Skip to main content

சிறு கதைகள்

சண்முகத்தின் கதை

...கடற்கரையை அண்மித்ததும் சண்முகத்தின் நாய் தன்பாட்டுக்கு எடுபட்டு அலைய ஆரம்பிக்கும். சண்முகம் அதனைத் தன் அருகிலேயே நிற்குமாறு கூவி அழைப்பான். நாய் கேளாது. கொஞ்சநேரம் அதனைக் கூப்பிட்டுப்பார்த்துவிட்டு பின்னர் அவன் அமைதியாகிவிடுவான். கடற்கரையில் ஒருபக்கம் அலைகளின் சத்தம். இன்னொருபக்கம் பனங்காட்டிலிருந்து ஓலைகள் காற்றில் அடித்துக்கொள்ளும் சத்தம். சண்முகத்துக்கு சற்றுக் குழப்பமாகவிருக்கும். யோசிப்பான். நாயை மீண்டும் ஒருதடவை கூப்பிட்டுப்பார்ப்பான். பயனிராது. பின்னர் ஒரு முடிவெடுத்தவனாய் பனங்காடடைப் பார்த்து  உட்கார்ந்தபடி தூண்டிலை எடுத்து வீசுவான். 

கரையை நோக்கி.... 
கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

...பகீர் என்றது. மாமா ஒரு லூசர் என்று குமரன் அப்பவே சொன்னவன். நான்தான் கேட்கவில்லை. “அந்த ஆளுக்குள்ள ஏதோ இருக்கடா” என்று சொல்லியிருந்தேன். இந்த கதையை குமரனிடம் போய் சொன்னால் கதையே கந்தல். மாமாவை மாமா வழியிலேயே போய் மடக்கலாம் என்று நானே ஆரம்பித்தேன்...

வீராவின் விதி
என் பெயர் தம்பையாப்பிள்ளை வீரசிங்கம். தெரிந்திருக்கும். பேராசிரியர் வீரசிங்கம். தெரிந்திருக்கும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் விரிவுரையாளர். ஒப்கோர்ஸ் தெரிந்திருக்கும். அதற்குமேல் பத்திரிகைச்செய்தியை ஸ்கிப் பண்ணிவிட்டு சினிமா பக்கத்துக்குத்தாவும் சமூகம் நம்மளது. நான் எந்தத்துறையில் ஸ்பெஷல் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் மனைவிக்கே அது தெரியாது. நாகமுத்துவை ஐயோ கேட்கவே வேண்டாம். 'ஓ யு ஸோ போரிங் வீரா' என்பாள். அந்த போரிங்கை உங்களுக்கு இங்கே சொல்லி அறுக்கப்போவதில்லை. ஆனால் என் ஆராய்ச்சி பற்றி ஒரு சின்ன கோடியாவது காட்டவேண்டும். கதைக்குத்தேவை. இந்த அவசரத்திலும் தேவை....

சப்புமல் குமாரயாவின் புதையல் 
உள் அறை ஒன்றில் கதிரை அரக்கப்படும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிடங்கள் காத்திருப்பு. அடுத்த “சேர்” க்கு தயாராகையில் கதவைத்திறந்தபடி பிகே சேர் வெளிவந்தார். வெறும்மேல். சாறம். அதே பழைய டபிள்   லென்ஸ் கண்ணாடி. தலையின் மேல் வெட்ட வெளியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்தமிழன் போல அடங்காமல் பறக்கும் நரைமுடிகள் என்று சேர் எங்கள் வகுப்பறையில் இருக்குமாப்போலவே இப்போதும் இருந்தார்...

