Skip to main content

Posts

Showing posts with the label இசை

ஆம்பிளைங்க டூயட்!!!

இந்த இசைத்தொடர் குசேலன் படத்தை விட ப்ளாப்! கடந்த பதிவுக்கு வெறும் நூறு ஹிட்ஸ் தான். மற்றவர்களுக்கு எழுதாதே, உனக்கு பிடிச்சத எழுது என்றான் மன்மதகுஞ்சு. இந்த வாரம் என் வாசகர் தமிழினி ஒரு ஈமெயில் அனுப்பினார். “இப்போது நீங்கள் இசைப்பதிவு எழுதுவதில்லையா? நீங்கள் முன்பு சொன்னது போல் சனி அல்லது ஞாயிறில் எழுதலாமா? ரசித்துப்படித்துக் கெற்க பலர் உள்ளோம்!!!” இந்த வாரம் என்னை கவர்ந்த ஆண்கள் இணைந்து பாடும் டூயட்கள் சில. ஸ்டார்ட் ரெடி மியுசிக்! தென்றலே தென்றலே, இதை feel பண்ணி கேட்காத ஒருவர் தானும் இருந்தால் நான் பாடல் கேட்பதையே நிறுத்திவிடுகிறேன். அருமையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உன்னியின் ஹம்மிங் இழையாய் தென்றலே தென்றலே என்று ஆரம்பிக்கும். தூரத்தில் நிலா, பக்கத்தில் காதலி தூங்குகிறாள். இரண்டுமே எட்டாத தூரத்தில். இரண்டும் அவனை எரிக்கிறது. ஆனாலும் தூங்க வைக்கிறான். நல்ல பாடல் உருவாக வேறு என்ன situation வேண்டும்? முதலாவது இண்டர்லூட்டில் கொஞ்சம் சறுக்கல். இசையும் காட்சியும் கவரவில்லை. சரணம் ஆரம்பிக்கும் போது ரகுமான் comes back again. இரண்டாவது இண்டர்லூட். அமிர்தம். ரக

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே!

♫உ.. ஊ.. ம ப த ப மா♪   தொடரை நிறுத்தலாம் என்று தான் அக்காவும் அபிப்பிராயப்பட்டார். உன் ரசனை இது. உன்னோடு வைத்துகொள். ஆளுக்கு ஆள் அது மாறுபடும் என்றார். ஒரு வாரம் பொறுத்துப்பார்த்தேன். முடியல! இந்த பதிவு வேணாம்னு சொல்றது மேகலாவையே வேணாம்னு சொல்ற மாதிரி! என் பாட்டுக்கு எழுதப்போறன். பாட்டு பிடிச்சிருக்கா சொல்லுங்க! இந்த வாரம் கொஞ்சம் பின்நவீனத்துவ பாணியில் பாடல்களை கோர்த்து இருக்கிறேன். புள்ளி என்னவோ ஒரே வகை சிந்தனையில் அமைந்த பாடல் வரிகள் தான். ஆனால் அதையொற்றி வரும் பாடல்கள் வேலிகள் எல்லாம் தாண்டி ஓடும். டென்ஷன் ஆக வேண்டாம். பதிவுக்கு போவோம்! சிலவேளைகளில் வைரமுத்துவின் கற்பனைகள் ஒரே பாணியில் அமைந்துவிடும். ஒரு முறை தான் காதலித்து இருப்பார் போல! இந்த வரிகள் பெண்ணை தொலைத்த ஏக்கத்தில் வரும் வார்த்தைகள். என்ன ஒரு அழகான கற்பனை. வைரமுத்து வைரமுத்து தான்! “கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே” “அதை தேடி தேடி பார்த்தேன்” உயிரே படம் சந்திரன் மாஸ்டரிடம் நானும் ப்ரியாவும்(அல்லது பார்த்தியா?) முதல் ஷோ பார்த்தோம் என்று நினைக்கிறேன். பாடல் காட்சி கொஞ்சமே இருவர் படத்து “ப

திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்

திரைகடல் ஆடி வரும் தமிழ் நாதம் ஆல் இந்திய ரேடியோ தூத்துக்குடி வானொலி நிலையம் நேரம் இரவு எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள் திரைத்தென்றல்! உங்களில் எத்தனை பேருக்கு இந்த அறிவிப்பு ஞாபகம் இருக்கிறது? அட நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவரா? தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு குட்டி ரேடியோவுடன் அலைந்தவரா? தூத்துக்குடி வானொலி நிலையத்தின் திரைத்தென்றல் நிகழ்ச்சி கேட்காமல் இரவு சாப்பாடு உங்களுக்கும் நிச்சயம் இறங்கி இருக்காது. என்னை மீண்டும் 90களின் அந்த இனிமையான நாட்களுக்கு அழைத்துச்செல்ல இன்றைக்கு முயல்கிறேன்! நீங்களும் வருகிறீர்களா? ஒவ்வொரு நாள் இரவும் ஆறு மணிக்கு கை கால் முகம் கழுவி படிப்பதற்கு மேசைக்கு போகவேண்டும். அது வீட்டில் எழுதப்படாத சட்டம். நான் படிப்பது சிவபெருமான் புட்டுக்கு அணை கட்டியது போல தான். தொடர்ந்தாப்போல் அரை மணித்தியாலம் கூட என்னால் இருந்து படிக்க முடியாது. அந்த நேரம் தான் தண்ணீர் விடாய் வரும். சாமி கும்பிட தோன்றும். பாத்ரூம் போகவேண்டும் போல இருக்கும். பேனா மக்கர் பண்ணும. பென்சில் கூர் தீட்ட வேண்டி இருக்கும். ஆனால் அம்மா எவ்வளவு கேட்டாலும் சாப்பிட மட

“மேகம் இடம் மாறும்போது!!”

அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே! உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம். அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் .. By then I  realised you got something! Brunthan’s masterpiece of todate! அந்த

“சின்ன குயிலின் சோகம்!”

அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை! “பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க

“ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”

காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான  “The Corrs” மீதான காதல். பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட். மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான் ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தா