Skip to main content

Posts

இலையுதிர் அழகு

“தம்பி ஸ்கார்பரோவில எந்தெந்த சொந்தக்காரர் வீட்டயெல்லாம் போகோணுமோ சொல்லும். நான் கூட்டிப்போறன்” எனக்குத் திடுக்கென்றது. மொத்தக் கனேடியப் பயணமே வெறும் ஐந்து நாட்கள்தான். அதிலே ஸ்கார்பரோவுக்கு இரண்டு நாட்களை மாத்திரம் ஒதுக்கியிருந்தேன். அதிலும் ஒரு நாள் கௌசல்யா அக்காவுக்கானது. அவர் என் பெரியம்மாவின் மகள். ஊரில் இருந்த காலத்தில் தீபாவளி என்றால் ஆட்டிறைச்சி சாப்பிட அக்கா வீட்டுக்குதான் ஓடுவோம். மணியாகப் பொரியல் கறி வைப்பார். அவர்களோடுதான் அரியாலைவரை ஒன்றாக 95ம் ஆண்டு இடப்பெயர்வின்போது சைக்கிள் உருட்டினோம். பின்னர் நாவற்குழியில் தொலைந்தாலும் வட்டக்கச்சியிலும் ஒன்றாக அவர்களோடு வாழ்ந்தோம். அக்காவுக்கும் தம்பி என்றால் போதும். எனக்கும் அக்கா என்றால் போதும். அத்தானும் ஒரு அற்புதமான மனிதர். எழுபத்தெட்டு வயது. கார் ஓடுவதில்லை. நான் வருகிறேன் என்று இரண்டு பேருந்து அட்டைகளுக்குக் காசு போட்டுத் தயாராக வைத்திருந்தார். ஊபர் நிரலியும் அவர் செல்பேசியில் உயிர்த்திருந்தது. “இல்லை அத்தான். சொந்தக்காரர், தெரிஞ்சாக்கள் என்று வெளிக்கிட்டா விடிஞ்சிடும். எனக்கு ஸ்கார்பரோவை சுத்திக்காட்டுங்கோ. பனங்கொட்டை பனிக்குளி

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து வழங்கவேண்டும் என்பதுதான் அது. அது ஈற்றில் கைகூடியது என்னளவில் மிகப்பரவசமான தருணங்களுள் ஒன்று. நிகழ்வில் மொத்தமாக மூன்று பாடல்களை எடுத்துச் செய்தார்கள். முதலாவது பாடல் குறுந்தொகையில் உள்ள செம்புலப் பெயல் நீரனாரின் ‘யாயும் ஞாயும்’. கொல்லன் மகளாம் வெள்ளி பட்டறையில் பணி புரிந்துகொண்டிருக்கும் சமயம் அங்கு வருகின்ற கோடனோடு செய்யும் சின்னதான காதல் விளையாட்டு இது. பாடல் யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் https://www.youtube.com/watch?v=b5Huswf0xCI

பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்

ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான் சுட்டவேண்டும் அல்லவா? பரி. யோவான் கல்லூரி உருப்பட வேண்டும் என்று ஜொனியன்ஸ் எவரும் உண்மையிலேயே நினைக்கிறீர்கள் என்றால் முதலில் பாடசாலையை விட்டுக் கொஞ்சக்காலம் தள்ளி நில்லுங்கள். Get the hell out of there and leave the school alone.

வலியின் எல்லைக்கோடு

வலி உயிரைத் தின்ன ஆரம்பித்தபோது அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு சிறிது தூங்கி எழலாம் என்று புரண்டும் திரும்பியும் படுத்து, பல மணி நேரம் கழித்து எழுகிறோம் என்று நினைத்து மறுபடியும் மணிக்கூட்டைப் பார்த்தால் வெறுமனே பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. வலிக்கு அந்தப் பண்பு உண்டு. அது காலத்தை மெதுவாக நகர்த்த வல்லது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஒரு நூலை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டினேன். டிவி ரிமோட்டை உருட்டிக்கொண்டிருந்தேன். செல்பேசியின் செயலிகளுக்குப் போய் வந்தேன். இளையராஜா கேட்டேன். இசை ஒரு வலி நிவாரணி என்றவரைத் தேடிச் சென்று வெளுக்கவேண்டும்போல இருந்தது.