 

விள மீன் (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
...சரசுமாமிக்குத் திருமணமாகிச் சரியாக எட்டாம் நாள் அது. அன்றைக்குத்தான் அவர் கணவன் விடுமுறைக்குப்பின்னர் வேலைக்குத் திரும்பிப்போகிறான். பத்துமணியளவில் பெட்டி மீன்காரரின் ஹோர்ன் சத்தம் கேட்டதும் மாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. பெட்டியிடம் இரண்டு ஓரா மீன்களை வாங்கிக் குழம்பு, சொதி, பொரியல், முளைக்கீரை என்று மத்தியானச் சமையலை அமர்க்களப்படுத்தி, கணவன் வீடு திரும்புவதற்காக காத்திருக்கிறார். இரண்டுமணிக்குப் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய புதுக்கணவன், கிணற்றடியில் கால் கழுவும்போது கத்தினான். 
“ச்சிக். எங்காலயிருந்து இந்தச் செலிட்டு நாத்தம் வருகிது? அரியண்டம்”...

நகுலனின் இரவு (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)

...இலக்குவனனைச் சந்தித்தேன்.

சில வனங்களுக்கு அப்பால் காவல் புரியும் அவனை அவ்வப்போது ஆற்றுப்படுக்கையில் சந்திக்கும் பொழுதுகள் மனதுக்கு இதமானவை. என் வயதுதான் இருக்கும். சக பற்றையோடு உரையாடுதல் என்பது விடுதலை. காட்டினை நாம் இருவரும் சேர்ந்து எள்ளி நகையாடுவோம். வைவோம். காட்டின் பலவீனங்களைக் கோடிகாட்டுவோம். அதன் அதிட்டத்தின்மீது பொறாமை கொள்வோம். காட்டை இகழ்தல் வேண்டும். அதுவே பற்றைக்குக் கிடைக்கும் இன்பம். மழை காட்டுக்கு மாத்திரம் பெய்கிறதே, ஏன்? சூரியன் காட்டில் மாத்திரம் உதிக்கிறதே, ஏன்? யானையும் யாளியும்கூட அங்கேயே வாழ்கிறதே, ஏன்? ‘நானும்தானே மிதிலைவீதியில் நடந்துபோனேன், என் அழகுக்கு என்ன குறை?’ என்பான் அவன். உண்மைதான். ‘சுயம்வரத்தில் எதற்கு வாற்போரினை வைக்கவில்லை?’ என்பேன் நான். பகவத்கீதைகூட பார்த்தனுக்குத்தானே கூறப்படுகிறது?

பற்றைகளின் சரசரப்புக்கு முடிவே இருப்பதில்லை....


சமாதானத்தின் கதை (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)

..சமாதானம் எத்தனையாம் வகுப்புவரை படித்தது? சமாதானத்துக்கு எப்படி எழுத வாசிக்கத்தெரியும்? அதனுடைய அம்மா அப்பா எங்கே போனார்கள்? அதற்குக் குடும்பம், குட்டி என எதுவும் உள்ளதா? என்ற சங்கதிகள் பற்றி எவருக்குமே சரியாகத் தெரியாது. சமாதானம் ஒரு தனிக்கட்டையாகவே அத்தனை காலமும் சுற்றித்திரிந்தது. அது சித்தர் சாதியினைச் சேர்ந்ததா என்றால் அப்படியும் சொல்லமுடியாது. பொதுவாகச் சித்தர்களுக்குப் பின்னாலே ஒரு நாயோ பூனையோ எக்காலமும் சுற்றித்திரிவதுண்டு. சமாதானம் அப்படி எதுவாவது பின்னாலே தொடர்ந்து வந்தால் கல்லால் அடித்துக் கலைத்துவிடும். சமாதானம் யார் என்பதைக் காலவோட்டத்தில் எல்லோருமே மறந்துபோய்விட்டிருந்தார்கள். சமாதானத்தின் பூர்வீகத்தைச் சொல்லக்கூடியவர்கள் என்று எவரும் இப்போது நரிக்குன்றடியில் இல்லை. ஒன்று இறந்துபோய்விட்டிருந்தார்கள். அல்லது இடம்பெயர்ந்துவிட்டார்கள்...


 

தூங்காத இரவு வேண்டும் (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
சிறிது கண்ணயர்ந்திருந்த சிவலிங்கம் திடுக்கிட்டு விழித்தார். கோமளா இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். நேரம் ஐந்துமணி. இருட்டிவிட்டது. எழுந்து யன்னல் திரைச்சீலைகளை இழுத்து மூடினார். அறையினுள் ஹீட்டர் போட்டிருந்தாலும் குளிர்ந்தது. போர்வையை இழுத்து கோமளாவின் தலையை போர்த்திவிட்டார். இன்னும் கொஞ்சநேரத்தில் கண்ணன் வந்துவிடுவான். அவனை நிறுத்திவிட்டு வீட்டுக்குப்போய் குளிக்கவேண்டும். இரண்டு இடியப்பமும், சொதியும் வைத்தால், பாவம் அவனாவது கொஞ்சம் சாப்பிடுவான். கோமளாவுக்கு எல்லாமே தண்ணிச்சாப்பாடுதான். சேலைனில் ஏற்றவேண்டும். பெயர் தெரியாத சத்துள்ள தண்ணீர் என்கிறார்கள். ஆங்கிலப்பெயர்கள். சிவலிங்கத்துக்கு புரிவதில்லை...



பச்சை மா

நித்தியானந்தனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. செத்தால் சொர்க்கம், நரகம், திரிசங்கு, ஆகக்குறைந்தது மறுபிறவியாவது வேண்டாமா. இப்படி ஒரு ரூமுக்குள் அடைத்துவைத்திருக்கிறார்கள். இவங்கள் வேறு என்னைப்போலவே இருக்கிறார்களே. செத்தால் எல்லோரும் ஒரேமாதிரித்தான் இருப்பார்களா? யாரோ ஒரு இளம் பெண் கீச்சென்று கூச்சலிட்டுக்கேட்டது. அந்த எல்ஸீடி திரையில் அந்த அம்மண நித்தியானந்தனின் பிரேதத்தைக் கண்டு அவனுக்கும்போய் ஒருத்தி அழுதுகொண்டிருந்தாள். அழகாகவேறு இருந்தால், கோமதியைவிடவும். கோவணம் கூட கட்டாதவனுக்குப் போய் இப்படியொரு...



தீராக்காதலன்

இருவரும் தென்திசை நோக்கி கைகூப்பி தொழுதபடி அமர்ந்திருந்தார்கள். பரதன் தமையனது திருவடிகளை தலையில் தாங்கியபடி சித்திரகூட பருவதத்தின் உச்சியையையே வணங்கிக்கொண்டிருந்தான். கண்ணீர் வற்றி கன்னங்களில் உப்பளம் பூத்திருந்தது. அழுதேறியாத வேடுவத்தலைவனோ கங்கையை கடலாக்கிக்கொண்டிருந்தான். படகு வடகரையை நெருங்க நெருங்க, அதைவிட வேகமாக அவர்களுடை மனம் தென்திசை நோக்கி வேகம் பிடித்தது. படகோட்டி துடுப்பு வலிக்கையில் தடுமாறினான். குகனோ ஓட்டியிடம் படகை மெதுவாக செலுத்துமாறு குறிப்பாலே உணர்த்தினான். படகு ஏறத்தாழ நின்றே விட்டது...



சியாமா

சியாமளாவின் முகத்தில் ஈயாடவில்லை. நான்காவதும் ஆண்குழந்தையா?  இப்போது என்ன செய்வது? ரெஜினோல்ட், ரெமீடியாஸ், ரிச்சார்ட் என்று ஏற்கனவே காலுக்குள் ஒன்று, கையிற்குள் ஒன்று, கமக்கட்டுக்குள் ஒன்று என மூன்று குழந்தைகள்.  இது போதாதென்று கணவன் வேறு இன்னொரு குழந்தையாய். இதில் இன்னொரு ஆண் குழந்தையா? மயக்கம் வருமாப்போல. "மாதா என்ன இப்படி செய்திட்டாய்? நான் என்ன செய்வன்? என் கணவனுக்கு என்ன சொல்லுவன்?...



