என்னை “எப்போது தமிழிலே எழுதப்போகிறீர்கள்?” என்று இங்கு வந்திருக்கும் எஸ்.பி.எஸ் ரேணுகா துரைசிங்கம் ஒருமுறை கேட்டார். அப்போது ஜேகேயின் கொல்லைப்புறத்துக் காதலிகள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி எழுதவேண்டும் என்றேன். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருடைய எழுத்துகள் மீது காதல் கொண்டேன். William Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூகக்குறைபாடுகளை கேலிப்பேச்சு, அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக , Touchstone என்று ஒரு முட்டாள் செக்ஸ்பியரின் நாடகத்தில் அப்பப்போ தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார் .