Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்!

அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecstasy மனநிலையை உருவாக்கும் போல, ஒரு கட்டத்தில் நாம் நினைத்தாலும் நிறுத்தமுடியாது. எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் போலத்தோன்றும். பின்னர் ஒரு விதமாக படிந்து அடங்கிவிடும். சும்மா சொல்லப்போனால் இதுவும் ஒருவித orgasm தான். ஜெயகாந்தனுக்கும் அது "இன்னும் ஒரு பெண்ணின் கதை" யில் நிகழ்ந்தது என்று சொல்லலாமா?, சப்ஜெக்டிவ் தான். என்ன சிலர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எப்படி என்று தெரியவில்லை. ஜெயமோகனின் எழுதும் ரேட் என்னை ஆச்சரியப்படுத்தும். அதிலும் ஒரு perfection இருக்கிறது இல்லையா? சொல்லும் கருத்தை விட்டுவிடுங்கள். ஜாக்கி சேகர் எழுதுவது வருடத்துக்கு சராசரி 275 பதிவுகள். எப்படி முடிகிறது? எது உந்துகிறது? எழுதுவதற்கும் வயாக்ரா ஏதும் இருக்கிறதா என்ன? மீண்டும் மீண்டும் அவர்களுக்கு substance கிடைத்துக்கொண்டே இருப்பது மேலும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். தேடல் தான். மற்றவன் அந்தரங்கம் என்றால் குழல் புட்டு தொண்டைக்குள் போவது தெரியாமல் ரசித்

படிச்சதென்ன? பிடிச்சதென்ன?

வலைப்பதிவு ஆரம்பித்தபோது சிறுகதை மட்டும்தானே எழுதப்போகிறாய் என்று பலர் கேட்டனர். ஒரு சிலர் ஈழத்து வாழ்க்கையின் வலிகளை பதிவு செய்யவேண்டும் என்றனர். சிலர் நான் எழுதுவதை சீரியஸ் ஆகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கென்னவோ அவர்கள் தான் முக்கியமானவர்கள் போல படுகிறது. “இவன் இது தான் எழுதுவான்” என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அது தவிர்க்கமுடியாது போலும். Originality will become stereotyped someday. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாரும் எழுத்தில் ஒரு பாணியை தமக்கென உருவாக்க முயல்வதில்லை. But it happens. எல்லோருமே ஒரு கட்டத்தில் தேங்கி விடுவோம். ஓடிக்கொண்டே இருப்பது நதிகளால் கூட முடியாத காரியம். அதிகம் வேண்டாம், அலைகளுக்கு கூட ஒரு வித repetition வந்து விடுகிறது இல்லையா. எனவே இந்த கட்டுப்பாடுகளுக்குள் எதை சொல்ல போகிறோம் என்பது தான் கேள்வியே. இந்த  சிறுகதை போட்டி  அறிவுப்பு வந்திராவிட்டால் மூன்றாவது பதிவிலேயே தேங்கி இருப்பேனோ என்னவோ? நானும் ஒரு துப்பறியும் கதை, அதுவும் யாழ்ப்பாணத்தளத்தில் எழுதுவது என்பதை எல்லாம் சென்றவாரம்  நினைத்துக்கூட

சட்டென நனைந்தது இரத்தம்! (‘சவால் சிறுகதை-2011’)

யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?”  “சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்”  “வரச்சொல்லுங்க”  “நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…”  “எத்தினை வருஷமா இங்க கடை வச்சிருக்கிறீங்க?”  “இருவது வரியமா இங்க தான், வாசாவிளானால இடம்பெயர்ந்து வந்தா பிறகு வச்ச கடை அய்யா, குத்தகைக்கு தான்”  “எப்ப பார்த்தீங்க?”  “சவத்தையா கேட்கிறீங்க? மூண்டு மணி இருக்கும்”  “அந்த நேரம் இங்க என்ன வேலை? வீடு வாசல் இல்லையா?”  “வீடு கொக்குவில்ல, நான் வெள்ளி எண்டா சந்தைல தான் படுப்பன். வெள்ளன கடை திறக்கிறத்த

"சட்டென நனைந்தது இரத்தம்!" - யுடான்ஸ் சிறுகதை போட்டி ...சும்மா Trailer கண்ணு!

