கந்தசாமியும் கலக்சியும் - அறிவியல் +அரசியல் + நையாண்டி - Its a Bloody Mary Cocktail!! எங்களுக்கு எல்லாம் அரை டவுசர் போட்ட அஞ்சாம் வகுப்பிலிருந்தே அறிவியல் என்றால் அடி வயிற்றில் புளி கரைக்கும். அறிவியலும், அறிவியல் மாஸ்ட்டரும் குனிய வைத்து கும்மிய மறத் தமிழர் வம்சம் நாங்கள்..! ராஜ ராஜ சோழன் காலத்திலேயே அறிவியலை எல்லாம் கூரை மீது ஏத்தி விட்டு, கலையின் ஆழம், ஆழம், ஆழம் சென்று "ஆலுமா, டோலுமா" வை கண்டெடுத்த சாதனையாளர்கள். அப்படி இருக்க இந்த கந் தசாமியும், கலெக்சியும் - படலைல தல சினிமா விமர்சனம் எழுதும் ன்னு ஆசையோட காத்திருந்தா இந்த நாவல update பண்ணிட்டு ஒரு வாரத்துக்கு escape ஆயிடும். அடுச்சு புடுச்சு அத்தோட முடுஞ்சுதுன்னு பாத்தா தல கடைசில புக்காவே release பண்ணி புடுச்சு. சரி ஆனது ஆய் போச்சு படுச்சு தான் பாத்திருவோம் ன்னு எடுத்தா.. "பூமியப் பத்தி ஒரு அற்புதமான intro.. முடிவா, இந்த லூசுக் கூட்டத்தில் ஒருவர் தான் கந்தசாமி!!" கதையோட ஹீரோவுக்கு என்ன ஒரு opening!! அப்ப தான் ஒரு நம்பிக்க வந்துச்சு. கந்தசாமி மேல பாரத்த போட்டுட்டு பக்கத்த தள்ளுன்னா.. climax ல ஜிகர்தண்டா ...