Skip to main content

Revolution 2020


Chetan Bhagat இன் சமீபத்திய புத்தகம் தான் இது. யார் Chetan Bhagat? “Five Point Someone”, “Two States”, “One night @call centre”, “Three Mistakes of my Life” எல்லாம் எழுதியவர். முதலாவதை தான் த்ரீ இடியட்ஸ் என்று சொல்லி குற்றுயிரும் குலையுயிருமாய் எடுத்தார்கள். அதுவே அவ்வளவு நன்றாக இருந்தது என்பது வேறு விஷயம்.

இதுவும் கல்வித்துறை சம்பந்தமானது. Chetan இன் எல்லா நூல்களிலும் ஒரு பாணி இருக்கும். யாராவது ஒருவர் chetan க்கு கதை சொல்வது போலவே ஆரம்பித்து முடிப்பார். இதுவும் அப்படியே. அவரின் மற்றைய கதைகள் போலவே, கொஞ்சம் வீக்கான மெயின் காரக்டர்.  Urban பெண் ஒருத்தி, ஒரு வெங்கலாந்தியாக இருப்பாள்! “The girl thing” என்று குறிப்பிடுவார்கள் இல்லையா? அதே! எப்படியும் கதையின் தேர்ட் குவார்டரில் அவளுக்கும் அவனுக்கும் செக்ஸ் நடக்கும். ஹீரோக்கு கில்ட்டி வரும், Dramatic turn around இறுதியில் வரும். One night at call centre இல் கடவுள் கூட வருவார்!! அப்புறம் சுபம்!

ஆனாலும் chetan வாசிக்க வைப்பார். வேகமான எழுத்து நடை. சொல்லவந்த விஷயத்தின் contextual facts தான் கதையின் நாதம். ஆனாலும் அவசரமாக மெட்ரோவில் பயணம் செய்யும் ஐடி இளைஞனை தன் புத்தகத்தை வாசிக்க வைப்பதற்கு தான் இந்த செக்ஸ், ஒரு வித படித்த ஆனால் முட்டாள் பெண், அதிரடி முடிவுகள் சமாச்சாரங்கள். கதையினூடாக வாரனாசி, IIT தயார் படுத்தல், அதன் ஸ்கோர் சிஸ்டம், கல்வித்துறை ஊழல், நல்ல எண்ணங்கள் உள்ள இளைஞர்கள், கந்துவெட்டி எம்எல்ஏ, மினிஸ்டர் என டிபிகல் இந்திய சினிமாவின் எல்லா விஷயத்தையும் கதையில் சொல்கிறார். நாவலுக்குரிய டீடெயிலிங்க் ரசிக்கவைக்கிறது.  சினிமா ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டே கதை எழுதியிருப்பது போல படுகிறது. நிச்சயமாக சுவாரசியமான கதை தான்.

Chetan Bhagat ஐ இந்தியாவின் சிறந்த english writing எழுத்தாளர் என்று சொல்லும்போது கொஞ்சம் நெருடுகிறது. நாம் எதை இலக்கியம் என்று கொண்டாடுகிறோமோ அவற்றின் அடிப்படைகள் இவர் எழுத்தில் இல்லை. போலியான வாழ்க்கை சித்திரத்தின் மீது பல உண்மைகளின் நிறங்கள். இது சரியான எழுத்தா என்ற கேள்விக்கு எனக்கு பதில் இல்லை. ஆனால் தமிழில் இந்த எழுத்து வந்தால், ஜெயமோகனும் சாருவும் கூட்டாக சேர்ந்து குப்பைக்கூடைக்குள் போடுவார்கள். எஸ்ராவும் ரஜனியும் கூட இதற்கு பாராட்ட மாட்டார்கள்! ஞானி .. நாவல் பெண்களை கேலி செய்கிறது .. மனித சங்கிலி என்பார்! சான்ஸே இல்லை!!

“Two States” தவிர்ந்த ஏனைய இவரது நாவல்களை வாசித்துவிட்டேன். இந்த புத்தகம் கூட வெளியான அடுத்த கிழமையே ebay இல் வாங்கியாச்சு. இது தான் Chetan Bhagat இன் வெற்றி. தான் மட்டுமே இந்தியாவில் பூக்கும் ஒரே ஒரு இலுப்பைப்பூ என்ற மார்க்கட்டிங்கும் ஒரு காரணம்!

அவர் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவர் எழுதும்போது, சுற்றியுள்ள நண்பர்கள் ஒரு கொமென்ட் போட்டு ஊக்கப்படுத்துவதும் தான்!!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக