Skip to main content

Posts

பிரியாவின் கதை

Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன். சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் துன்பகரமான பயணத்தை ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியோடு பிரியா முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிரியாவின் பார்வையில் பிரதானமாக நகரும் இந்நூலில் அஞ்செலா, ரொபின் அந்தக் குடும்பத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த பலரின் வாக்குமூலங்களும் இந்தப் போராட்டம் எப்படி அந்தச் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைகளை மாற்றியமைத்தது பற்றியும் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது.

வரலாற்றின் சாட்சியம்

                                                     இறுதி யுத்தக் காலத்தில் நம் மக்களுக்கு அளப்பரிய மருத்துவ சேவையாற்றிய வரதராஜாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் “Untold truth of Tamil genocide” என்ற நூலை வாசித்து அதனைப்பற்றிய சிறு அறிமுகத்தைச் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.

பெலிசிற்றா

நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயம் ஒன்று அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

மீன் யாவாரம்

தாமதமாகச் சென்றதாலோ என்னவோ குருநகர்ச் சந்தைக்குள் நுழையும்போதே நாறல் வாசம் குப்பென்று மூக்கில் அடித்தது. நான் வழமையாக மீன் வாங்கும் செல்லர் அண்ணையைத் தேடினேன். ஆளை எங்குமே காணவில்லை. பல நாட்களாக மீன் சந்தைக்கு வராததால் இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சைக்கிள் பார்க்கிங் ரிசீப்ட்டைத் தேடி வந்து கொடுத்த தம்பியிடம் செல்லர் எங்கே என்று கேட்டேன். “அவர் மோசம் போய்க் கனகாலம் ஆயிட்டு. இப்ப பிள்ளையள்தான் கடையளை நடத்தினம்” அவர் காட்டிய திசையில் மூன்று வெவ்வேறு கடைகள் தெரிந்தன. மூன்றையுமே செல்லரின் பிள்ளைகள்தான் நடத்தினார்கள். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த கடை பின்னர் பிரச்சனைப்பட்டுக் கழன்று மூன்றாக மாறிவிட்டதாக பார்க்கிங் தம்பி சொன்னார். நான் அவர்களை நோக்கிப் போனேன். என்னைத் தூரத்தில் கண்டதுமே ஒருவன் கத்த ஆரம்பித்தான். “அண்ணை அந்தக் கடைக்குப் போகாதீங்க. பாரை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் எடுத்துப்பார்த்தா அது கட்டா அண்ணை. பேசி வெல்ல மாட்டியள். கட்டாவும் பாரை எண்டு வியாக்கியானம் கொடுப்பார். போயிடாதீங்கள்” நான் அவனிடம் கேட்டேன். “அவர் கிடக்கட்டும். நீ என்ன தம்பி விக்கிற...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...