கௌஷல்யா அக்கா, பெரியம்மாவின் மகள். அத்தான் இன்ஜினியர். 80களிலேயே யாழ்ப்பாணத்தில் கம்பியூட்டர் வைத்திருந்தவர். நான் அறிந்த இன்ஜினீயர்களில், அந்த திறமையை வீட்டிலும் பயன்படுத்துபவர். அவர் வீட்டில் அழுக்குத்தண்ணி போகும் குழாயும் கிடங்கும் கூட ஒரு இன்ஜினியரிங் டச்சுடன் இருக்கும். பத்து வயசிலேயே அவர் மகன் சின்ன circuit இல் LED எல்லாவற்றையும் இணைத்து எனக்கு காட்டுவான். பளிச் பளிச் என்று ஒவ்வொரு கொமாண்டுக்கும் ஒவ்வொரு வரிசை காட்டும். நான் சொல்வது 88ம் ஆண்டு கதை. அப்போது தான் கணனியில் கேம் விளையாட பழக்கினார். போர் விமானம் ஒன்றை ஒரு குறுகலான கரடுமுரடான வழியில் செலுத்தவேண்டும். கல்லு விழும். மற்ற விமானங்கள் குண்டு பொழியும். தப்பவேண்டும். ஓடவேண்டும். அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள்! நான் ஆஸ்திரேலியாவில்! 1999 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எடுத்தாயிற்று. இனி என்ன செய்ய என்று அக்காவிடம் கேட்ட போது அடுத்த முறைக்கும் இப்போதே தயாராகு என்று சொன்னா! என் ரிசல்ட்டை பற்றி வீட்டில் அவ்வளவு நம்பிக்கை! ரிப்பீட்டுக்கு டே கிளாஸ் எல்லாம் எப்போது ஆரம்பிக்கும் என்று Science hall சென்று விசாரித்ததை பார்த