Skip to main content

Posts

Showing posts with the label நூல் விமர்சனம்

iWoz

அப்பிள் நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்னியாக்கின் சுயசரிதம்.  இங்கே அவுஸ்திரேலிய நூலகம் ஒன்றில் வெட்டியா நேரம் போக்காட்டாலாம் என்று நுழைந்த நேரத்தில் கண்ணில் பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசிக்கவைத்த புத்தகம்.

ஜே ஜே: சில குறிப்புகள்

“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்” அங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார்? அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன். இதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகி...

2 States: Story of My Marriage.

“Island of Blood”, “கோபல்ல கிராமம்”, “Restaurant at the end of universe”, “காட்டாறு” என்று தொடர்ச்சியாக கொஞ்சம் சீரியசான புத்தகங்கள். இம்முறை லைட்டாக தான் வாசிக்கவேண்டும் என்று புத்தக வரிசையை நோட்டம் விட்டபோது தலைவரின் “விடிவதற்குள் வா” அகப்பட்டது. திறந்து இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு .. ப்ச் .. இன்னும் லைட்டாக வேண்டும் என்னும்போது வீணா அடிக்கடி சொல்லுவது ஞாபகம் வந்தது. “அண்ணே புத்தகம் வாசிக்கிறது மனசுக்கு சந்தோஷத்துக்கு தானே .. பேந்தென்னத்துக்கு டென்ஷன் தாற புத்தகங்களை வாசிக்கிறீங்கள்? பேசாம ரமணிச்சந்திரன் வாசியுங்க .. கதை தெரிஞ்சாலும் வாசிக்க நல்லா இருக்கும்” எனக்கு இப்போதைக்கு தேவை ரமணிச்சந்திரன் வகையறா தான் என்று அம்மாவிடம் போய் கேட்க, உனக்கென்ன லூசா? வாசிச்சு ரெண்டு பக்கத்தில தூக்கி எறிஞ்சுடுவ, உனக்கு அது தோதுப்படாது” என்றார். சரி ஆணியே வேண்டாம் என்று மீண்டும் என் கலக்ஷனுக்கு வந்து தேடியபோது மாட்டுப்பட்டது தான் 2 States : Story of My Marriage. சென்ற வருடம் கஜன் டெல்லி போயிருந்தபோது பரிசாக வாங்கிவந்த புத்தகங்களில் ஒன்று. வாசிக்காமல் கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன...

Ladies Coupe

அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!

The White Tiger

The White Tiger”. ஆஸ்திரேலியாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த அரவிந்த் ஆதிகா எழுதிய நாவல். இந்தியாவுக்கு விஜயம் செய்யும் சீன அதிபருக்கு, பெங்களூரில் ஒரு சின்ன கோர்ப்பரேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பனி நடத்தும் அசோக் சர்மா aka பலராம் எழுதும் கடிதம் தான் நாவல். அது சும்மா உத்திக்காக. கதை என்னவோ வழமையான சேட்டன் பகத் வகை கதை தான். போதிகாயாவுக்கு அருகே உள்ள குக்கிராமத்தில், இனிப்புகள் செய்யும் கீழ் சாதி(?)யில் பிறக்கும் ஒருவன், எப்படி ட்ரைவராகி, ஒரு கட்டத்தில் தன் முதலாளியையே கொன்றுவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து பிசினஸ் செய்வது தான் லைன். இப்படி வளருவதற்கு என்னென்ன தகிடுத்தனங்கள் செய்யவேண்டியிருக்கிறது, எந்த வித தார்மீக நெறிகளும் இருக்கக்கூடாது என்று சொல்லும் பத்தோடு பதினொன்று வகை நாவல். டிரைவர்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு டீடைலாக சொல்லியிருக்கும் நாவல். கொஞ்சம் மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்தால் இது தான் விகாஸ் சோப்ரா எழுதிய Q&A நாவலின் கதையும் கூட. சேட்டன் பகத்தின் “Revolution 2020” கதையும் இது தான். அயர்ச்சி! கீ.ரா, சுஜாதா, புதுமைப்பித்தன் போன்றோர் ஆங்கிலத்தில் எழுதாததால்...

