Skip to main content

பிடித்ததும் பிடிக்காததும் : 2015

 

0f124ad1b329af92baaf8182fd698f45

 

புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம் ஒன்று அகப்பட்டது.

“பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை”

எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய பேறுதான் என்ன? பெய்தொழிதலே. பெய்தொழிந்து, மண் சென்று, அது நீங்கி, மீண்டும் முகிலாகிப் பெய்தொழிந்து என்ற சங்கிலியில் முகிலுக்கு என்றைக்கும் மோட்சமில்லை. பெய்தொழிந்தாலும் அதற்கு மீட்பில்லை. அப்படியானால் முகிலிடம் எதற்கு இத்தனை அவதி?

எழுத்தும் வாசிப்பும் எப்போதுமே தூங்குகின்ற எரிமலைபோல. அடிவயிற்றில் ஒரு அந்தளிப்பு எப்போதுமே இருக்கும். எழுத்தைக்கூட விட்டுத்தள்ளலாம். ஆனால் இந்த வாசிப்புக் கொண்டுவரும் அந்தளிப்பு தாங்க முடியாதது. பொக்ஸ் கதைப்புத்தகத்திலே அந்தப் பாலியல் விடுதி பற்றி வருகின்ற இடத்திலே எரிமலை குமுறும். யாமத்தில் பண்டாரத்தொடு நாயின் பின்னே நாமும் செல்லும்போது கடைசிநேரத்தில் அந்த நாய் செய்கின்ற “நாய் வேலை”க்கு அதனை அடித்துக்கொன்றால் என்னவென்றிருக்கும். இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் சைமன் சிங்கின் “Big Bang” புத்தகம் கொடுக்கின்ற அந்தளிப்பு அளவிலாதது. வெள்ளையானையில் தொங்கி இந்திரலோகம் சென்ற கதையாய், ஒரு புத்தகத்தைப்பிடித்துக்கொண்டு பிரபஞ்சம் முழுதும் காலத்தாலும் தூரத்தாலும் சுற்றுகின்ற உணர்வு. பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் இயக்கமும் கொடுக்கின்ற பிரமிப்பு நம்மை ஒன்றுமே இல்லாதவராக்குகிறது. பிரபஞ்ச இயக்கத்தில் நாங்கள் எதுவுமேயில்லை. நத்திங். பல தற்செயல்கள் சேர்ந்து உருவாக்கிய தற்செயல். கடவுள் இருப்பாரேயானால் அதுகூட ஒரு தற்செயலே என்கிறது பிரபஞ்சம். சற்றுமுன் வைத்த முற்றுப்புள்ளிபோல. சொல்லாதவரைக்கும் அதனை யாரறிவார்?

வேறு ஒன்றுமே வேண்டாம். வழமைபோலவே இந்த வருடமும் செய்வதை எல்லாம் ரசிச்சு ரசிச்சுச் செய்யவேணும். முடியுமானால் ரசிக்கிறமாதிரியும்  செய்யவேணும்.

சென்ற வருட “பிடித்ததும் பிடிக்காததும்” கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன்.

எழுத்தில் இந்த வருடம் ஒரு நாவல் ஆரம்பிக்கவேண்டும். ஒன்று சமகால பொலிடிக்கல் திரில்லர். அல்லது ஒருவித வரலாற்று நகைச்சுவை. தீர்மானிக்கவில்லை. சென்ற வருடம் ஆரம்பித்த தீண்டாய் தீண்டாய் தொடர் இரண்டோ, மூன்று அத்தியாயங்களுடன் தேங்கிவிட்டது. இந்த வருடம் ஒரு ஐந்தேனும் எழுதவேண்டும். மற்றும்படி புது வடிவங்களில் நிறைய ட்ரை பண்ணலாம். கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு படம் வரைந்த ஜனகனோடு ஒரு கொமிக்ஸ் தொடர் செய்யலாமா என்றும் ஐடியா இருக்கிறது. பார்ப்போம்.

இதிலே “மற்றும்படி புது வடிவங்களில் ட்ரை பண்ணலாம்” என்பதைவிட வேறு எதுவும் நிகழவில்லை. Writing happens. இதிலே திட்டமிட்டு எதுவுமே செய்யமுடியாது என்பது இப்போது புரிகிறது. வெள்ளியும் அமுதவாயனும் தற்செயல்களே. “கனகாலமா உங்கட ஸடைலில ஒரு பம்பல் கதை எழுதேல்ல. ஒண்டு எழுதுங்கோ” என்று தற்செயலாக போகிறபோக்கில் மனைவி அடித்த கொமெண்ட்தான் “சந்திரனைத் தொட்ட சுந்தரி”யை எழுதச்செய்தது.

இவ்வருடமும் வெள்ளி, அமுதவாயன், ஊரோச்சம் போன்ற அற்புத கணங்களுக்காகக் காத்திருக்கிறேன்.


இனி பிடித்ததும் பிடிக்காததும் 2015!

சந்தோசம் - யாழ்ப்பாணத்தில் கொல்லைப்புறத்துக் காதலிகள்

முக்கிய அரசியல் சம்பவம் - ஸ்ரீலங்காவின் ஆட்சி மாற்றம்

துன்பியல் நிகழ்வு - கம்பவாரிதி ஐயாவுடனான கடிதப்போக்குவரத்தோடு ஒட்டிய சர்ச்சையும் கவனக் கலைப்பான்களும்.