குட் ஷொட்

“எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?”
வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார்...



MH 370

சுப்புரத்தினம்,
கிராம சேவையாளர் கி/255
வட்டக்….”
“கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையை திறந்துகொண்டு நுழைபவனுக்கு பெயர் தம்பிராசா...



மண்ணெண்ணெய்

கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள்...




ஷண்முகி

இரண்டு அடி எடுத்து வைத்திருக்கமாட்டேன். “டொக்” என்று என் தலையில் ஒரு குட்டு விழுந்தது.
“கண் என்ன பிடரியிலயா இருக்கு? கோலத்தை மிதிச்சுப்போட்டியள்”
மனைவி திட்ட, “கிளுக்” என்று அந்த சிறுமி சிரித்தாள். அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். ஐந்தடி மெலிந்த தேகம். உடல் சைஸுக்கும் மீதமான தொங்கட்டான் பாவாடை சட்டை. நெற்றி முழுக்க வீபூதி, கறுத்தபொட்டு, நடு உச்சி இரட்டைப்பின்னல், சிரிக்கும் போது செந்தழிப்பாக இருந்தாள்...



இரண்டாம் உலகம்

நடுங்கியபடியே தன்னுடைய வீட்டுவேலையை எடுத்துக்கொண்டு வகுப்பு முன்னே போகிறான். பிரேம் நடுங்கிய நடுக்கத்தில் இந்தோனேஷியா டெக்கான் தட்டுகள் இடம்மாறி, சுனாமி உருவாகி சுமாத்ரா கரையோரம் வழித்து துடைக்கப்பட்டது. இருபதானாயிரம் பொதுமக்கள் ஜஸ்ட் லைக் தட்டாக இறந்தார்கள்.
தயக்கமாக “வணக்கம் சேர்” என்றான்...



எளிய நாய்

அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க...




போயின ... போயின .. துன்பங்கள்

சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான்...



நான் வருவேனே

சம்பிரதாயமான அறிவிப்புகள். முகமன்கள். செய்திகள். குரலில் எந்த மாற்றத்தையும் காட்டாது பேசினான். நிரூ இன்னமும் பல்கனி குந்தில் இருந்து அழுதுகொண்டிருந்தாள். “யூ டோன்ட் கெட் இட் சுரேன். உனக்கு சொன்னா விளங்காது…. ப்ளீஸ் என்னையும் தாரணியையும் போக விடு.. பளார்..”. சலிங் என்று ஒரு அறை. நிரூ தொடர்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள். “ப்ளீஸ்.. சுரேன்..யூ டோன்ட் கெட்…”...



குட்டியன்

“உ” அட்டைக்காரர் நிலை இப்படியை இருக்க “அ”, “இ” அட்டைக்காரர் பாடு வலு கலாதி. அவர்கள் தான் இந்த “வருமானம் குறைந்தவர்கள்” பிரிவு. அவர்களுக்கு எல்லாம் நிவாரணம் டபுளாக கிடைக்கும். அவர்களில் ஒரு சிலர் நிஜமாகவே வசதி குறைந்தவர்கள். விட்டுவிடுவோம். ஆனால் தொண்ணூறு வீதமான அன்றைய “வசதி குறைந்தவர்கள்” வேறு யாருமல்லர். இந்த வெளிநாட்டுக்காரரும் பிஸ்னஸ்காரரும் தான்...



சைக்கிள் கடைச் சாமி  (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது...



இளிச்ச வாய் பூனை

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்...



