கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்? கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே இருந்திருக்க முடியும்? அதை கற்றதனாலாய பயனே எம் இனம்! எம் இலக்கியங்களில் கல்லுக்கென்று எப்போதுமே தனியிடம் இருக்கும். கல்லும் கவி சொல்லும். கல்லுக்குள் பெண் இருப்பாள். சமயங்களில் கல்லோடு கட்டி கவிஞர்களை கடலிலும் போடுவார்கள். "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா" என்று கல்லை கடவுளாக்கியவர்கள் நம் முன்னோர்கள். அந்தக்கல்லையே கவிப்பொருளாக்கிய அரங்கு இது. தலைப்பு "கல்லிலே கலைவண்ணம் கண்டார்". அரங்கில் கல்லைக்கண்ட விஞ்ஞானியாக கீர்த்தனா, கல்லைக்கண்ட சாமியார்யாக ஆனந்த், கல்லைக்கண்ட கந்தசாமியாக (பாமரன்) ஜெயகாந்தன் மற்றும் கல்லாய் அமைந்து மறுமொழியை கேதாவும் பகர்ந்தார்கள். இதில் என் பங்கு அரசியவாதி. கல்லை அரசியல்வாதியாகவும் அரசியல் கண்ணோட்டத்திலும் நோக்கியிருக்கிறேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (முழு தொகுப்பு கிடைத்தவுடன் பகிர்கிறேன்). நன்றி. ...