Skip to main content

Posts

Showing posts with the label இளையராஜா

சகியே நீ தான் துணையே!

பாடல்கள் தரும் அனுபவங்கள் தனித்துவமானது. மேலும் மேலும் தேடல்களை உருவாக்கி அதற்குள் எம்மை தொலைத்துவிடும் அபாயங்களை ஏற்படுத்திவிடக்கூடியது. நேற்று அந்த தொலையும் அனுபவம் மீண்டும். இரவு ஒன்பது மணி இருக்கலாம். மேல்பேர்னின் கோடைக்காலத்து முதல் நாள். வெளிச்சம் இன்னமும் பரவலாக பல நிறங்களில் வியாபித்து, மெல்லிய சூட்டுடன் கொஞ்சமே தென்றலும் கூட சேர, நடை போவதற்கு அதைவிட சிறந்த நேரமோ காலமே கிடைக்காது. சகட்டு மேனிக்கு எங்கேயெல்லாம் போகப்போகிறோம் என்ற கவலையே இல்லாமல் பாட்டை கேட்டுக்கொண்டு நடக்கவேண்டும். பெயர் கூட கேள்விப்படாத பறவைகள் வற்றிப்போய்க்கொண்டிருக்கும் நீர்மண்டுகளில் தண்ணீர் தேடும், சேற்றில் சிறகடிக்கும். விளையாட்டு காட்டும். அவ்வப்போது பெண்கள் கூட்டம். கோடையின் வரவை பறைசாற்றிக்கொண்டு போட்டும் போடாமலும் ஓடும். பின்னாலே நாய்க்குட்டியும் ஓடும். எல்லாமே மனதுக்குள் ஒரு இதத்தை கொடுக்கவேண்டும். ஆனால் கொடுக்காது. பாரத்தை தான் கொடுக்கும். அந்த பாரம் நம்மை இன்னும் வேகமாக நடக்க செய்யும். இந்த முன்னிரவு அனுபவம் கொடுக்கும் துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அதோடு இந்த பாட்டும் சேர்ந்துவிட்டால் கதை கந்தல்...

நீ தானே என் பொன் வசந்தம்!

அதிகாலை மூன்று மணி.  மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே! இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா. இது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது.  இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி! முதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”,  ஏற்கனவே இரண்டு வரி டீசர் ...

மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!

  ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. கேட்டு/வாசித்து விட்டு சொல்லுங்கள்! யார் அந்த கோகிலவாணி என்று யோசிப்பவர்கள், உங்கள் கண்ணாடியில் போய் கேட்டுக்கொள்ளுங்கள்!   தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். பரணிகள் பலவும் முழங்கிய தேசம். அதை பரணிலே போட்டுவிட்டு படகேறியவர் நாம். நாம் தமிழர்! பனி விழும் தேசத்தில், பட்டதெல்லாம் மறந்துவிட்டு படகுக்காரும், பத்தினியும் பளிங்கினால் ஒரு மாளிகையும் கட்டியவனுக்கு பட்டென்று சுட்டது எதுவோ? அதுவே சுயத்தை என்றான் ஒருவன். சுரத்தை வந்த நேரம் சுற்றம் எல்லாம் சுடுகாட்டில் பரத்தை அழ...

டெல்லிக்கு ராஜா!

ராஜாவுக்கு பிறந்தநாள்! வெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை. “Aur Ek Prem Kahani” என்று ஒரு படம். கமல் நடித்த கன்னட சூப்பர் ஹிட்டான “கோகிலா” ரீமேக். பாலுமகேந்திரா படம். புதுசாக போடாமல் தன் பழைய ஹிட் மெட்டுகளை பாவித்து வெளியிட, இசை .. இசையை புரிந்தவர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வணிக வெற்றியை ...

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

  கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது....

என்ர அம்மாளாச்சி!

  “மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்"   எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக  வந்திருப்பான் போல. அடுத்தவன் கறுப்பன்.  ஒரு பெண்ணும் இருந்தாள். கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள். இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா? எல்லோருக்கும் பதினேழு பதினெட்டு வயசுக்குள் தான். ஒரே சிகரெட்டில் எல்லோர் மூச்சும் மாறி மாறி. அவர்களில் ஒருவன் என்னை கவனித்தான் போல இருந்தது. ஆஸி ஸ்லாங்கில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றியோ தெரியாது. நான் பார்த்ததை கவனித்திருப்பா...