Skip to main content

Posts

சூரரைப்போற்று

நேற்று சூரரைப்போற்று பார்த்தேன். ‘எயார் டெக்கான்’ நிறுவனர் கோபிநாத்தினுடைய வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை உள்வாங்கி அவற்றின் ஈர்ப்பில் உருவானது இந்தப்படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் படத்தைப்பார்ப்பவர்கள் இதனை ஒரு உண்மைக்கதை என்று நம்பிவிடக்கூடாது என்பதற்காகச் சில தகவல்கள்.

புது நேரம்

நித்திரையால் எழுந்தபோது நேரம் ஆறு மணியாகியிருந்தது. தாமதமாக எழுந்த எரிச்சலோடு தேநீர் ஊற்றவென குசினிக்கு வந்தேன். அங்கே ஹோலில் கடிகாரம் ஐந்து மணி என்று காட்டியது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இன்றைக்கு அவுஸ்திரேலியாவில் நேரம் மாற்றப்படும் நாள். வசந்தகாலத்தில் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் முன்னகர்த்தி பின்னர் இலையுதிர்காலத்தில் திரும்பவமும் பின்னகர்த்துவார்கள். அதாவது இன்று அதிகாலை நள்ளிரவு இரண்டு மணி தன்னாலே மூன்று மணியாகியிருக்கும். கோடைக்காலங்களில் வெள்ளனவே வெளிச்சம் இங்கு வந்துவிடுவதால் பகற்பொழுதுகளை முழுமையாகப் பயன்படுத்தச் செய்யும் மாற்றம் இது. மின்சாரமும் மிச்சம். அந்த இரு நாட்களும் அனேகமான நவீன டிஜிட்டல் கடிகாரங்கள் எல்லாம் அதன்பாட்டுக்கு மாறிவிடும். ஆனால் வீட்டு ஹோல்களில் தொங்கும் சுவர்க் கடிகாரங்களை நாங்கள்தான் மாற்றவேண்டும். ஆனால் பலர் பஞ்சியில் அதை மாற்றாமல் எந்நேரமும் மனக்கணக்கு போட்டே ஆறுமாதங்களைக் கடத்துவார்கள்.
படம் : என் கொல்லைப்புறத்துக் காதலிகள் படலை திறந்து இன்றோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. 

ஆதிக்குடிகள்

ஈழத்தின் ஆதிக்குடிகள் எவர் என்றொரு உரையாடல் அண்மையில் உருவாகியிருக்கிறது. அவ்வப்போது இந்தச் சந்தேகம் எனக்கும் ஏற்படுவதுண்டு. கூடவே ஆதிக்குடிகள் என்ற பதத்துக்குள் யார் யாரெல்லாம் அடங்குவர் என்பது பற்றிய வரைவிலக்கணமும் எனக்குள் காலப்போக்கில் மாற்றம் அடைந்துகொண்டேயிருக்கிறது. அவற்றின் அடிப்படையில் எளிமையான நேர் மொழியில் தர்க்கரீதியான ஒரு தேடலைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றியது.

"சைக்கிள் கடைச்சாமி" உரையாடல்

சமாதானத்தின் கதையில் உள்ள 'சைக்கிள் கடைச் சாமி' என்ற சிறுகதையைப் பற்றி கேதாவும் நானும் உரையாடும் காணொலி இது (இணைப்பு முதல் கொமெண்டில்). ஓரளவுக்கு கதைக்குப் பின்னணியாக இருக்கும் எண்ணங்களைப் பற்றி பேசியிருக்கிறோம் என்று நம்புகிறேன்.    உரையாடலின் ஓரிடத்தில் 'The straw that broke the camel's back' என்ற சொல்லடையைத் தமிழில் எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். காணொலியைப் பார்த்துவிட்டு கலாதேவி அதற்கு நிகராகத் தமிழில் திருக்குறளே இருக்கிறது என்று இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

"சமாதானத்தின் கதை" உரிமைத்தொகை

காலையில் இலாச்சி துப்புரவாக்கிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டது. “சமாதானத்தின் கதை” நூலுக்கான முதற்பதிப்பு உரிமைப்பங்கை புத்தகம் வெளியாகி ஒரு மாதத்திலேயே ஆதிரை வெளியீட்டாளர்கள் எனக்குக் கொடுத்துவிட்டிருந்தார்கள். குறிப்பாகப் புத்தகம் குறித்த எந்தவித நிகழ்வுகளும் இடம்பெறமுன்னமே முந்நூறு பிரதிகள் விற்பனை செய்யப்பட்டதும் அதற்கான உரிமைப்பங்கை வெளியீட்டாளர் உரிய நேரத்தில் கொடுத்ததும் மகிழ்ச்சிக்குரியதும் நம்பிக்கையூட்டும் நிகழ்வுகள்தாம். புத்தக வெளியீடு குறித்த நம்பிக்கைகளை இவை விதைக்கின்றன. ஆதிரை குழுமத்துக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த விநியோகக் குழுமங்களுக்கும் நன்றி. அதைவிட இதனை சாத்தியமாக்க உதவிய வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும். "சமாதானத்தின் கதை" நூலை இந்தியாவில் "டிஸ்கவரி புக் பாலசிலும்", இலங்கையில் வெண்பா புத்தகசாலை, பூபாலசிங்கம் புத்தகசாலையிலும் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தை வாங்க .

கொரானாவும் மலையாளத் திரைப்படங்களும்

“உண்டா” என்றொரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தோம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் மாவோயிஸ்டுகளின் பிரசன்னம் உள்ள கிராமங்களுக்குத் தேர்தல் கடமைக்காகச் செல்லும் ஒருதொகுதி காவல்துறையினரின் கதை. கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் மறியல் கடவைகளையும் லத்திகளையும் சில துப்பாக்கிகளையும்தான் அவர்கள் துணைக்குக் கொண்டு செல்கிறார்கள். போதுமான தோட்டாக்கள்கூட அவர்களிடம் இல்லை. அவர்களில் பலர் பயிற்சியின்போது சுட்டதற்குப்பின்னர் துப்பாக்கியையே பயன்படுத்தியதில்லை. தாக்குதல் அனுபவம் இல்லாதவர்கள். மிக எளிமையான சாதாரண மனிதர்கள். சரியான தயார்படுத்தல் இன்றி எப்படி மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை அந்தக் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஈற்றில் மாவோயிஸ்டுகளிடமிருந்து சனநாயகத்தைக் காக்க வந்தவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்களின் கையாட்களிடமிருந்துமே சனநாயகத்தைக் காக்கப் போராடுவதாகக் கதை முடிகிறது.

அவள்

வேலை முடித்து நடைப்பயிற்சிக்கு நாங்கள் தயாரானபோது ஏழுமணி ஆகியிருந்தது.  கொஞ்சம் காற்றும் சேர்ந்த மரணக்குளிர். ஊரடங்கு எட்டு மணிக்கு என்றாலும் வீதிகள் எல்லாமே அப்போதே வெறிச்சோடிக்கிடந்தன. சனத்துக்கும் வெளியே போவதற்கான தேவைகள் ஏதுமில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. வேலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. பலசரக்குக் கடைகள் தவிர்ந்த ஏனையவை மூடப்பட்டுவிட்டன. மாவும் சீனியும் வாங்கக்கூட ஐந்து கிலோமீற்றரைத் தாண்டக்கூடாது என்று சட்டம். உடற்பயிற்சிக்கும் ஒருமணி நேரம்தான் அனுமதி. உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த இடம் என்று கொண்டாடப்பட்ட மெல்பேர்னில் இப்போது தெருவில்கூட நடமாடமுடியாதபடி கிருமி எம்மை ஒடுக்கி வைத்திருக்கிறது.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி அஃப்ராத் அஹமத்

ஓர் எழுத்து உங்களை என்ன செய்துவிட முடியும் எனக் கேட்பவர்களுக்கான என் பதில் நீளமானது, ஆழமானதும் கூட! என் கொல்லைப்புறத்துக்காதலிகள் நூல் என்னுள் கடந்த தலைமுறை வாழ்ந்த யாழ்ப்பாண வாழ்வியல் நினைவுகளுக்குள் காலப்பயணம் சென்றுவந்த உணர்வொன்றை கடத்திவிட்டது.

சித்தகத்திப் பூக்களே

நேற்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இளையராஜாவுடன் நடைப்பயிற்சியில் இருந்தேன். எல்லாமே தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்து இளையராஜா. “கட்டி வச்சுக்கோ”வில் ஆரம்பித்து “முத்துமணி மாலை”, “தானந்தன கும்மிகொட்டி”, “சாமிக்கிட்ட சொல்லிவச்சு”, “என்னைத் தொட்டு” என்ற வரிசை பதினொராவது கிலோமீற்றர் கடக்கையில் “சித்தகத்திப் பூக்களே”க்குத் தாவியது. அதன்பின்னர் அடுத்த முப்பது நிமிடங்களுக்கு அதுவே ரிப்பீட்ட ஆரம்பித்தது.