Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை




வணக்கம் ஜேகே

இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது  " கந்தசாமியும் கலக்சியும் " என் கைகளில் அகப்பட்டது. எனது போதாத காலம் ஒரு பக்கத்தை சும்மா பார்ப்பம் என்று திறந்து வாசித்தேன்.அது சுமந்திரனும் மிகிந்தர்களும் சந்திக்கும் தருணம். மூடி வைத்து விட்டு இவருக்கு விசர் இவரும் அரசியல் எழுத தொடங்கி விட்டார் என்று முடிவெடுத்ததுதான். அதன் பின் அந்த புத்தகத்தை வேண்டவேண்டும் என்ற எண்ணமே இல்லை .

மூன்று நாட்களின் முன் இந்த புத்தகம் கிண்டிலில் கிடைப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். விடுமுறை வேற வாசித்துதான் பார்ப்போமே என்று காலம் தாழ்த்திய ஞானோதயத்தால் வாங்கியதுதான் இந்த “கந்தசாமியும் கலக்சியும்”  வாசிக்க தொடங்கியதுதான் எங்கே சுவாரசியம் போய்விடுமோ என்று இரண்டு நாட்களில் வாசித்து உங்களுக்கு பதில் எழுதுவது வரை தூண்டியிருக்கிறது இந்த புத்தகம்.


பக்கத்தில் இருக்கும் நல்லூர்கந்தனை விட்டு விட்டு கண்டி கதிர்காம கந்தனை சாட்சிக்கு வைத்து எங்களை நம்ப சொல்லும் போதே ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிந்து விட்டது.

வேண்டாம் அதை செய்யாதே என்று சொன்னால் தானே அதனை செய்ய தூண்டும் மனித புத்தி இல்லை இல்லை குரங்கு புத்தி அதுவும் இல்லையா ஆட்டுவிக்கும் எலிப்புத்தியா என்னடா எல்லாமே குழம்புகிறதே.

இப்படி குழப்பிறது தானே இந்த ஜேகேயுடைய……….. 

நம்பின கடவுள் கைவிட மாட்டார் என்று வாசிக்க ஆரம்பித்தால் “மனித வாழ்க்கையே அபத்தங்களின் சாக்கு மூட்டை” என்று எங்களை முதல் பக்கத்திலேயே தேத்தண்ணி குடிக்க வைக்கின்றார் .

கந்தர் மடத்து கந்தசாமி கனடா என்ன பெரிய கனடா கலக்சிக்கே போய் ஒரு கலக்கு கலக்கி கண் மண் தெரியாமல் கண்ணூறு பட்டு போய்விட்டது கண்ணூறு சுத்தி போடவேணும் .

மைதிலிக்கு என்னவோ கிழங்கு ரொட்டியில் முழுதாக கிடைத்த மிளகாயை கடிக்கும் போது வந்த கேள்வியால் எங்களுக்கல்லவா எரிச்சலை கொடுக்கிறது .

சோமரத்ன அதுவும் ஒரு கையில் துவக்கும் மறு கையில் மனித உரிமை சாசனமும் வைத்திருக்கும்  வடமராட்சிகொடி, சம்பூர் கொடியையே மனிசிக்கு கொடுத்த  சோமரத்னவையே புல்டோஸரின் கீழ் படுக்க வைக்கும் சபரியன் மாட்டு புரோக்கர் சுமந்திரனின் வருகை.

பௌதீக கடலும் மிக்ஸர் பக்கற்றும் ஒன்றாக தடுமாறும் தருணம்…

பிரகராதியின் பயன்பாடும் அதன் ஒவ்வொன்றின் விளக்கமும் … இதுவும் கடந்து போகும் பதட்டப்படாதே என்னும் போது நமக்குள் இருக்கும் கேள்விகளையும் தூசி தட்டி பதில் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. துவாயை எடுத்து கந்தசாமியின் தோளில் சுமந்திரன் போடும் வரை மெயில் ட்ரெயினில் கொழும்பு செல்லும் வேகம் அதன் பின் தான் கடுகதி வேகம் பிடிக்கிறது.

ஆறறிவு மட்டுமே படைத்த நமக்கு பூமி அழிவதை சிவன் பொசன் என்று  சிம்பிளாக கலியாணம் கட்டினால் பிறகு அழியும் காதல் போல என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதற்கு இந்த நாவல் நிகழ்த்தப்படவேண்டும்.

விடுப்பு மீன் இருந்தால் நல்லதா கெட்டதா என்று யோசிக்கும் முன் பல காலமாக கடவுளை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் காய்ந்து போய் இருந்த  எழுத்தாளர் நீண்ட விவாதத்திற்கு தயார் ஆகிறார் என்னும் போது எமக்கு தேத்தண்ணியும் பனடோலும் தேவைப்படுகிறதுகடவுள் vs நம்பிக்கை என்று கந்தசாமி  என்ன நம்மையும் விட்டு வைக்கவில்லை.

பிரபஞ்சத்தின் இறுதி நொடி…. நேரடி வர்ணனை ...அதன் அனுசரணை….. ரணகளத்திலையும் ஒரு குதூகலம் நம் எழுத்தாளருக்கு.

கரும்பொருள்.....கருமைநிறகண்ணா....ஒன்றே எனின் ஒன்றே ஆம் ….மிகவும் நெருங்கியே இருந்திருக்கிறார்கள் நம்முன்னோர்கள் . எமது சிந்தனையை புரட்டி போட்டது , போட வைத்தது யுத்த காலம்.

கரும்பொருள் ஒரு பரந்த விஷயம் அதை புரிந்துகொள்ள உங்கள் மூளையின் சிந்தெடிக்பவர்போதாது.......கொஞ்சம் இருங்கோ தேத்தண்ணியோட 2 நியூரோபின் போட்டிட்டு வாறன்.

எவ்வளவு காலத்திற்குதான் விளங்காது விளங்காது என்று சொல்லாமல் இருப்பது ......ஜேகே நன்றி என்ற ஒரு வார்த்தைக்குள் இதனை அடக்க முடியாது.வார்த்தைகள் இல்லை.

நீ எதை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதை உன்னுடைய ஆழ்மனமே தீர்மானிக்கிறதுதுரோகிகள் அழிக்கப்படவேண்டும்இங்கு எவருமே நல்லவர்கள் அல்ல எம்மை சிந்திக்க விடாமல் பொம்மைகள் ஆக்கியிருக்கிறார்கள் என்று பல விடயங்களை நமக்கு உணர வைத்திருக்கிறது இந்த நாவல்.

கந்தசாமியோ முருகனோ  குவேனியோ மைதிலியோ பெருச்சாளியோ அழியாமல் இருக்கும் துவாயோ , அந்த கேள்வியோ எதுவாக இருக்கட்டும் விஜயன் படை வருகிறது என்பதில் அடுத்த கதைக்கான ஆரம்ப புள்ளியை எழுத்தாளர் வைக்கின்றாரோ அல்லது வாசகர்களின் எதிர்பார்ப்பை தூண்டுகிறாரோ.

      நன்றியுடன்
      வாசகி
      JG


0000

நன்றி கீதா. வாசித்தன் விளைவை கருத்தாக எழுதிப் பகிர்ந்தமைக்கு.
'கந்தசாமியும் கலக்சியும்' இப்பொழுது அமேசன் கிண்டிலிலும் கிடைக்கிறது.
-- ஜேகே

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக