அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecstasy மனநிலையை உருவாக்கும் போல, ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் நிறுத்தமுடியாது. எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலத்தோன்றும். பின்னர் ஒரு விதமாக படிந்து அடங்கிவிடும். சும்மா சொல்லப்போனால் இதுவும் ஒருவித orgasm தான். ஜெயகாந்தனுக்கும் அது "இன்னும் ஒரு பெண்ணின் கதை" யில் நிகழ்ந்தது என்று சொல்லலாமா?, சப்ஜெக்டிவ் தான். என்ன சிலர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஜெயமோகனின் எழுதும் ரேட் என்னை ஆச்சரியப்படுத்தும். அதிலும் ஒரு perfection இருக்கிறது இல்லையா? சொல்லும் கருத்தை விட்டுவிடுங்கள். ஜாக்கி சேகர் எழுதுவது வருடத்துக்கு சராசரி 275 பதிவுகள். எப்படி முடிகிறது? எது உந்துகிறது? எழுதுவதற்கும் வயாக்ரா ஏதும் இருக்கிறதா என்ன? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு substance கிடைத்துக்கொண்டே இருப்பது மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். தேடல் தான். மற்றவன் அந்தரங்கம் என்றால் குழல் புட்டு தொண்டைக்குள் போவது தெரியாமல் ரசித்...