Skip to main content

Posts

அன்றும் இன்றும் குரு

  அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற "அன்றும் இன்றும்" என்ற கவியரங்கத்தில் "குரு" பற்றி படிக்கப்பட்ட கவிதை. அன்றும் இன்றும் என்றும் என் குருவாய் அமைந்தவர். அவர் அருளாலே அவர் தாள் வணங்கிப் பணிகிறேன். அவைத்தலைவர் அண்ணனுக்கும் பெண்ணான நட்புக்கும் நட்பு சொல்லும் பெண்ணுக்கும் காதல் சொல்லும் தலைவனுக்கும் இனியமாலை வந்தனங்கள். அள்ள அள்ள குறையாத தெள்ளு தமிழ் இயல் கேள அள்ளு கொள்ளை யாகவந்து அமர்ந்தி ருக்கும்அன்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆயினும் என்ன ஒரு குறை! மாலைப்பொழுதின் மயக்கமோ? மதிய உணவின் கிறக்கமோ? இல்லை மயக்கும் சபை மொழிகளோ? நானறியேன். கரத்தை எடுத்து உரத்துத் தட்ட தயக்கமென்ன? காசா? பணமா? கலக்கமென்ன? கவிதை கை வசமாவது விரைவில் வேண்டும். கரவோசை கொடுங்களேன்.

தமிழ் அவுஸ்திரேலியன் நேர்காணல்

நன்றி கானா பிரபா  கேதா  தமிழ் அவுஸ்திரேலியன் 

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

முன் பதிவுகளுக்கு 2021-10-01 அச்சுப்பிரதிகள் தீர்ந்துவிட்டதால் புத்தகம் இப்போது அமேசனில் மாத்திரம் கிடைக்கிறது. நன்றி. https://www.amazon.com/dp/B0762ZRLZM/ref=cm_sw_r_sms_awdo_1ZXPSMTGVJFX4ZHPHNAE பிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். மெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும்.  புத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.   புத்தக விவரம் காப்புரிமை - ஜேகே  பதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au) ISBN-10 : 0992278422 ISBN-13 : 978-0-9922784-2-7 பக்கங்கள் – 344 அட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார் அட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ் கஜன்

கனவு நனவாகிறது

    விக்கி மாமா விக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய  பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி.  அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,. அவர்களுக்கும் தெரியாது. எண்ணினால் தரித்திரம் என்று எம்மையும் எண்ண விடமாட்டார்கள். நான்கரை மணிக்கே எழுந்து, பத்திருபதுபேர் சேர்ந்து பால் கறப்பார்கள். வெவ்வேறு சைஸ் பானைகளில் கறவை நடக்கும். ஆறரை, ஏழு மணி வரைக்கும் நீடிக்கும். கறந்த பாலில் தேத்தண்ணி ஊற்றி பட்டிக்கே கொண்டுவருவார்கள். தம்பிராசா அண்ணை பட்டியை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குப் போகும்வரைக்கும் பால் கறக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நாளுக்கு இருநூறு, முன்னூறு லீட்டர் வரைக்கும் சமயத்தில் பால் கிடைப்பதுண்டு.

அசோகனின் வைத்தியசாலை.

  அனைவருக்கும் வணக்கம். நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது; நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது, மன்னிப்பு. நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார். என் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.