நாளை இன்று நேற்று

கார்த்திக் மாமா “எல்லாமே நல்லா நடக்குமா?” என்று கேட்க நாகலிங்கம் கதிரைப்பின்பக்க பின்னல் ஓட்டை வழியாக கமலாதேவி இடுப்பை இஸ்க்கென்று நோண்டினான். “ஐயோ அம்மா” என்று திடுக்கென்று எழுந்தாள் கமலாதேவி. கார்த்திக் மாமா “என்ன பிள்ளை மூட்டையோ?” என்று கேட்டுவிட்டு மெதுவாக அண்மையில் பிறந்திருந்த மதுமிதா ஆச்சியை பார்க்கவென்று என்று நைசாக நழுவினார்...



அசோகவனத்தில் கண்ணகி

“இராவணன் மேலும் நெருங்கினான். நெருங்கியவன் அப்படியே ஸ்டைலாக பத்தாவது தலையை மரத்தில் சாய்த்து ஒய்யாரமாய் நின்றான். கைகளில் இரண்டு வீணையில் பின்னணி இசை வேறு கொடுத்துக்கொண்டிருந்தது. ரோஜா படத்து பெண் பார்க்கும் சீனில் வரும் பின்னணி இசை. சுடுவதிலும் ஒரு விவஸ்தை இல்லையா என்று கண்ணகி தனக்குள்ளேயே சிரித்துக்கொள்ள, இராவணன் மீண்டும் தப்பாக அதை அர்த்தப்படுத்திக்கொண்டான்.”...



காடு திறந்து கிடக்கிறது

“சொல்லு .. எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”
“என்றெல்லாம் நினைத்த தருணங்களில் ஏமாந்திருக்கிறேன் … முன் வரிசையில் இருந்து கைகொட்டி சந்தோஷமாக கண்கட்டி வித்தை அது … காதல்”...



வானம் மெல்ல கீழிறங்கி!

..அங்கே அம்மா ஏற்கனவே கைலாம்பை ஏற்றிவிட்டு புட்டு கொத்திக்கொண்டிருந்தாள். இந்தநேரம் பார்த்து உள்ளே நுழைந்தால் “புட்டுக்கு எப்பன் தேங்காய் துருவித்தா” என்று ஆரம்பித்து கோரிக்கை “சம்பல் கொஞ்சம் இடிச்சு தா” வரைக்கும் நீளும் என்று மேகலாவுக்கு நன்றாகவே தெரியும்...



விசையறு பந்து   (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
திருமணம் முடித்து நீயும் வேலைக்கு போறியா? நானும் போறன். முடிந்து வந்தால் நீயும் டயர்ட்டா? நானும் டயர்ட் தான். நானும் அவனும் ஒரே குசினியில் சமைத்து, அவன் வெங்காயம். நான் பச்சைமிளகாய். உனக்கு வாஷிங் மெஷின். எனக்கு ஹால் மொப்பிங். உனக்கு கந்தசஷ்டி. எனக்கு கௌரி நோன்பு. உனக்கு ஏ ஆர் ரகுமானா? எனக்கு இளையராஜா. கேட்கவேண்டும். எல்லாமே முதல் நாள் கேட்டு பேசி, ஒகே என்றால் சந்தோசம், இல்லையா? ச்சீ போடா போ...



N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

காட்டினான். நுழையும்போது சிகரட் நாற்றம் மீண்டும் குப்பென்று. மூலையில் புழுதியும் வீபூதியும் படர்ந்த சாமித்தட்டு. குட்டி புத்தர் சிலை ஒன்று நடுவில் இருந்தது. முன்னாலே காய்ந்த அர்ச்சனை இலைகள், சீப்பு, பவுடர் டின் எல்லாமே பரவி கிடந்தன. தட்டுக்கு கீழே ஒரு கயிறு கட்டப்பட்டு அழுக்கு உடுப்புகள், சாரம், பெண்டர் தொங்கின. இழுத்து மூடப்பட்ட யன்னல் கரையோரம் ஒற்றை கட்டில். அதின் நடுவில் மண்ணிறம் மண்டிய ஈரத்துவாய் ஒன்று காயப்போட்டு கிடந்தது. மற்றப்பக்கம் சூட்கேசுகள், இன்னொரு உடுப்பு ராக், பாய், புத்தகங்கள், சிடிக்கள் எல்லாமே இரைந்து கிடந்தன...