ஆறா வடு

“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- திலகன் தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா 3 more stories...When I finished the stories I thought I should have born as an Australian-and live with no knowledge about it at all! -- தன்யா ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? -- சுகிந்தன் அண்ணா ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும்.  -- கேதா அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! – வீணா சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும்? சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்க...

பிரிவோம் சந்திப்போம்

“ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதிமிதாவை திறந்து முகத்தில் மதுமிதாவை இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு, மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவை திறந்து மதுமிதாவை படித்தான்” நம்ம தலைவர் சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இதை வாசிக்காமல் சுஜாதாவை வாசித்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்திலும் தலைவரின் டச் இருக்கும். மதுமிதா மாதிரி ஒரு பெண்ணை காண மாட்டோமா என்று ஏங்க வைக்கும். வெகுளி, what is வெட்கம்? என்று கேட்கும் மது, அப்பா சொன்னார் என்பதற்காகவே ரகுவை காதலிக்கிறாள். அவனை கிஸ் பண்ண சொல்லுகிறாள். அமெரிக்கன் ரிட்டர்ன் ராதா வந்த போது ரகுவுக்கு சங்கு. ரகு தற்கொலை முயற்சி. காப்பாற்றப்பட்டு அமெரிக்கா வர, அங்கே அவன் மதுவை கண்டு, மதுவோடு கண்டு! வரும் சிக்கல். அமெரிக்க இந்தியர் வாழ்க்கை தலைவர் பாணியில் … அப்போது தான் “என்னுடைய”  ரத்னா அறிமுகம்! “நீங்க தானா அது?” ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பத்தி ஏதாவது புரளியா?” என்றான். இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யு இன் திஸ் பார்ட்டி எதுக்கு நமக்கு கல்யாணம் பண்ணி வை...

The Cage

மே மாசம் பதினெட்டு. பிரபாகரனின் சடலம் மீட்கப்படுவதோடு புத்தகம் ஆரம்பிக்கிறது! அந்த சம்பவத்தின் பின்னரான சிங்களவர் தமிழர் உணர்ச்சிகளும், வெளிப்படுத்திய முறையும் தொடர, அடுத்த சாப்டரில், விஷயம் இலங்கை வரலாறுக்கு தாவுகிறது. முதல் முதலில் தமிழர்களும், சிங்களவர்களும் எனக்கு சொல்லிவைத்திருந்த வரலாற்றை ஒரு வெள்ளைக்காரன் வேறு தளத்தில் மூலாதாரங்களுடன் எழுத, வரலாறுகளில் நம்பிக்கை இழக்கிறேன்! ரோமில் எரியும் போது பிடில் பிடித்தவன் யார் என்ற உண்மை! அப்புறமாய் தீயை அணைத்தவன் எழுதும் வரலாற்றில் தங்கியிருக்கிறது!. சோழ சாம்ராஜ்யத்தில் பாலும் தேனும் ஓடியதா அல்லது குருதியும் குரோதமுமா? என்பது நீங்கள் தமிழனா கலிங்கனா என்பதில் தங்கியிருக்கிறது. கலிங்கன் அடுத்த தலைமுறைக்கு தங்கினானா என்பதிலும் தங்கியிருக்கிறது! அஜீத்தன் எழுதியது போல, history always written by winners. நம்ம சங்க இலக்கியத்தையும் கம்பனையும் ஏன் காந்தியையும் கூட ஒரு வித பதட்டத்துடன் பார்க்கும் தருணம்! Gordon Weiss இன்னொரு வெள்ளைக்கார லசந்த விக்கிரமசிங்க, சிவராம், ரஜனி திரணகம .. You name it! வாசித்த ஒவ்வொரு சிங்களவனும் தமிழனும் தன்னை...

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends ...

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர...

The Namesake

நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது. “The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.” உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே! என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். ச...

