட அது புழு அப்பிடி தான் behave பண்ணும் என்றளவுக்கு நினைக்க வச்சிருக்கிறீங்க என்று என்னை அறிமுகப்படுத்தினதா ஞாபகம். அண்ணா sign வச்சு தரணும் எண்டு சொல்லி புத்தக பின்பக்கத்த நீட்டினன் .சுஜாதா சொல்லியிருக்குறார்னு நான் புக் வாங்கின உடன மேல் மூலைல என்ர பெயரையும் வாங்கின திகதியையும் எழுதுறத பழக்கமாக்கியிருந்தன்.

என்ன எழுதுறது என கேட்டுக்கொண்டு பின் மட்டைல எழுதினா கிளிஞ்சிரும் அதான் பாக்கிறேன். ( mindvoice னு நினைச்சிட்டு பெருசா சொல்லியிருப்பனோன்னு doubt ஆ இருக்கு "நான் அவ்ளோ கவனமா வச்சிருப்பன"்) முன்னுக்கு திருப்பி நீங்க எழுதிடீங்க பெயர் எண்டிட்டு விளமீன் முடியிறதுக்கு கீழ என்ன பெயர் எண்டு மீண்டும் உறுதிப்படுத்திட்டு இப்பிடி எழுதிக் கொடுத்தார் " அன்புள்ள தாராணிக்கு அன்புடன் ஜேகே கீழ திகதி". என் வாழ்க்கையின் மகிழ்வான நாட்களில் மறக்கமுடியாத தினமன்று.



ஜேகேயின் எழுத்துக்கள் எல்லா வயதினரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. கொல்லைப்புறத்து காதலிகள் வாசிக்கும்போது கடவுளை எடுத்து 50's kid ஒருவரிடம் கொடுத்தேன். முகம் முழுக்க பூரிப்போடு வாசித்து முடித்தார். நாங்கள் எப்பிடியொரு வாழ்க்கையை யுத்தகாலத்தில் வாழ்ந்தோம்னு யாரும் ஒரு பதினைந்து வருடத்துக்கு பிறகு என்னிடம் கேட்டால் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தியுள்ள நூல் அது.

ஜேகே ஒரு வாசகரிடம் எதிர்பார்க்கின்ற குறைந்த பட்ச புத்திசாலித்தனம் இருப்பதாகவே உணர்கிறேன் . ஜேகேயின் எழுத்துக்கள் தான் எனக்கு ஜேகேயை அறிமுகப்படுத்துகிறது . பெயருக்காக நான் ஒருபோதும் எழுத்துக்களை வாசித்ததில்லை. கொண்டாடியதுமில்லை. அனால் ஜேகே கொண்டாடப்பட வேண்டிய ஆத்மார்த்தமான கதைசொல்லி என்பதில் சந்தேகமில்லை.

"என் கொல்லைப்புறத்துக்காதலிகள்" என்னோட versionல "சோ ஸ்வீட் சுஜாதா" போல டிபிக்கல் ஜேகே நாடிக்கு கை கொடுத்து கொடுப்புக்குள்ள லைட்டா சிரிச்சு கொண்டிருப்பார்.

-- தாரணி பாஸ்கரன்

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட