Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

ஐடியா

  இராகவன்; அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர். தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக்கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய ஐ.கியூ அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதிவரையிலும் உருப்படியான மக்களுக்கு பயன்படும்வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்படமுடியாமல் போய்விட்டது. அவர் உருவாக்கிய எந்த மென்பொருளையும் எவரும் பயன்படுத்துவதில்லை. அவருடைய அப்ளிகேஷன்கள் அப்பிள் ஸ்டோரிலே யாராலுமே டவுன்லோட் பண்ணப்படாமல் தூங்குகின்றன. இன்றைக்கு இராகவன் ஏதோ ஒரு உப்புமா நிறுவனத்தின் உப்புமா மென்பொருளுக்காக தன்னுடைய திறமையை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார். திறமைசாலியான இராகவனால் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியாமல் போனதன் காரணம் என்ன? இராகவன் என்றில்லை....

ஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"

அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.

காதல்

  மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா? என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி த...

ஈர்ப்பு அலைகள்.

  கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா சைசுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்குமுன்னாலே சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார். ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அதனை உணர்வது கடினம். முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வதுபோலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில் நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் நிலையாக இருக்கிறீர்கள். சீரான வேகத்தில் இயங்கு...

ஆடை நீக்கு

  அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது. அடுத்தநாளும் போகிறார். இரண்டு பிழா கேக்கிறது. மூன்றாம் நாள் கலன். ஐந்தாம் நாள் தவறணை திறக்கமுதலே அண்ணர் வாசலில் நிக்கிறார். ஆறுமாதம் கழித்து கோயிலடியில் கோமதியைக் காண்கிறார். கண்ட கணமே அவர் வீட்டு கனகாம்பரப் பூக்கள் எல்லாம் அவளுக்கு மாலை கட்ட நூலைத் தேடின. அண்ணர் அவசர அவசரமாக கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார். அவளோ “ஒரு சொப்ட்வேர்காரனுக்கு கழுத்தை நீட்டிச் சீரழிந்தாலும் சீரழிவேனேயொழிய உன்னைப்போல குடிகாரனுக்கு தலையை நீட்டமாட்டேன்” என்றுவிட்டாள். மீண்டும் காதல் தோல்வி. கனகாம்பரப் பூக்கள் வாடிப்போயின. மொழிப்பயன்பாடும் அப்படித்தான் என்கிறார் ஜோர்ஜ் ஒர்வல். எழுபது வருடங்களுக்கு முன்னர் “Politics and the English Language” என்று அவர் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். இப்போதும் தமிழுக்கு நன்றாகவே பொருந்துகிறது.