ஏகன் அனேகன்.

Feb 1, 2014 13 comments

 

folder

"கடவுள்" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.

 

இந்த வசனங்கள் எழுதும்போது அந்த இசை ஏதோ செய்தது. இது அதிகாலை இறைவனுக்கு பூ கொய்யும் சிறுவனின் விவரிப்பு.

"நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரத்து கொப்பை, ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொளுவி வளைக்கும் போது, சொட்டு சொட்டாக கொஞ்சம்பனித்துளி, தலை, முகம் கழுத்தடி என்று விழுந்து சில்லிடும். திருவிழாவில் வாங்கிய ஒரு சின்ன பனை ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவெல்லாம் பிடுங்கி போட்டுக்கொண்டு, அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன்"

எழுதிக்கொண்டிருக்கும்போது இளையராஜா குரல் ஒலிக்கிறது.

original_ilayaraja_4688a36fb93631"நமச்சிவாய வாழ்க .. நாதன் தாழ் வாழ்க"
"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க"

கோரஸ் கேட்கும்போது மனது எங்கே போகிறது தெரியுமா?

"காதல் ஓவியம் காணும் காவியம்"
"தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்"

காதல் தான். கடவுள் என்றால் என்ன. காதலி என்றால் என்ன.

அடுத்த வரி.

"ஏகன் அனேகன் ... இறைவனடி வாழ்க"

என்னும்போது "அவன் வாய் குழலில் அழகாக.. " என்று யாரோ பிடறிக்குள் இருந்து இசைக்க "ஜகத்தாரிணி நீ பரிபூரணி நீ" என்று இன்னொரு இசை உச்சி மண்டைக்குள் இருந்து. இது எல்லாமே கல்யாணி என்று பேதை நெஞ்சங்களுக்கு புரியதேவையில்லை. அது நிகழும்.

இசை ஒருவித மனோபாவத்துக்குள் இட்டுச்செல்ல பின்வரும் வரிகள் வருகின்றன.

"கற்றை கற்றையாய் பூத்து தொங்கும் மஞ்சள் கோன்பூவை கொஞ்சத்தை இழுத்துப்போட்டுக்கொண்டே பின் வளவுக்கு சென்றால், அங்கே எக்ஸ்சோரா மரங்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பட்டர் கலர் என்று பல ரகம். கொத்தை அப்படியே அள்ளி, அம்மா செக் பண்ணுகிறாரா? என்று பார்த்து, இல்லை என்றால் அந்த சின்ன சின்ன ஸ்ட்ரோக்களில் வரும் தேனை உறிஞ்சி ப்ச்ச்..… தேன் என்னும் போது தான் ஞாபகம் வருகிறது. வாழைமரங்கள் உள்ள வீட்டுக்காரரா நீங்கள்? காலையில் பின் வளவில் வாழைப்பொத்தியின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் இல்லையா. அணில் பிள்ளைகளுக்கு வரும் முன்னமேயே வாழைத்தோட்டத்துக்கு போனால், அந்த பூக்கள் வாழை மரங்களில் உதிராமல் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக கொய்து அதில் சொட்டாய் ஒட்டி இருக்கும் தேனை குடிக்கவேண்டுமே. சாதுவான வாழைக்கயரும் சேர்ந்து கொடுக்கும் சுவை ...அதை உண்டு களித்து, தேனினை சொரிந்து புறம்புறத் திரிந்த செல்வத்தை தேடி சுவாமி அறைக்குள் நுழைகிறேன் "

அட, திருவாசகம் எங்கே இருக்கிறது. எப்படி? யோசித்துக்கொண்டிருக்கும்போது “சிறு பொன்மணி” யை ஞாபகப்படுத்தியபடியே வருகிறது கோத்தும்பி. பவதாரிணி குரல் சொல்லுகிறது.

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே!

அட! இது எப்படி?


மயில் போல பொண்ணு வந்து என்வீட்டு யன்னல் எட்டி ஏன் பார்க்கிறே எங்கிறது. இது தானோ சங்கமம்? காதல் கவிதை என்று இளையராஜா படம். அதிலே ஒரு பாடல். அர்த்தம் கூட கொஞ்சம் கோத்தும்பி பாணியிலேயே இருக்கும்.


இறை அனுபவம் எமக்குள் இருப்பது. அதை அடைய இறைவன் தேவையில்லை. இளையராஜா இசையே போதும். இங்கிவனை நாம் அடைய என்ன தவம் செய்துவிட்டோம்?

நானார் என்உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்?

 

&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

கடவுள் கொல்லைப்புறத்து காதலி.

Comments

 1. JK,

  Sorry to post this request under this article . I did not know other way to contact . I am a silent reader of your blog but boasts about it to many friends .As I was speaking with my friend about you and your knowledge in tamil , she asked if you could write a venba about her little girl ? Can you please email me if you think you can honour this request ? I have certain understanding about venba and made some attempts , your venba could be a great one to read and teach me things too. - Maya

  ReplyDelete
  Replies
  1. நன்றி. வெண்பா படிக்க நளவெண்பாவே போதும் நண்பரே .. புகழேந்தி பின்னியிருப்பார்.

   Delete
 2. நமக்குள் இருக்கும் அனுபவத்தை தொடுவதுதான் தன்னுடைய இசை என்று இராஜா கூறியதை இரு வெவ்வேறு பேட்டிகளில் கேட்டுயிருக்கிறேன். பலர் இதை செய்திருந்தாலும் பெரும்பாலான தமிழ்மக்களின் மனதில் இராஜா இன்றும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன். பலர் செய்திருக்கிறார்கள். ஏ எம் ராஜா, கேவி மகாதேவன், எம்எஸ்வி .. பின்னர் ரகுமான், வித்யாசாகர், தேவா .. எல்லோருமே ஏதோ ஒருவகையில் அந்த அனுபவத்தை கொடுத்து தொட்டிருக்கிறார்கள். எல்லோருமே எமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷங்கள்.

   Delete
 3. இசையால் வசமாகா இதயம் உண்டோ?? சிலபேர் இருக்கத்தான் செய்கின்றார்கள் :(.. பாவம்
  முடிந்தால் எனக்காக இன்றிரவு படுக்கும் முன் ' கீரவாணி.. இரவிலே' by S.P.B & S.J கேட்டுப்பாருங்கள்.

  Uthayan.

  ReplyDelete
  Replies
  1. நீ பார்த்ததால் தானடி
   சூடானது மார்கழி..

   அந்த "தானடி" எஸ்பிபியை எவன் மறப்பான்? :)

   Delete
 4. ஆஹா என்னே இரசனை!! ராஜாவின் இசையோடு உங்கள் இரசனைக்கும் இப்போ நான் அடிமை :)

  ReplyDelete
 5. மணிவாசகனின் வரிகள் மெய்சிலிர்க்கும் சிம்பொனி இசையுடன் இணைகிறபொழுது உன்னதமான அனுபவம். இதை முதன் முதலில் கேட்டதிலிருந்து இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன், கேட்டுக்கொண்டே இருப்பேன். எமக்கு கிடைத்த செல்வம் இசைஞானி எமக்கு தந்த இன்னுமொரு செல்வம் இது. காதலாகி கசிந்து கண்ணீர் மல்க கடவுளை நம்பவேண்டிய தேவை இல்லை, அது காதலியோடு கூட நிகழும். திருவாசகம் அங்கும் அழகாய் பொருந்தும். அள்ளி எடுத்து பிள்ளையை கொஞ்சும்போதும் பிடித்த பத்து புரியும். உயிரை உருக செய்யும் இசை சொந்த மண்ணில்தான் தோன்ற வேண்டுமென்றில்லை. மேலைத்தேய இசைகள் தமிழுக்கு வருவது புதிதல்ல, ஆனால் அவை இசைஞானியின் வழியாக வரும்போது இதயத்தை தொடும் இசையாக இணைகிறது. தென்னாடுடைய சிவனை எந்நாட்டவரும் உணரும் வகை செய்த இசை இது. திருவாசகத்தை நீங்கள் கேட்டு இரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்ததில் எனக்கும் மிக மகிழ்ச்சி. எப்பிடிடா இது இன்னும் தாக்காம இருக்கு என்று கனகாலமாவே ஒரு கவலை. சில இசை வெளிவந்த உடனே எனக்கு புரிவதில்லை. நேரம் காலம் சந்தர்ப்ப சூழ்நிலை தேவையாய் இருக்கு. இவ்வளவு காலமா இந்த இசை எனக்கு போட்டு தாக்குற அளவுக்கு விளங்க இல்ல. இப்ப போட்டு தாக்குது. அந்த குரல், மெட்டு, கொம்பசிஷன் எல்லாத்தையும் இணைக்கும் ஒரு தெய்வீகம் .. அது இது தான்.

   Delete
 6. ரசனையையும் ரசிக்க வைக்கும் கலை

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete

Post a comment

Contact form