கோச்சடையான் - முன்னோட்டம்

Mar 10, 2014 14 comments

1965404_294288417393023_1195062645_o
டொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல். 
ஐஸ் ஏஜ் படத்தில் எல்லிக்கும் மானிக்கும் இடையிலான ஒரு கியூட் காதல். எல்லி பொசமுகளோடு வளர்ந்ததால் தன்னையும் பொசம் என்று எண்ணி மரங்களில் எல்லாம் அந்த யானை உடம்போடு ஏறிக்குதிக்கும். ஒருநாள் அதனை தற்செயலாக கண்ட மானி, எல்லியைப் பார்த்து “ஐயோ நீ பொசம் அல்ல, என்னைப்போல மம்மோத்” என்று சொல்லும். “எப்படிச்சொல்கிறாய்” என்று எல்லி திருப்பிக்கேட்கும். “நீயும் என்னைப்போல தானே இருக்கிறாய்” என்று இருவரின் நிழலையும் மானி காட்டும். “அட” என்று ஆச்சரியமாக பார்த்த எல்லி “அப்படி என்றால் நீயும் ஒரு பொசம் தான்” என்று மானியை பார்த்து சொல்லிவிட்டு போகும். அப்போது மொத்த அரங்கமுமே கொல்லென்று சிரிக்கும்.  கியூட்.

20120610194008!Ellie_and_Manny

ஹப்பி பீஃட் படத்தில் அந்த பெங்குவின் திரும்பிவரும்போது நாங்களும் பெங்குவின் கூட்டத்துள் ஒருவராய் இருந்து ஆட்டம் போடுவோம். உருண்டு பிரள்வோம். ஏதோ காணாமல் போன குழந்தை திரும்பிக் கிடைத்தால் அடையும் தாயின் சந்தோசம். நமக்கும் வரும். பனிமலையில் பெங்குவின்களோடு சர்க்கஸ் எல்லாம் விளையாடுவோம்.

இந்த படங்களின் அத்தனை பாத்திரங்களிலும் ஒருவித நளினம் இருக்கும். முக்கியமாக கண்கள். கண்களின் மூலம் தான் அந்தப் பாத்திரங்களுக்கு ஜீவன் கொடுக்கலாம்.  கண்கள் மட்டும் கதை பேசாவிட்டால் கதை கம்மாஸ். மற்றும்படி அனிமேஷன் படங்களை வெறும் கார்ட்டூன், சின்னபிள்ளை விளையாட்டு என்று பீலா விடுபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் இளையராஜாவிடம் ஏ ஆர் ரகுமானையும், பெடரரிடம் நடாலையும் எதிர்பார்ப்பவர்கள். விட்டுவிடுவோம்.

அனிமேஷன் படங்களின் ஜீவன் அதன் தொழில்நுட்பம் கிடையாது. திரைக்கதை தான். அந்த திரைக்கதைக்கு அனிமேஷனை பயன்படுத்துகிறோம். அவ்வளவே. டோய் ஸ்டோரியை தலைகீழாக நின்றாலும் நிஜத்தில் எடுக்கமுடியாது. ஐஸ் ஏஜ் சான்ஸே இல்லை. அவதாரில் கூட மோஷன் கப்ஷர் நுட்பம் பண்டோரா மக்களுக்கே பயன்பட்டது. அந்த கதைகளுக்கு அனிமேஷன் தேவை. செய்தார்கள். அவ்வளவே. முதலில் திரைக்கதையை முடிவு பண்ணிவிட்டே அனிமேஷனை செய்யவேண்டும்.

1277436_241456412676224_792058086_o
முற்று முழுதாக அனிமேஷன் படம் எடுப்பது என்று முடிவு செய்தாலும் கூட அடுத்தநாளே கணனிக்கு முன்னால் உட்காரமுடியாது. முதலில் திரைக்கதையை தான் டிசைன் பண்ணவேண்டும். இன்ச் இன்ச்சாக செதுக்கவேண்டும். அதற்கு அசாத்திய திறமை வேண்டும். நிறைய ஓவியர்கள், டிசைனர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூடவேண்டும். பிக்ஸார் நிறுவனத்தின் வரலாறு என்னெவென்று படித்தால் அது புரியும். மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். டிசைனர்கள் ஏறக்குறைய பைத்தியமாவார்கள். பாத்திரங்கள் எப்படி நடக்கவேண்டும், எந்தக்கை எப்படி மூவ் பண்ணவேண்டும். பண்ணும்போது உடை எப்படி அசையவேண்டும்? முகத்தசைகள் எப்படி சுருங்கவேண்டும். புன்னகை சைஸ் என்ன? எல்லாமே. இந்த அட்டென்ஷன் டு டீடைலிங் இல்லாமல் படம் எடுத்ததால், சின்னவயதில் நாங்கள் ஆர்மி செட் விளையாடின கதையாகிவிடும். ஞாபகம் இருக்கிறதா? ஒரு பக்கத்தில் இருபது ஆர்மி பொம்மைகள். ரெண்டு செயின் புளொக். மண்ணுக்குள் அடுக்கிவிட்டு நாங்களே கைகளால் மூவ்பண்ணி அடிபடுவோம்.

rajnikanth
இப்போது நம்ம தலைவரின் படம். கோச்சடையான். ட்ரைலர் பார்த்தேன். வழமையாக படங்களில் தலைவர் பேசினால் ஒருகண் மேலே எகிறி மறுகண் கீழே பதிந்து, குறுகி, அது தனி பாத்திரமாகும். ஆனால் ட்ரைலரில் கோச்சடையானின் கண்கள் என் அக்காவின் மகளுடைய ஐந்து டொலர் பாப்பிள்ளையின் கண்கள் போல இருக்கிறது. முதல் ஏமாற்றம். மூவ்மெண்டுகள் மகா மட்டம். Very uneven. அசைவே இல்லாத நிலையான முகச்சுருக்கங்கள், உயிரில்லாத பாத்திரங்கள். நம்மால் ஒன்ற முடியவில்லை. நாயகனும் நாயகியும் அணைக்கும்போது ஸ்பார்க்கே இல்லை. இதைவிட சிறந்த கார்ட்டூன் அனிமேஷன்கள் சுப்பர்மார்க்கட் பேர்த்டே கார்டில் கிடைக்கிறது. இரண்டே இரண்டு டொலர் தான். திறந்தால் உள்ளே சின்ட்ரெல்லா கண் சிமிட்டும்.

இவற்றையும் புறக்கணித்து படத்தோடு ஒன்றுவதற்கு ஒரேயொரு ஆயுதம் தான் இப்போது மிஞ்சி இருக்கிறது. அது அகோர வேகத்தில் ஆச்சரியங்களை அள்ளித்தெளிக்கக்கூடிய கற்பனையும் திரைக்கதையும். கற்பனை என்று நான் சொல்வது, அவதாரின் மிதக்கும் மலைகள். அல்லது இளையபல்லவர் தண்ணீர் பானைக்குள் ஒளிந்து சென்றது போன்றதான கடல்புறா வகை திரில்லர்கள். இதை சவுந்தர்யா செய்வார் என்பதை நம்புவதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. அனுபவமே இல்லாமல் இவ்வளவு பெரியபடத்தை, ஆளுமைகளை வைத்து முதற்படம் எடுப்பது இரட்சகன் பிரவீன்காந்தியையும் நினைவுபடுத்துகிறது. சௌந்தர்யா எப்போது நாகேஷ் பாத்திரத்தை நுழைத்தாரோ அப்போதே அவர் திரைக்கதை ஊசலாட ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். எம்ஜிஆரையும் தியாகராஜ பாகவதரையும் போடுங்க மேடம். அப்பிடியே “மன்மதலீலையை வென்றார் உண்டோ” என்று அம்புவிடுங்கள்.

சௌந்தர்யா கொச்சடையான் இசைவெளியீட்டு விழாவில் திருவாய் மொழி ஒன்று அருளினார்.
237776_Soundarya-Rajinikanth-Wallpapers-Wide-Tamil-Actors-Actresses_1280x800

“இந்த பட ரிலீசுக்கு பிறகு அப்பா விருப்பப்படியே குழந்தை பெற்றுக்கொள்வேன்.”சுத்தம்.

