எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது. ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.