அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள் குறுக்கும் நெடுக்குமாக கைகளில் இருந்த டப்லட்டில் எதையெதையோ சுட்டிக்காட்டிப் பேசியபடி உடைகள் பறக்க நடந்து திரிந்தார்கள். கணனித்திரையில் ஏவுதளம் 40Bயிலே "சுண்டர்1" விண்கலம் சிறிய உருவில் தெரிந்தது. “சுண்டர்1” சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லுகின்ற ஏழாவது விண்கலம். நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனிதர் சந்திரனுக்குச் சென்று திரும்பப்போகும் பயணம். மூன்று விண்வெளி வீரர்கள், ஒன்பது பயணிகள் என்று மொத்தமாக பன்னிருவர் ஒரே சமயத்தில் பிரயாணம் செய்யும் முதல் பயணிகள் விண்கலம். அணுச்சக்தியில் இயங்கும் எஞ்சின், உள்ளக ஈர்ப்பு என்று பல நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்கலம். இப்படி சுண்டர்1 விண்கலத்துக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. இன்னமும் மூன்று மணித்தியாலங்களில் "டி மைனஸ்" கவுண்டவுன் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சரி பார்க்கப்பட்டு, வானிலையும