தமிழ் திரையிசையில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பாடகர் ஜோடி இதுகாலமும் கொடிகட்டிப் பறந்து வந்திருக்கிறது. “ஏ.எம் ராஜா - ஜிக்கி”, “சுசீலா- டி.எம்.எஸ்”, “எஸ். பி. பி - ஜானகி”, “சித்ரா - மனோ” என்று இப்படி ஒரு லிஸ்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஒரு கொன்றாஸ்ட் இருக்கும். இவர்கள் சேர்ந்து பாடும்போது ஒரு தனித்துவம் கிடைக்கும்.