கோச்சடையானை அவதாரோடு ஒப்பிடாதீர்கள். ஹாலிவுட்டோடு ஒப்பிடாதீர்கள் என்று கூக்குரலிட முடியாது. ரசிகனுக்கு தேவை நல்ல படம். அவனுக்கு சௌந்தரியாவின் வெற்றியோ, தமிழ் சினிமாவின் எதிர்காலமோ தேவையில்லை. பத்து டொலர் செலவில் நானும் பிளேன்டர் சொப்ட்வேரில் ஒரு மொக்கை கேமை டெவலப் பண்ணிவிட்டு, தமிழில் வெளிவந்த முதல் கேம், நீங்கள் எல்லாம் ஆதரிக்கவேண்டும் என்றால் ஆதரிப்பீர்களா? காறித்துப்ப மாட்டீர்கள்? ஒரு படத்தை ஊக்குவிக்கவேண்டும் என்று ஒரு ரசிகன் படம் பார்ப்பானானால் அவன் இன்றைக்கு பிபிஸி டொக்கியூமெண்டரிகளை தான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். ஆக, இந்த ஒப்பிடல் தவிர்க்க முடியாதது. ஒப்பிடாமல் அவன் பார்க்கவேண்டுமானால், ஒருவித ஒதேண்டிக் திரைக்கதையை இந்தப்படம் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு விஜய் டிவியின் மகாபாரதம். மொக்கை அனிமேஷன் தான். திரௌபதியை பார்க்க கடுப்பாக இருக்கிறது தான். ஆனால் கதையின் சிக்கல்களும் பாத்திரப்படைப்புகளும் அனிமேஷன் குளறுபடிகளை புறம் தள்ளுகின்றன. கோச்சடையானில் அது இல்லை எண்டு சொல்லேல்ல. இருந்தா நல்ல இருக்குமெண்டே சொல்லுறன்!

ரஜனி யார் என்று அவர் மகளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ரஜனியிடம் நாங்கள் என்ன ரசிக்கிறோம் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. பிரமாண்டமே இல்லாத படம் தான் அருணாச்சலம். செம மொக்கைப்படம். ஆனால் நாங்கள் இப்போதும் சண் டிவியில் போனால் பார்ப்போம். “மாங்குயில் கூவுது, மாமரம் பூக்குது, மேகம் வந்து தாலாட்ட” என்று தலைவர் ஒயிலாக நடக்கும்போது பக்கத்தில் ரோஜா ஐந்து இஞ்சியில் ஜட்டி மாதிரி ஒன்று போட்டிருப்பதை எந்த ரசிகனும் கவனிப்பதில்லை. எமக்கு திரையில் தேவை, ரஜனி .. ரஜனி .. ரஜனி.

கோச்சடையான் தோல்வி அடைவதில் இரண்டு சந்தோஷங்கள் இருக்கின்றன.

cheenikumமுதல் சந்தோசம். இந்த தோல்வி உண்மையில் தோல்வியல்ல. அது வெற்றியே. தலைவர் ஒரு குதிரை. கோச்சடையான் தோல்விக்கு ரஜனியின் தற்போதைய நோயையும் அயர்ச்சியையும் வெல்லும் சக்தி இருக்கிறது. சும்மா டக்கென்று எழுந்து அடுத்த படத்தை தருவார். அதற்கு ரவிக்குமார் தயாராக இருக்கட்டும். உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சீனிகம். சிம்பிளாக, ஒரு குடுமியை வைத்துக்கொண்டு, அனுஷ்காவை ஹீரோயினாக போட்டுவிட்டு ஒரு படத்தை எடுத்தால், யோசித்துப்பாருங்கள். இசை இளையாராஜா. ஜானே துனா .. ஜானே ஜானே துனா பாட்டுக்கு லண்டன் மெது மழையில், சாலையோரமாக இருவரும் ஸ்டைலாக நடந்து போகும் காட்சி. எவ்வளவு கியூட்டாக இருக்கும்? எங்களுக்கு அந்த ரொமாண்டிக் ரஜனி வேண்டும்.

