புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

Feb 9, 2017 1 comments
சொல்வனம் இணையத்தில் வெளிவந்துள்ள அ. முத்துலிங்கம் சிறப்பிதழில் நான் எழுதிய "புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்" என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.

//தமிழில் ஒரு உதாரணத்தை எடுத்துப்பார்க்கலாம். சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.//

மேலும் வாசிக்க..

http://solvanam.com/?p=48404

Comments


  1. //ஒரு கட்டுரையில் புனைவு சேரும்போது, அதை வாசகர் உணர்ந்துகொள்ளும்போதும் மாற்று உண்மைகள் புற்றீசல்கள்போல வெளிக்கிளம்பும். கதைசொல்லிமீது இயல்பாக சந்தேகம் கிளம்பும். பிரதிமீதான கட்டவிழ்ப்பு நிகழும். அப்போது ஆசிரியரின் மறுஜென்மம் குறை ஆயுளுள் முடிந்துவிடும்//
    ஒரு எழுத்தாளன் இன்னொருவரின் படைப்பை பார்க்கும் போது அது புனைவு கட்டுரை என்பதை எளிதில் புரிந்துகொண்டு விடுவான். ஆனால் வாசகருக்கு நீண்ட வாசிப்பு அனுபவத்தின் பின்னரே தோன்றும் போல.

    ReplyDelete

Post a comment

Contact Form