அஞ்சலிகள் சார்ந்து பல்வேறு குழப்பங்கள் எனக்கு இருந்து வந்திருக்கின்றன. ஒரு மனிதரை வாழும்போதே கொண்டாடவேண்டும். இறந்தபின் செலுத்தப்படும் அஞ்சலிகள் மற்றவர்களுக்கானவை. இப்படி இப்படியெல்லாம் நீ சாதித்துவிட்டுப்போனால் இறந்தபின்னும் வரலாறு கொண்டாடும், ஆகவே சும்மா இருக்காதே என்று இருப்பவனை தூண்டிவிடும் செயல்களே அஞ்சலிப் புகழுரைகள். எஸ்பொ நினைவு நிகழ்விலும் நான் இதனை குறிப்பிட்டிருந்தேன். நாமெல்லாம் இப்படி அவரைக்கொண்டாடும்போது மனுஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருக்கும் என்று. சார்வாகன் நினைவஞ்சலியில் சாரு ஒருபடி மேலே போயிருந்தார். "திட்டினாலும் பரவாயில்லை, எழுத்தாளர் உயிரோடு இருக்கும்போதே அவரை உட்கார்த்தி வைத்து திட்டுங்கள். நான் செத்தபின்னர் எவனாவது அஞ்சலிக்கூட்டம் வையி, ஆவியா வந்து துரத்தியடிப்பேன்" என்று சாரு பொருமியிருந்தார். முன்னமும் எழுதியிருந்தேன். Tuesdays With Morrie நூலில் வயோதிபரான Morrie தனக்குத்தானே மெமோரியல் சேர்விஸ் செய்வார். நண்பர்கள் எல்லோரும் பூங்கொத்தோடு வந்து அஞ்சலி உரைகள் செய்வார்கள். எல்லாத்தையும் கேட்டு மனுஷன் சந்தோசமாக அன்றைய நாளைக்...