இலையான்

அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும்...



கதை சொல்லாத கதை!

நாள் முழுக்க எப்எம்முக்கும் ஏஎம்முக்கும் மாத்தி மாத்தி திருகியதில் பட்டறி கொஞ்சம் இறங்கிவிட்டது போல இருந்தது. சத்தம் மொனோ ரேடியோவில் சன்னமாகவே கேட்டது. நிஷாத இராச்சியத்தின் மன்னன், இப்படி இடம்பெயர்ந்து பெயர் நுழையாத தெரியாத ஊரிலே, அக்கம்பக்கத்தார் தரும் உதவியில் வாழ்வதை நினைக்க மாவீரனான ஏகலைவனுக்கு அவமானமாய் இருந்தது. ...



மேகலா

--“வேற யாரடி உனக்கு விடிய வெள்ளன almond milk இல coffee போட்டுகொண்டு வந்து பேயன் மாதிரி பார்த்துக்கொண்டிருப்பான்?
கண்முழித்துவிட்டாள். மெதுவாக தலையை திருப்பி, நிமிர்ந்து உட்கார்ந்து, முடியை லாவகமாக சுருட்டி கொண்டை போட்டாள். வெறுங்கையாலேயே முகம் கழுவி வெறுங்கையாலேயே லிப்ஸ்டிக் அட்ஜஸ்ட் செய்து, கண் துடைத்து .. என் கண்ணை நேரே பார்த்து நான் தலையசைத்து ஓகே சொல்லும்வரை சரி செய்துகொண்டே இருப்பாள். Such a pain in the …



கணவன் மனைவி!

--ரோஜா முடியும்போது நள்ளிரவு தாண்டியிருந்தது. பார்த்த சொக்கிப்போய் இருந்தார்கள். குமரனுக்கு இப்போதே போய் அந்த வாய்க்குள் நுழையாத கம்பியூட்டர் இன்ஜினியரிங் படிக்கவேண்டும் போல இருந்தது. ஹனிமூனுக்கு கண்டிக்கு போகும்போது ஸ்ரீலங்கா ஆர்மி தன்னை பிடித்துகொண்டு போவதாகவும், மேகலா வந்து பூசா சிறையில் தன்னை மீட்பதாகவும் அபத்தமாக யோசித்தான்.--...



என்ர அம்மாளாச்சி!

-- ஜேகே ஜெஸ்ஸி .. ஜெஸ்ஸி ஜேகே … என்னே ஒற்றுமை. இரும்பு கேட் மாத்திரம் இருந்திருந்தால் குதித்து பாய்ந்து இந்நேரம் “அந்த நேரம் அந்தி நேரம்” தான்.  அப்படியே அவளை … “Listen and respond. Don’t be looking at her mouth, don’t be wondering what she looks like naked.” ஹிட்ச் படத்தின் ரூல் வந்து மிரட்ட பூமிக்கு வந்தேன்! --...




கனகரத்தினம் மாஸ்டர்   (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
---“Bloody Indians...!”கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார்.  கால்கள் நடுங்கின. ---.



யாழ்ப்பாணத்தில் திமுக தலைவர்!