விஞ்ஞான முன்னேற்றங்கள் - 3D பிரிண்டிங்கின் வளர்ச்சி

பிடித்த விளையாட்டு வீரர் - கேன் வில்லியம்சன்

சந்தித்ததில் ஆச்சரியப்படுத்திய மனிதர் – சோ. பத்மநாதன்

பிடித்த வசனம் : “ஆகவே அருச்சுனா கொலை புரிக!” – ஜெயமோகன்

பிடித்த கணம் : நல்லூர் மஞ்சத்திருவிழா அன்று தேரடியில் அமர்ந்திருந்து எழுதியது.

2015ல் வாசித்த புத்தகங்கள் (வரிசையில்லாமல்)

  1. பொக்ஸ் கதைப்புத்தகம்  - ஷோபா சக்தி
  2. பாரதியின் வேதமுகம் – சு. கோதண்டராமன்
  3. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
  4. கால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிருஷ்ணன்
  5. குறுந்தொகை தொகுப்புகள்
  6. உலோகம் – ஜெயமோகன்
  7. முதற்கனல் – ஜெயமோகன் (வாசிப்பில்)
  8. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - பாகம் மூன்று – சுஜாதா
  9. நிலா நிழல் - சுஜாதா
  10. கீதையடி நீ எனக்கு – ஆ. சி. கந்தராஜா
  11. ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத் தொகுப்பு
  12. நினைவுச் சுவடுகள் – சோ. பத்மநாதன்
  13. சுவடெச்சம் – சோ. பத்மநாதன்
  14. பிக்கு சொன்ன கதைகள் – சோ. பத்மநாதன்
  15. காளிங்கராயன் காவியம் – வேல்சாமி
  16. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீ பிரசாந்தன்
  17. Eric – Terry Prachchet
  18. Greek Classical Mythology
  19. Notes From Underground – Dostoyevski
  20. Malini – Robert Hillman
  21. The Longitude – Dava Sobel
  22. Fermat’s Last Theorem – Simon Singh
  23. Big Bang – Simon Singh (வாசிப்பில்)

பிடித்த புத்தகம் (தமிழ்) : யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்

பிடித்த புத்தகம் (ஆங்கிலம்) : Fermat’s Last Theorem – Simon Sing

பிடிக்காத புத்தகம் (தமிழ்) : ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத் தொகுப்பு

பிடிக்காத புத்தகம் (ஆங்கிலம்) : Malini

வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களில் மூடி வைத்தவை : என் எழுத்தாயுதம்(வித்தியாதரன்), ஆயுத எழுத்து(சாத்திரி), வன்னி (கதிர் பாலசுந்தரம்)

வாசித்ததில் பிடித்த கட்டுரை : கொலை புரிக (ஜெயமோகன்)

வாசித்ததில் பிடித்த கவிதை :

“நீங்கள் தேடிக்கொண்டிருப்பவர்
யாராக இருந்தாலும்
அது நானல்ல”

- பிரம்மராஜன் (மொழி பெயர்ப்பு)

எழுதியவற்றுள் பிடித்தது : வெள்ளி

எழுதியவற்றுள் பிடிக்காதது : நானாகிய நீ (What have I done?)

பார்த்த திரைப்படங்கள் : உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம், பாகுபலி, தனி ஒருவன், Martian, ஓகே கண்மணி

பிடித்த படம் : பாபநாசம்

பிடித்த இசை : ஒகே கண்மணி

பிடித்தபாடல்/பிடித்த பாடகி - நானே வருகிறேன்/சாஷா திருப்பதி

பிடித்த பாடகர் – கார்த்திக் (பறந்து செல்லவா)

 

படலையில் இந்த வருடம்

குறு நாவல்கள்/தொடர்கள்

வெள்ளி

அமுதவாயன்

ஊரோச்சம்

தீண்டாய் மெய் தீண்டாய்

 

சிறு கதைகள்

சந்திரனுக்குப் போன சுந்தரி

வீராவின் விதி

தீராக் காதலன்

 

வாசிப்பனுபவங்கள்

வேலியே பயிரை மேய்ந்த கதை

கறுத்தக் கொழும்பான்

உனையே மையல் கொண்டு

நெடுங்குருதி

Jaffna Boy

 

கவிதை

நானாகிய நீ

முதற் துளி

பீரை நினைச்சு மோரை அடிச்சும்

வரலாறு என்கின்ற பசப்புக்காரி

என் சொல்லே

 

சினிமா/இசை

அன்புள்ள சுகாசினிக்கு

ஓ காதல் கண்மணி

நாளை காலை நேரில் வருவாளா

தீரா உலா

ஹரிகரன் சித்ரா

காத்திருந்த அற்புதமே

தூங்கா வனம்

எந்திரன் 2

 

கட்டுரைகள்

A message from an ordinary Sri Lankan Tamil

ஏன் எண்ணெய் விலை குறைகிறது

திருட்டு

இலியானாவும் இரண்டு எருமை மாடுகளும்

கம்பவாரிதி ஐயாவுக்கு எழுதிய கடிதமும் அவரின் பதிலும்

தமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்

 

நேர்காணல்கள்

ஆக்காட்டி

உதயன்

 

அற்புதமான 2015ம் ஆண்டுக்கு நன்றிகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

 


பிடித்ததும் பிடிக்காததும்

2014

2013

2012

2011

2010

2009

2008

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக