இராகவன்; அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர். தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக்கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய ஐ.கியூ அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதிவரையிலும் உருப்படியான மக்களுக்கு பயன்படும்வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்படமுடியாமல் போய்விட்டது. அவர் உருவாக்கிய எந்த மென்பொருளையும் எவரும் பயன்படுத்துவதில்லை. அவருடைய அப்ளிகேஷன்கள் அப்பிள் ஸ்டோரிலே யாராலுமே டவுன்லோட் பண்ணப்படாமல் தூங்குகின்றன. இன்றைக்கு இராகவன் ஏதோ ஒரு உப்புமா நிறுவனத்தின் உப்புமா மென்பொருளுக்காக தன்னுடைய திறமையை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார். திறமைசாலியான இராகவனால் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியாமல் போனதன் காரணம் என்ன? இராகவன் என்றில்லை. சுர