--- “சாமியண்ணே, கதைய விட்டிட்டு மேசைய பார்த்து விளையாடன! விசுக்கொப்பன் துரும்பு, மசிர்.. அத பிடிக்க ஏலாதே? அடுக்கி விளையாடுற தாள், இத்தினி வருஷமா விளையாடுற, இன்னும் துரும்பு பிடிக்க மாட்டியாம், கடவுள் இல்லையெண்டு கண்டுபிடிக்க வந்திட்டார் பேராசிரியர் சிவத்தம்பி!” ---



கக்கூஸ்

“… ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும் …”



உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம்   (சமாதானத்தின் கதை தொகுப்பிலிருந்து)
----“பொறுடி, எங்கள பற்றி எழுதேக்க, மற்றவனுக்கு ஒரு inspiration ஆக இருக்க வேண்டாம்? யோசிச்சு தானே எழுதோணும்"

“Inspiration? .. What the .. ஒரு பெட்டைக்கு பின்னால திரிஞ்சு படிப்ப கோட்டவிட்டு container ல களவாய் London வந்தத எழுது, நல்ல inspiration ஆ இருக்கும்”----



அக்கா எங்கே போனாள்?

----“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”----



குட்டி

---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால்---



சுந்தர காண்டம்

----இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதிலிகளாய் குமரனும் அம்மாவும் வந்து இறங்கியபோது இருக்க இடமும் குமரனுக்கு இந்த வேலையையும் போட்டுக்கொடுத்தவர்.“அப்படியெல்லாம் நீ என்ன விழ விட்டிடுவியா என்ன?”மேகலா சிரித்துக்கொண்டே சேலையை ஒருக்களித்து இலாவகமாக குமரனின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்தாள். ----



அப்பா வருகிறார்

....சோனியா தான் அவன் வளர்த்த ஆடு. கறவை ஆடு, நல்ல உயரம். ராஜீவ் காந்தி இலங்கை வந்த போது அவனுக்கு சோனியாவைப் பிடித்துவிட்டது. களையான முகம், வெள்ளைக்காரி வேறு, எப்படியும் கணவனிடம் சொல்லி சண்டையை நிறுத்திவிடுவார் என்று குமரன் நினைத்தான். ....



டொக் டொக் டொக்

---ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான்? .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே ---



முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்!

சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள்



நீ  முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்

"ம்ம்ம்ம்,  நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி"
"கார்த்திக்..."



சட்டென  நனைந்தது இரத்தம்

---யாழ்ப்பாண போலீஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.  ஓரத்தில் பல தாய்மார்கள் கவலையுடன் எதற்கோ காத்துகொண்டிருந்தனர். ஒருபக்கம் சிங்களம் தெரியாதவர்கள் தங்களுடைய முறைப்பாட்டை விவரிக்க சிரமப்பட்டுக்கொண்டு இருக்க ---



ஏழாம் அறிவுடை நம்பிகள்!

-- என்னை வாழவைத்த தமிழக மக்களே.இலங்கை தமிழர்களை நான் நெறைய தடவ சந்திச்சிருக்கேன். அவங்க திட்டினா கூட நாதம் மாதிரி இருக்கும். இங்க நாம பேசறது definetely ராஜபக்ஸ காதுக்கு போய் சேரும். அந்த தைரியத்தில நான் ஸ்ரீலங்கா கவுர்மண்டுக்கு ஒண்ணு மட்டும் சொல்ல விரும்புறேன். --





































Comments

  1. Hi Anna, today only I was introduced to your blog! It's so wonderful. I couldn't resist myself from reading all of them continuously! Amazing writing! I can feel the pain and the memories of each and every incidents! Please keep on writing. In future you may like to consider publishing a book on this. Without exaggeration and any bias, it reflects the livelihoods of our people! Though I was in Colombo through out all the struggle period, I can somehow relate myself with all the stories. We were brought up in a way to believe that our roots are still in Yarl! The stories also reflect how the thinking process, believes, inspirations and targets evolved with time. Hats off!

    - Braveena

    P.S.: I am from UOM as well. Few years junior to you. I came for Java classes at Soysapura. Can you recall me? https://www.facebook.com/braveena

    ReplyDelete

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”