Revolution 2020

Chetan Bhagat இன் சமீபத்திய புத்தகம் தான் இது. யார் Chetan Bhagat? “Five Point Someone”, “Two States”, “One night @call centre”, “Three Mistakes of my Life” எல்லாம் எழுதியவர். முதலாவதை தான் த்ரீ இடியட்ஸ் என்று சொல்லி குற்றுயிரும் குலையுயிருமாய் எடுத்தார்கள். அதுவே அவ்வளவு நன்றாக இருந்தது என்பது வேறு விஷயம். இதுவும் கல்வித்துறை சம்பந்தமானது. Chetan இன் எல்லா நூல்களிலும் ஒரு பாணி இருக்கும். யாராவது ஒருவர் chetan க்கு கதை சொல்வது போலவே ஆரம்பித்து முடிப்பார். இதுவும் அப்படியே. அவரின் மற்றைய கதைகள் போலவே, கொஞ்சம் வீக்கான மெயின் காரக்டர்.  Urban பெண் ஒருத்தி, ஒரு வெங்கலாந்தியாக இருப்பாள்! “The girl thing” என்று குறிப்பிடுவார்கள் இல்லையா? அதே! எப்படியும் கதையின் தேர்ட் குவார்டரில் அவளுக்கும் அவனுக்கும் செக்ஸ் நடக்கும். ஹீரோக்கு கில்ட்டி வரும், Dramatic turn around இறுதியில் வரும். One night at call centre இல் கடவுள் கூட வருவார்!! அப்புறம் சுபம்! ஆனாலும் chetan வாசிக்க வைப்பார். வேகமான எழுத்து நடை. சொல்லவந்த விஷயத்தின் contextual facts தான் கதையின் நாதம். ஆனாலும் அவசரமாக மெட்ரோ...

கரிசல் காட்டு கடுதாசி

கி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா! நாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார், “அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்” Are you getting it? .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா? இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா! என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்? நேற்று மீண்டும் “ பதுங்குக...

Mort

Mort ஒரு நோஞ்சான் இளைஞன். இவன் வீட்டிலும் வேலை செய்கிறான் இல்லை என்று அப்பா ஒருநாள் சந்தைக்கு கூட்டி சென்று யாருக்காவது கூலி வேலைக்கு கொடுக்கலாம் என்று நிறுத்திவைக்க, அவன் உருவத்தை பார்த்தே எல்லோரும் விலகிபோகிறார்கள். இருட்டிய பிறகு ஒருவர் வருகிறார். அவனை வேலைக்கு எடுக்கிறார். யார் அவர்?

The Spirit Of Music

1992ம் ஆண்டு, ஒருநாள் எங்கள் நண்பி யசோ அக்கா வேக வேகமாக வீட்டுக்குள் நுழைந்தார். ஒருவித படபடப்பும் பரவசமும் அவர் முகத்தில்,  என்ன என்று எல்லோரும் பார்த்தோம். ரோஜாவின் இசை இப்போது தான் கேட்டேன். ஆச்சரியம் தாங்க முடியவில்லை, சொல்லுவதற்கு வந்தேன் என்று தன்னுடைய walkman ஐ எடுத்து headphone ஐ ஒவ்வொருவர் காதுகளிலும் மாறி மாறி மாட்டினார். பரவசம் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றத் தொடங்கியது. சின்ன சின்ன ஆசையின் சின்ன சின்ன சத்தங்கள் என்னென்னவோ செய்தது. இறுதிப்பல்லவியில் வரும் ஒவ்வொரு இறுதி note இலும் ஒவ்வொரு ஜாலம் காட்டினார். "காதல் ரோஜாவே" காதலிக்கச்சொல்ல,  புதுவெள்ளை மழை யாழ்ப்பாணத்தையே குளிரவைக்க ஒரு மாலை நேரத்தில், ரோஜாவின் மயக்க வைக்கும் பின்னணி இசை A R ரகுமான் பிறந்தாரே! சென்ற ஏப்ரலில் அவருடைய உத்தியோகபூர்வ சுயசரிதை “The Spirit Of Music” வெளிவருகிறது என அறிந்து சிங்கப்பூர் முஸ்தபா கடைக்கு போன் மேல் போன் போட்டும் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனக்கோ இருப்புக்கொள்ளவில்லை. தலைவர் ஒவ்வொரு பாடலையும் எப்படி உருவாக்கினார், அதற்றுக்குப்பின்னால் இருந்த...