Skip to main content

Posts

மெல்லுறவு

அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்? ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

தேவகியின் முகநூல் பதிவு

மெல்லுறவு சிறுகதையின் உபபிரதி ********************* நன்றி : புதியசொல்

ச்சி போ

ஏன் என் அடிவயிற்றை எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல ஏன் எப்போதும்  என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்? நான், என் மனம், என் விசித்திரங்கள் என்று என்னோடு நான் பேசும் பொழுதுகளில் மட்டும் எதற்காக ஒலிபெருக்கிகள் பூட்டிக் கடவுளைத் தேடுகிறீர்கள்? நான் கூரையைப்பிரித்துவைத்து வானில் நட்சத்திரங்களை எண்ணுகையில் எதற்காக உள்ளே எட்டிப் பூராயம் பார்க்கிறீர்கள்? தண்ணீர்த் தொட்டியை ஏன்  உங்களது ஆவுரஞ்சிக்கல் ஆக்குகிறீர்கள்? கிளியோபற்றாவின் ஊசிகளோடு எதற்காக என்னையே சுற்றிச் சுற்றி நீங்கள் அலையவேண்டும்? ஈக்களைத் துரத்தக்கூட எதற்காக வாளைச் சுழற்றவேண்டும்? எப்பொழுதுமே யாரையேனும் நிராகரித்துக்கொண்டேஇருக்கிறீர்களே, ஏன்? நான் என்று நினைத்து எதற்காக யாரோ ஒருவரைத் திட்டுகிறீர்கள்? நிற்க. எனக்கெங்கே மதி போனது? நான் ஏன் இங்கேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்? உலகம் முழுதும் எனக்காகத் திறந்து கிடக்கையில் ஒரு கண்ணாடிக்குவளைக்குள் நான் ஏன் முடங்கிக்கிடக்கவேண்டும்? உங்களுக்கும் எனக்கும் அப்படி என்னதான் உறவு? என் மரண வீ

கந்தசாமியும் கலக்சியும் - ஆனந்த் பாலா

கந்தசாமியும் கலக்சியும் - அறிவியல் +அரசியல் + நையாண்டி - Its a Bloody Mary Cocktail!! எங்களுக்கு எல்லாம் அரை டவுசர் போட்ட அஞ்சாம் வகுப்பிலிருந்தே அறிவியல் என்றால் அடி வயிற்றில் புளி கரைக்கும். அறிவியலும், அறிவியல் மாஸ்ட்டரும் குனிய வைத்து கும்மிய மறத் தமிழர் வம்சம் நாங்கள்..! ராஜ ராஜ சோழன் காலத்திலேயே அறிவியலை எல்லாம் கூரை மீது ஏத்தி விட்டு, கலையின் ஆழம், ஆழம், ஆழம் சென்று "ஆலுமா, டோலுமா" வை கண்டெடுத்த சாதனையாளர்கள். அப்படி இருக்க இந்த கந் தசாமியும், கலெக்சியும் - படலைல தல சினிமா விமர்சனம் எழுதும் ன்னு ஆசையோட காத்திருந்தா இந்த நாவல update பண்ணிட்டு ஒரு வாரத்துக்கு escape ஆயிடும். அடுச்சு புடுச்சு அத்தோட முடுஞ்சுதுன்னு பாத்தா தல கடைசில புக்காவே release பண்ணி புடுச்சு. சரி ஆனது ஆய் போச்சு படுச்சு தான் பாத்திருவோம் ன்னு எடுத்தா.. "பூமியப் பத்தி ஒரு அற்புதமான intro.. முடிவா, இந்த லூசுக் கூட்டத்தில் ஒருவர் தான் கந்தசாமி!!" கதையோட ஹீரோவுக்கு என்ன ஒரு opening!! அப்ப தான் ஒரு நம்பிக்க வந்துச்சு. கந்தசாமி மேல பாரத்த போட்டுட்டு பக்கத்த தள்ளுன்னா.. climax ல ஜிகர்தண்டா

நன்றே செய்க

கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த கிழமை, அடுத்த கிழமை என்று பிற்போட்டுக்கொண்டேயிருந்தேன். நமக்குத்தெரிந்தவர்களை மரணம் அண்டாது என்கின்ற ஒரு ஆழ்மனது நம்பிக்கை எப்போதுமே எம்முள் இருக்கிறதோ என்னவோ.  அந்த நம்பிக்கை அண்மைக்காலத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. பத்து, இருபது வயதுகளில் எனக்குத்தெரியாத தாத்தா, பாட்டிமார்களே அதிகம் இறந்துகொண்டிருந்தார்கள். முப்பதுகளில் இப்போது அங்கிள்களும் அன்ரிகளும் பிரியத்தொடங்கி இருக்கிறார்கள். சிறுவயதில் நான் ரசித்து வளர்ந்த ஆளுமைகள் இப்போதெல்லாம் ஒவ்வொருவராய் மறையத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பத்திருபது வருடங்களில் என் நண்பர்களும் பிரியத்தொடங்குவார்கள். ஆர்மிக்காரன் மூவ் பண்ணத்தொடங்கிவிட்டான். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த ஷெல்கள் நம்மூரையும் தாக்கி, அயலட்டத்தையும்தாக்கி இப்போது வீட்டுவாயிலிலும் விழுந்து வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒருநாள் அது என் கட்டிலிலும் விழுந்துவெடிக்கவே செய்யும்.

கந்தசாமியும் கலக்சியும் - ரோசி கஜன்

மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்! ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள்! இப்படி, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’. பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை. சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் . பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது. கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல

மருதூர்க்கொத்தன் கதைகள்

“மரையாம் மொக்கு”. ஒரு கடலோரக் கிராமத்தில் வாழும் வறுமை மீனவரான காத்தமுத்துவின் கதை.  “முன்னங்கை பருமனனான நேரான வரசங்குத்திய சாணளவு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒரு பாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறதுதாண்டா மரையாம் மொக்கு”  என்று கிழவர் ஆதம்பாவா “மரையாம் மொக்கு”வுக்கு விளக்கம் கொடுப்பார். மரையாம் மொக்கு என்பது வாவியில் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணம். சில்லி வலையை நீர்ப்பரப்பினுள் வளைத்துக்கட்டி நீரடியில் ஒளிந்துகிடக்கும் மீன்களை வெருட்டி வெளிக்கொணர்வதற்காக, நீரைத் தாம்தூம் என்று அடித்துக் கலக்குவதற்கு மரையாம் மொக்கு பயன்படும்.  காதர் பக்கென்று கேட்பான். “மரையாம் மொக்கைத் தூக்கிப்பிடித்தா தூரத்திலிருந்து பார்ப்பவனுக்கு ரொக்கட் லோஞ்சர் மாதிரிதானே தெரியும்?”

பொண்டிங்

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை. மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின் தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன… உங்கள் பாஷையில் சொல்வதானால்… Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும் அசையும் கரும்பொருட்கள் எல்லாம் அகக் கண்ணில் தெரிகிறது… ஓடும் எலிகள் எல்லாம் விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது… ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்.. புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது… நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட.. இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்… எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள் ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது… ‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்.. பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின் சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய் பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்.. உங்கள் எழுத்துக்களின் பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி – காயத்திரி

எழுத்தாளருடன் முரண்படுதல்

“நான் என்பது எனக்கு வெளியே இருப்பது” என்றார் ழாக் லக்கான். சிறு வயதில் எனக்கென்றிருந்த அறம் இப்போது என்னிடமில்லை. சிறுவயது நானுக்கும் இப்போதைய நானுக்குமே மிகப்பெரிய வித்தியாசத்தை "நான்" காண்கிறேன். சமயத்தில் அதனை வியப்போடு பார்த்துமிருக்கிறேன். நாளை இதுவும் மாறுமென்றே தோன்றுகிறது. இதில் எனக்கு கெட்டியான இரும்புப்பிடி கிடையாது.