அபர்ணா - சிறுகதை

அபர்ணாவை எப்படி மனைவிக்கு அறிமுகப்படுத்துவது என்பது குழப்பமாகவே இருந்தது. “கூடப்படிச்சவ எண்டா எப்பிடி? உங்கட காலத்திலதான் பெடி பெட்டையள் ஒண்டாயிருந்து படிச்சதேயில்லையே?” நியாயமான கேள்வி. எனக்கு அபர்ணா அறிமுகமானது வன்னியில். நான் இடம்பெயர்ந்து இராமநாதபுரத்தில் வசித்தபோது அவள் குடும்பம் திருவையாற்றுக்குக் குடிபெயர்ந்திருந்தது. நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலைகள் இணைக்கப்பட்டு கிளிநொச்சியில் ஒன்றாக இயங்க ஆரம்பித்திருந்தன. ஒரே வகுப்பில் நாங்கள் இருவரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். நாங்களிருவரும்தான் கிளிநொச்சி கிழக்கில் தங்கியிருந்தவர்கள். காலையில் நான் திருவையாற்றுக்குப் போய் அங்கே அபர்ணாவையும் கூட்டிக்கொண்டு ஒன்றாக கிளிநொச்சிக்குப் போவேன். அவளிடம் ஒரு ஹீரோ லேடிஸ் சைக்கிள் இருந்தது. என்னுடையது லுமாலா. அந்தச்சமயத்தில் சீருடை அணியவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. இடம்பெயர்ந்தபோது அபர்ணா நான்கு செட் உடுப்புகளை எடுத்துவந்திருக்கவேண்டும். ஒரு சர்பத் நிற சட்டை. குட்டி குட்டி செக் போட்ட குடைவெட்டு பாவாடையும் ஒரு பிங் பிளவுசும். பின் நாரிக்கு மேலே பெல்ட் வைத்த இன்னொரு ப

வெள்ளி கொண்டாட்டம்

மழை நின்றும் தூவானம் அடங்காத மனநிலை எனக்கு. வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வு நிகழ்ந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இன்னமும் மனது இறுதி நாள் நிகழ்வினதும் அதற்கான பயணத்தினதும் கணங்களையே அசைபோட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வை இவ்வண்ணமே நடத்தவேண்டுமென்பது எனது நெடுநாள் கனவு. மன்றை அன்புடையோர் அனைவரும் நிறைத்திருக்க ஒரு பக்கம் ஜனகனின் ஓவியங்களும் மேடையில் அற்புத நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேணும். வெள்ளியின் பட்டறைக் காட்சி நாட்டிய அரங்காய் அமைதல் வேணும். என் மதிப்புக்குரிய முதலாந்தலைமுறை இலக்கிய ஆர்வலர் மட்டுமன்றி இங்கு வளர்ந்த இரண்டாம் தலைமுறை இலக்கியவாதிகளும் வெள்ளி பற்றிப் பேசிடுதல் வேணும். லாகிரியின் மேடைகளைப்போல, நூலை எழுதியவருடன் ஒரு தீவிர வாசகர் சோஃபா உரையாடலை உட்கார்ந்து செய்யவேண்டும். இப்படி ஏராளமான எண்ணங்கள். கனவு காண்பதும் கதை எழுதுவதும் தனித்த செயல். எளிது. ஆனால் எப்படி அவற்றை நடைமுறைப்படுத்துவது? அப்போதுதான் என் அன்புக்குரிய மெல்பேர்ன் வாசகர் வட்ட நண்பர்களிடம் வெள்ளியின் கொண்டாட்டத்தை நிகழ்த்தித்தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆனால் அவர்களோ எந்தத் தயக்கமுமின்றி மனமுவந்து இந்

வெள்ளி நாவலைப் பெற்றுக்கொள்ள

வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  “வெள்ளி” நாவல் மற்றும் என்னுடைய ஏனைய நூல்களின் பிரதிகளை படலை இணையத்தளத்தில் இப்போது online order செய்து பெற்றுக்கொள்ளலாம். விலைகள் அனைத்தும் தபால் செலவை உள்ளடக்கியவை.  இலங்கை, இந்திய வாசகர்களுக்கு புத்தகத்தை இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான முயற்சிகளை வெண்பா பதிப்பகத்தார் முன்னெடுத்துள்ளார்கள்.  அன்பும் நன்றியும் ஜேகே வெள்ளி வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது. Other Countries $53.00 AUD Australia/NZ $40.00 AUD கந்தசாமியும் கலக்சியும் வாழ்விடத்தைத் தெரிவு செய்க. தபால் செலவு உள்ளடங்கியது.

வெள்ளி - நாவல் முன்னோட்டம்

வெள்ளி நாவலுக்கான சிறு முன்னோட்டம். காணொலி ஆக்கத்திற்குப் பங்கெடுத்த என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.     வாசகர்கள் அனைவரும் இதனை இரசிப்பீர்கள் என நம்புகிறோம்.

கொட்டம் - கலையின் எதிவுகூறல்

அந்தக் கிராமத்தை ஒரு இராட்சச அனல் கக்கும் மூன்று தலை டிராகன் ஒன்று ஆட்சி செய்து வந்தது. அது தனக்கான உணவினைத் தினமும் அந்தக் கிராமத்து மக்களை மிரட்டி அபகரித்துப் பெற்றுக்கொள்ளும். தவிர அந்த மக்கள் அதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு இளம்பெண்ணையும் தாரை வார்க்கவேண்டும். இது இன்று நேற்று அல்ல, நானூறு ஆண்டுகளாக அந்தக்கிராமத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஒரு நிகழ்வு.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக