Skip to main content

Posts

ஊரோச்சம் : கட்டுநாயக்கா

பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது. சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?

ஆதிரை வெளியீடுகள்

  சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது. ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.

நான்கு சம்பவங்கள்

சம்பவம் 1 அப்பா எனக்கொரு சைக்கிள் வாங்கித்தந்திருந்தார். அரைச்சைக்கிள். ஹீரோ. முதலில் நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினால்தான் வாங்கித்தருவேன் என்று சொல்லியிருந்தார். நானோ வாங்கித்தந்தால்தான் பாஸ் பண்ணுவேன் என்று அடம்பிடித்தேன். ஈற்றில் என் பிடிவாதம் தாங்காமல் பரீட்சைக்கு முன்னரே சைக்கிள் வந்துவிட்டது. புறக்கோட்டையில் வாங்கி லொறியில் எடுத்து வரப்பட்ட சைக்கிள். பெல்லுக்குப் பதிலாக பற்றரியில் வேலை செய்யும் ஹோர்ன் அதில் இருந்தது. சிவப்பு நிறம். வண்ண வண்ணமான டஸ்ட் கவருகள், குஞ்சங்கள் எனப் புதுச்சைக்கிள் ஜொலித்தது. அதில்தான் பாடசாலைக்குப் போவேன்.

வாணி

     எழுதும் வேகத்தில் பிழைகளைத் தவிர்ப்பது கடினமாகவே இருப்பதுண்டு. மனவேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதுவதே கடினம். அதிலும் பிழைகளில்லாமல் எழுதுவது எப்படி? சரி எழுதிய பிற்பாடு வாசித்துத் திருத்தலாம் என்றால் அப்போது பஞ்சி பிடித்துவிடும். தவிர எழுதிய எழுத்தை மீள வாசிப்பதும் கொல்லக்கொண்டுபோவதுபோல. அப்படியே திருத்த வெளிக்கிடுகையில் கூடுதலாக ஐந்து பந்தி சேருவதுதான் நிகழுமே ஒழிய எழுத்துத் திருத்தம் நிகழாது. இப்படியான சூழ்நிலையில்தான் சிலவருடங்களுக்கு முன்னர் வாணி பிழைதிருத்தியின் அறிமுகம் கிடைத்தது. எழுத்துப்பிழைகள், புணர்ச்சி விதி, குற்றியலுகரம் போன்ற இலக்கண விதிகளில் விடும் தவறுகள் போன்றவற்றை வாணி பிழைதிருத்தி அடிக்கோடிட்டுக் காட்டுவதுண்டு. அதையும் தாண்டி இறுதிப் பதிவில் பிழைகள் விடப்படுவது நிகழும்தான். ஆனால் நடுவருக்கு உதவியாக வந்த டி.ஆர்.எஸ்போல தவறுகளைக் குறைக்க வாணி எனக்குப் பெருமளவு உதவிசெய்திருக்கிறது. என்ன ஒன்று, ஈழத்தமிழ் சொற்களை அது விளங்கிக்கொள்ளாமல் திருத்த முயற்சிசெய்யும். ‘சீலம்பா’வை ‘சிலம்பா’ என்று மாற்றச்சொல்லும். ‘வெளிக்கிடுங்கள்’ என்றால் குழம்பிப்போய் அடிக்கோட்டோடு நிறுத்திவிடும

மெக்ஸிக்கோ

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு.

காலத்தின் காலடி

நூலகம் அமைப்பைப் பற்றி எத்தனை தடவை சிலாகித்தாலும் போதாது என்றே தோன்றுகிறது. என்னுடைய ஈழம் சார்ந்த, தமிழ் சார்ந்த பல தேடல்கள் எல்லாம் நூலகம் தளத்திலேயே போய் முடிவடைந்திருக்கின்றன. அநேகமான உசாத்துணைகள் எல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். யாழ்ப்பாணப் பொது நூலகம் என்பது எங்களுடைய வரலாற்றுரீதியான ஒரு கலாசார சொத்து என்றாலும் ஒரு முழுமையான நூலகத்துக்கான பலனை உலகம் முழுதும் கொடுத்துக்கொண்டிருப்பது என்னவோ நூலக இணையம்தான். ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஐக்கிய நாடுகளின் நிறுவனரீதியான பங்களிப்புடன் செய்யக்கூடிய ஒரு பெரும் முயற்சியை, ஒரு அரச சார்பற்ற அமைப்பு ஒன்று, தன்னார்வப் பணியாளர்களின் உதவியோடு தொடர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகச் செய்வதென்பது ஒரு பெரும் சாதனை. அதுவும் எந்தவித சர்ச்சைகளும் குழப்படிகளும் பொதுவெளிக்குள் வரவிடாத ஒழுங்கமைப்புடன் இருக்கும் அமைப்பு. ஈழத்தில் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கு ஒரு மாதிரி அமைப்பாக நூலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. சின்ன உதாரணம் ஒன்று. ஒரு சிறுகதைக்காக ஈழத்தின் நாட்டுக்கூத்து முயற்சிகள், சித்தர்பாடல்கள் பற்றித் தேடிக

தறிகெட்ட கதை

நான் படிப்பெல்லாம் முடித்து வேலை செய்ய ஆரம்பித்திருந்த காலம். கொழும்பிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் அது. நான் இணைந்த காலத்தில் அங்கே பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் அணியிலும் ஓரிருவர். அவர்களில் ஒருத்திதான் பெல்லா. பெல்லா என்றால் அழகானவள் என்று அர்த்தம். இத்தாலிக்காரி. பெல்லா என் பெயரின் அர்த்தத்தையும் கேட்டாள். ஜேகே என்றால் ஜெயக்குமரன் என்று சொன்னேன். அதாவது வெற்றிகரமான இளைஞன் என்று பொருள். ‘வாவ் ஸோ ஆப்ட்’ என்றாள். ஆப்ட் என்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் தாங்ஸ் சொன்னேன். பெல்லாவோடு, சந்தித்த இரண்டாவது நாளே நான் டூயட்டும் பாடியிருந்தேன். அப்போது கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் பேமசாகியிருந்த நேரம். இதையே கிசோகர் என்றால் உண்மையைப் புட்டு வைத்திருப்பான். அந்தக் கைங்கரியம் எனக்கில்லை. எங்கள் அணியிலேயே பிரசாத் என்றவனும் கூட இருந்தான். எனக்கு அவன் சீனியர். மினுவாங்கொடவைச் சேர்ந்தவன். வெறுமனே தற்செயல்தான். பிரசாத்துக்கு இங்கிலிஷ் சுட்டுப்போட்டும் வராது. எனக்கும் வராது. ஆனாலும் ஜொனியன் என்பதால் தெரியாத இங்கிலிஷை பிரிட்டிஷ்காரனுக்