Skip to main content

Posts

Showing posts with the label நூல் விமர்சனம்

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா

பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார். பின்னர் 2021 ஆண்டில் திரு ஜெயமோகன் அவர்களின் ‘சங்கச்சித்திரங்கள்’ விகடனில் தொடராகவும்,பின் தமிழினி பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் வாசிக்கக் கிடைத்தது. அப்புத்தகத்தில் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் ‘கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது,வாழ்வை விரிவு படுத்துவது,வாழ்வை வைத்துத்தான் கவிதையை வாசிக்க வேண்டும

பர்தா : உடைவழி அதிகாரம்

மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை. “ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகிறீர்கள். உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் பெண்களாகிய எங்களது உடலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்?” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மாவடியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரையா என்கின்ற பெண்ணின் வாழ்க்கைதான் இந்நாவல். சிறுமியான சுரையா வளர்ந்து, பெரியவளாகி, மணம் முடித்து, குழந்தைகள் பெற்றுக்கொண்ட பின்னருங்கூட, உடை ஒரு கலாசாரமாக, அரசியலாக, அதிகாரமாக எப்படித் தொடர்ச்சியாக அவளது வாழ்வில் திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதை மிகத் தீவிரமாகவும் கருத்தியல் நேர்த்தியுடனும் சொல்லுகின்ற நாவல் பர்தா. மாவடியூரில் பெருநாள் கொண்டாட்டம். அதற்காக மிரியாகமவுக்கு பணிமாற்றம் கிடைத்துப் போயிருந்த ஹயாத்து லெப்பையின் குடும்பம் ஊர் திரும்புகிறது. பெருநாளுக்கென்று ஹயாத்து லெப்பையின் மனைவியான பீவி கிளியோப்பற்றா சேலை அணிந்திருக்கிறார். கண்ணாடி

"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்

ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி. காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது. இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

கந்தசாமியும் கலக்சியும் - புதுப்பதிப்பு

வணக்கம் நண்பர்களே, என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.

பரி. யோவான் பொழுதுகள் - ஜூட் பிரகாஷ்

பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.   பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.

"பூப் புனிதக் கொலைகள்" நாவல் பற்றிக் கம்பவாரிதி இ. ஜெயராஜ்

 

சமாதானத்தின் கதை குறித்து நடராஜா முரளிதரன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 110 பக்கங்கள் வரை ஒரே நூலைப் படித்திருக்கின்றேன். “சமாதானத்தின் கதை" - தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயக்குமரன் சந்திரசேகரம் என்ற ஜேகே எழுதிய சிறுகதைத் தொகுப்பு. பதினொரு சிறுகதைகள். 224 பக்கங்கள். ஆதிரை வெளியீடு, புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறது. இந்த நூலிலுள்ள 'கனகரத்தினம் மாஸ்ரர்' மற்றும் 'சமாதானத்தின் கதை' ஆகிய கதைகள் எனக்கு மிகவும் நன்றாகப் பிடித்திருந்தன. படலை.கொம் என்ற இணையத்தளத்தில் எழுதிவரும் ஜே.கே, இந்த நூலின் மூலம் ஈழத்துச் சிறுகதையுலகின் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராகத் தன்னை ஆழமாகப் பதித்துள்ளார்.

சின்னான்

“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்லாமல் இந்தப் புலம்பெயர் புலிகள்தான் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்”

ஶ்ரீரங்கத்து தேவதைகள்

காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும் முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல. கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்ற

விஷ்ணுபுரம் - ஹம்பி

விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்ற

குஞ்சரம் ஊர்ந்தோர்

சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய ‘குஞ்சரம் ஊர்ந்தோர்’ நாவலைப் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்று அகழ் இதழில் வெளியாகியுள்ளது. https://akazhonline.com/?p=3856

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன்

பொதுவாகவே மரணங்களின் பின்னர் மனிதர்களுக்கு அவர்களின் சுற்றத்தவர்களாலும் அறிந்தவர்களாலும் புதிய பல அவதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை நல்லவையாகத்தான் இருப்பதுண்டு. அந்தியேட்டிக் கல்வெட்டுகளிலும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் முதற்தடவையாக அவற்றை நாம் அறிந்துகொள்ளும்போது சமயத்தில் நமக்கு ஆச்சரியமும் அடைவதுண்டு. அகால மரணங்களின்போது இவ்வடிவங்கள் மேலும் அதீத எல்லைகளைத் தொடுவதுண்டு. ஆனால் அதுவே ஒரு தற்கொலை மரணம் ஆகிவிட்டால் இந்தக் கட்டமைப்புகளில் சின்ன பச்சாதாபமும் சிறுமையும் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. தற்கொலை செய்த மனிதர்களுக்கு மற்றவர் செய்யும் அஞ்சலிகளைக் கூர்மையாகக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் அதிகாரமும் மேதாவித்தனமும் தொக்கி நிற்கும். அக்கணம் உயிரோடு இருக்கும் நாம் இறந்தவரைவிடச் சற்றுப் பெரியவராகிவிடுகிறோம். அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிடுகிறோம். மிகவும் நெருக்கமானவர் என்றால் கூடவே ஒரு குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ளும். தற்கொலைக்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். பல சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் காரணங்களுக்கான சாட்சியங்களைத் தேடிப்போவோம். அவர் ஏன் அப்படி இறந்தார் எ