என்னடா சென்ற வாரம் முழுதும் நாலு பதிவு போட்டிட்டு இந்த வாரம் ஒண்ணுமே இல்ல, ஆளிட்ட ஸ்டாக் முடிஞ்சுதா என்று சந்தோசப்பட்ட நண்பர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிகொள்ளுறன். நீங்க என்ன தான் என்னை Suppression of the depression of the impression of the railwaystation ஆக்கினாலும் நம்ம டி ஆர் மாதிரி ஒருதலைக்காதல் ரிலீஸ் பண்ணியே தீருவேன் ... So Stay Tuned!! ஓகே கொஞ்சம் சீரியஸ் ஆவோமா(ஆமா இவரு கவுண்டர் ரேஞ்சுல காமெடி பண்ணீட்டாரூ இப்ப சீரியஸ் ஆகிறத்துக்கு எண்டு கமெண்ட் போட நம்ம கீர்த்திராஜ் ரெண்டு நாளுக்கு வர மாட்டாரு. பயபிள்ள அப்பா ஆக போகுதில்ல... வாழ்த்துக்கள் மன்மதகுஞ்சு ! எழுதுவோம் என்று திங்கட்கிழமை ஆரம்பிக்கும் போது தான் உடான்ஸ் குழுமம் நடத்தும் சிறுகதை போட்டி பற்றி நண்பர் ஒருவர் அறியத்தந்தார்.(எவண்டா அவன் என்று confuse ஆக வேண்டாம், அந்த நண்பர் சாட்சாத் நானே!). சரி நாம எழுதாத கதையா எண்டு ஆரம்பிச்சா அவங்க ஒரு போட்டோ போட்டு அதில இருக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் கதையாக வேண்டும் என்று கண்டிஷன். இப்ப படத்த பாருங்க! ஒரு பொண்ணு அழுது கொண்டு இருக்கிற மாதிரியும் ஒரு பையன் வோட்கா கிளாச

மணிரத்னம் எழுதிய கவிதை!

தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்து மேயப்பட்டுவிட்டது. தாயும் மகனும் அந்த புகைவண்டி சத்தம் கேட்கும்போது திரும்பி பார்க்கையிலும், அதன் பின்னர் மீண்டும் திரும்பிய பின் ரஜனி காட்டும் முகபாவனையும்,  தலைவர் இளையராஜாவும் இணைந்து நம்மை உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள், நாமெல்லாம் அப்படியே கனத்து போய் அமர்ந்து இருப்போம் .. எந்த சலனமும் இல்லாமல் .. அந்த காட்சியை மீண்டும் பாரத்து இரசியுங்கள்! But There's One More Thing. இந்த காட்சியின் 0:44 --- 0:51 நேரத்து காட்சியை மீண்டும் பாருங்கள். தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசை பார்க்கும் தருணத்தில் கேமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாயுக்கும் முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான்.    தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.

அக்கா : கதை உருவான கதை

குறிப்பு : இந்த பதிவு சென்ற பதிவான "அக்கா" சிறுகதைக்கு ஒரு முடிவுரை மாதிரி. அருள்மொழிவர்மன் தனக்கு நாட்டை ஆளும் சந்தர்ப்பம் இருந்தும் உத்தம சோழருக்காக கிரீடம் துறந்து தியாகம் செய்த அத்தியாயத்தோடு வருடக்கணக்காக நீண்ட பொன்னியின் செல்வன் நவீனத்தை கல்கி முடித்து வைத்தார். கதை மாந்தர்களான வந்தியத்தேவனும் குந்தவையும் இணைந்தனரா? பின்னாலே சில ஆண்டுகளுக்கு பின்னர் உத்தமசோழர் மரணித்ததும் அருள்மொழிவர்மன் ஆட்சிக்கும் வந்து ராஜராஜசோழன் ஆகி கடாரம் கடந்து மாட்சிமை கண்டதும் சரித்திர பதிவுகள். இவற்றை தொடரில் எதிர்பார்த்த வாசகர்கள் கல்கியின் சப்பென்ற முடிவில் மனம் வெதும்பி போனதும் அடுத்த பதிப்பில் கல்கி முடிவுரை எழுதி சமாளித்ததும் இப்போது யோசித்தால் விஜய் டிவி சத்யப்ரகாசுக்கு தனியாக நிகழ்ச்சி வைத்து சூப்பர் சிங்கர் அளிக்காமல் போனமைக்கு பாவவிமோசனம் செய்தது கண்ணுக்குள் நிற்கிறது. நான் கல்கி இல்லை. அக்கா என்ற கதை பொன்னியின்செல்வனும் கிடையாது. ஆனால் அப்பிடி நினைத்தாலும் தப்பு இல்லை. கனவு காணுங்கள் என்று சொன்னது அப்துல்கலாம் தானே. “கதைய வாசிச்சிட்டு facebook க்கு போனால், நான் நினைச்சது ப

அக்கா

டக் டுடும் டக் டக் டக் டுடும் டக் டக் ஒவ்வொரு முறையும் இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் போதும் எனக்கேன்னவோ அவர்கள் ராஜாதி ராஜா படத்தில் வரும் “வா வா மஞ்சள் மலரே” பாட்டின் ஆரம்ப இசையை இசைக்கிறார்களோ என்ற சந்தேகம் தான் வருவதுண்டு. எம்மோடு மெதுவாக நடக்க ஆரம்பித்த மழை இன்னும் சன்னமாகவே பெய்து கொண்டு இருந்தது. தீபாவளிக்கு அளவுக்கதிகமாக சாப்பிட்ட அக்கா சமைத்த ஆட்டிறைச்சி கறி வயிற்றுக்குள் கடகட என்றது. இப்போதைக்கு இந்த கூட்டத்தில் ஒதுங்க முடியும் என்று தோன்றவில்லை. சைக்கிளை எங்கே நிறுத்துவது? இப்போது தான் செம்மணி சுடலை தாண்டியிருக்கிறோம். கண்டி வீதி இணையும் போது இன்னும் சனநெரிசல் கூடும் என்று பலர் பேசிக்கொண்டது கேட்டது. சைக்கிளின் பின்னாலே கட்டி இருக்கும் suitcase ஒருபக்கம் சரிவது போல ஒரு பிரமை.  சைக்கிளை நிறுத்தி சரிசெய்ய நேரமில்லை. விடிவதற்குள் வலிகாமம் தாண்டவேண்டுமென்பது உத்தரவாம். அக்காவின் சைக்கிளுக்கு வேறு காற்று போய் விட்டது. காற்றில்லாத சைக்கிளில் அந்த பெரிய suitcase ஐ வைத்து உருட்ட சிரமப்பட்டுகொண்டிருந்தாள். நானும் அவளும் தான். எம்மோடு வந்த அயலவர்கள் எல்லாம் கூட்ட நெரிசலில்

அரங்கேற்ற வேளை !

“நீ எங்க சுத்தினாலும் கடைசில சுப்பரின்ட கொல்லைக்க தான் வந்து சேரோணும்” அக்கா அன்று சொன்னபோது நான் அவளை ஏளனமாக பார்த்து இன்றோடு ஆறு வருடங்கள்  இருக்குமா? நான் ஒவ்வொரு முறை எழுதும்போதும் என் வீட்டில் இருந்து இப்படி ஒரு கமெண்ட் வருவது எனக்கு இப்போது பழகி விட்டது. பத்து வயது இருக்கும், தனியார் வகுப்பறையில் நான் எழுதிய முதல் கதை எல்லோருடைய பாராட்டையும் பெற்றபோது எனக்கு அம்மா சொன்னது. “கதை எழுதி கிழிச்சது போதும், புத்தகத்தை எடுத்து படிக்கிற வழிய பாரு” நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம் “The Namesake” வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiri யாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseini ஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி  ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு " Island of Blood " உம் " Broken Palmyrah " உம் எழுதுவதற்கு  அனிதா பிரதாப்  உம்  ரஜனி திரணகமவும் வேண்டி இருந்திருக்கிறது என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது. ஷோபா ஷக் தி யின் "Traitor" வாசித்த போது எங்கே இந்த புத்தகம் ஈழத்தமி