உ திரு ஜே.கே அவர்கட்கு, 06.11.2013 அவுஸ்திரேலியா. அன்புத் தம்பிக்கு, நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நலமே நாடு சேர்ந்தோம். மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது. அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது. மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர். கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர். நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு, நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஆற்றல் கண்டு அதிசயித்தேன். பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புக...