இரண்டாவது சந்தோஷம்.… சௌந்தர்யா குழந்தை பெற்றுக்கொள்வார்.

1896728_370918203048207_1184402200_n

Comments

 1. எனது கருத்தும் இதுவே தான். ரஜினியிடம் ரசிகனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது என்று ஷங்கர் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை (சிவாஜியில் அந்த tea கடை சீன் வைத்ததால் தப்பித்தார். எந்திரனில் புகுந்து விளையாடி இருக்கலாம். அவர் CGI இல் புகுந்து விளையாடவே அதிக நேரம் செலவிட்டார். ஆயிரம் மணி நேர CGI செய்ய முடியாததை ரஜினி தன் வசனத்தால் செய்ய முடியும் என்று ஷங்கருக்கே நம்பிக்கை இல்லை போலும்). கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா போன்றோர் தான் சரி. ரஜினியை ஒரு சாமானியனாக ரசிக்கத் தெரிந்த இயக்குனர்கள் இவர்கள். ஷங்கர் ரஜினி ரசிகனாக இருந்தாலும் தனது அறிவு ஜீவித்தனத்தையும் கொஞ்சம் காட்டவே படம் எடுப்பார். அது சரியாக வருவதில்லை ரஜினியிடம்.
  சௌந்தர்யா சொன்ன குழந்தை பெறும் விஷயத்துக்கு thatstamil.com இல் ஒரு adults only comment இருக்கிறது. ரசித்தேன் :) அஷ்வின் பாவம் :)

  ReplyDelete
  Replies
  1. அதே அதே .. ரவிக்குமார் தான் சரி .. அல்லது புது இயக்குனர்களில் ஹரி போன்றவர்களோடு கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். அவ்வளவே.

   அந்த கொமெண்ட் பார்த்தேன் ... ROFL.

   Delete
 2. இங்கேயும் சேம் பீலிங்..... உயிரோட்டமற்ற கதாபாத்திரங்கள்......

  ReplyDelete
 3. I'm 100% with you JK & 200% with 4th para.
  BTW hats off to ARR & Vairamuthu - great musical album.
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. Yes .. ARR and Vairamuththu as usual rocked.

   Delete
 4. உங்கள் எழுத்து நடையில் சுஜாதாவின் ஆதிக்கம் தெரிகிறது. நீங்கள் அவரின் வாசகராக இருப்பீர்கள் என்று நம்புகி
  றேன்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
  2. மறுபடியும் மொதல்லேந்தா??

   Delete
  3. மீண்டும் ஜீனோ ... :)

   Delete
 5. உங்கள் எழுத்து நடையில் சுஜாதாவின் ஆதிக்கம் தெரிகிறது. நீங்கள் அவரின் ரசிகனாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்..

  ReplyDelete
 6. தகுதி இல்லாதவர்கள் செய்யும் வேலை தகுதியோடு இருப்பதில்லை

  ReplyDelete
 7. நச்.
  இதை இதைத் தான் கோச்சடையான் பற்றி முதல் தகவல் வந்ததில் கூவுகிறோம்.

  Ice age, Happy Feet, Toy story இவையெல்லாம் கார்டூன் கேலிக் கூத்துக்கள் என்று புறந்தள்ள முடியாதவாறு மனதோடு ஒட்டிக்கொண்ட நீங்கள் சொன்ன மாதிரியான கியூட் குட்டிக் காவியங்கள்.

  இப்போது சௌந்தர்யா எடுப்பது தான் கோமாளிக் கூத்து. ;)

  ReplyDelete
  Replies
  1. அதே அதே .. இவவிண்ட கோமாளிக் கூத்துக்கு ரஜனியும் ரகுமானும் ஈடுபட்டு இப்ப இஞ்சி திண்ட குரங்கு போக நிக்கிறினம். ரகுமான் எப்படியும் தப்பீடுவார். இசை கலக்குது. ரஜனி தான பாவம்.

   Delete

Post a comment

Contact form