Skip to main content

Posts

வரலாறு என்கின்ற பசப்புக்காரி

அவள் மரணித்தபோது வரலாற்றுக் கிடங்கை கிளறி அவளை வெளியே தூக்கிப்போட்டார்கள். உடல் துடித்தது. வெளிச்சம் பாய்ச்சினார்கள். அவள் நிர்வாணம் கூசியது. குறிப்பெடுத்தார்கள். ஒலி பரப்பினார்கள். ஒளி பரப்பினார்கள். சொல் பரப்பினார்கள்.

வேலியே பயிரை மேய்ந்த கதை

  இது அறுபதுகளில் இடம்பெறும் கதை. ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள். அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம். ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார். ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன

ஊரோச்சம் 3 : பஸ்

  காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம்.  வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன்.  ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது . சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர். சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.   துப்ப

ஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி

  தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது.  எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும்.  அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. "உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது. ஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.

யாழ்ப்பாணம் அன்றும் இன்றும்!

புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள். வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள். பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள். காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள். குழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு. தேங்காய்ப்பூ காய்ந்த அம்மிக்கல்லுகள். தார் மெழுகிய உந்துருளி வீதிகள். சீருடை காணாத தெருச்சந்திகள். ஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா. காவல்துறை போலீசாகி நயினாதீவு நாகதீபவாகி தண்ணீர்க் கிணறுகள் எண்ணெய்ப்போத்தல்களாகி எண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி மாற்றம் ஒன்றே மாறிலி என்ற தேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன. கசக்கும் புலம்பெயர் உறவுகள். இனிக்கும் இருதய தொடர்புகள். மதில் சுவர்களில் கிழிந்து தொங்கும் தன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே புதிதாய் பசை மணக்கும் தனி ஒருவன் போஸ்டர்கள். வேலிகள் தொலைத்த படலையை திருத்தி இரும்பு கேற்று போடுகிறது இன்றைய யாழ்ப்பாணம். வெளியே நான்!

உதயன் நேர்காணல்

  உங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்? பெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான் கல்லூரியில். பின்னர் உயர்கல்வியை மொறட்டுவை மற்றும் RMIT பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேன். தற்போது மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகிறேன். தொழில் நிமித்தமாக கொழும்பு, சிங்கப்பூர் நகரங்களில் வசித்து தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் வாழ்ந்து வருகிறேன். படைப்புத்துறைக்குள் உங்கள் அடியெடுத்து வைப்பு எவ்வாறு நிகழ்ந்தது? அக்கா சொல்லும் சம்பவமொன்று. எனக்கு இரண்டு வயதாக இருக்கலாம். அக்கா என்னை மடியில் போட்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். "ஒரு ஊரிலே ஒரு இராஜகுமாரி இருந்தாள், அவளின் பெயர்.." என்கையில் நான் உடனே "சாந்தி" என்றிருக்கிறேன். சாந்தியக்கா பக்கத்துவீட்டுக்காரி! பாலர் பாடசாலையில் சம்பந்தர் ஞானப்பால் குடித்த பாடத்தை படித்த நாளன்று நானும் நாலு வரி உல்டா "தோடுடைய செவியன்" எழுதி அம்மாவிடம் "கிழி" வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் சிறுபிள்ளை

ஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்

  “அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்” “சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ!” -- யாழ்ப்பாண இராத்திரிகள் . யாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது. நேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று கிழமைகள் யாழ்ப்பாண அனுபவங்களை அசை போட்டபடி அப்போதுதான் இரண்டு உடுப்பை மடித்து பாக்கிற்குள் வைக்க ஆரம்பித்திருந்தேன். இந்த மூன்று கிழமைகளில் செய்யவேண்டும் என்று நினைத்தவற்றை ஓரளவுக்கு செய்தாயிற்று. போகவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய நபர்கள் என்று போனில் குறித்து வைத்திருந்த லிஸ்ட் எல்லாம் டிக்காகி விட்டது. ஆனாலும் எதையோ ஒன்றை மிஸ் பண்ணியது போன்ற உணர்வு. யாரையோ சந்திக்காமலேயே போகிறோம் என்றது உள்மனது. குட்டி போட்ட பூனையாட்டம் அறையை சுற்றி சுற்றி வருகிறேன். திடீரென்று பொறி தட்டியது… எப்படி அவரை மறந்தேன்? செங்கை ஆழியான்.

யாழ்ப்பாணத்தில் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்"

யாழ் பொதுசன நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் கலந்துரையாடல் இன்று மாலை மூன்று மணிக்கு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். கூடவே நூல் பிரதிகளையும் விரும்புபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை நல்லூர் கிளையிலும் புத்தகத்தை பெற்றுக்கொள்ள முடியும். சந்திக்க காத்திருக்கிறேன்.

ஆக்காட்டி நேர்காணல் - 6

இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன்.  

ஆக்காட்டி நேர்காணல் - 5

ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா?