ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி. காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது. இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு