Skip to main content

Posts

Showing posts with the label நகைச்சுவை

பெற்ரா

இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள். “சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. “ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”

பக்

அலுவலகத்தில் புதிதாக ஒரு நாயை நேற்று கொண்டுவந்தார்கள். ஒரு பக். எனக்கு நாய்கள் மீது எந்தப்பிரச்சனையும் இல்லை. நாய்களை நான் மதிப்பவன். நாய்கள் அழகானவை. நன்றி பாராட்டுபவை. ஒரு சின்ன எச்சில் ஆட்டு எலும்புக்காக சாகும்வரைக்கும் நன்றி நவில்பவை. எனக்கேன் நாய்கள்மீது கோபம் வரப்போகிறது? ஆனால். இந்த ஆனால் என்ற வார்த்தைக்கு அற்புதமான சக்தி உண்டு. அது தனக்கு முன்னர் உதிக்கப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிடும். விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். ஒருவரை எத்தனை பாராட்டினாலும் ஈற்றில் ஒரு “ஆனால்” போட்டுப்பாருங்கள். அவ்வளவும் சங்குதான். இன்னார் ஒரு அற்புதமான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பேச்சு பிடிக்கும். அவர் சிரிப்பு பிடிக்கும். ஆனால்.

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது.  ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.

குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)

  பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும்.   அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில்  புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும். கொஞ்சம் கொஞ்சமாக புரட்சி பெருநதியாக அலைபாயும். அடிமைத்தனத்திலிருந்து கட்டுடைத்து எழுதவதற்காக பீறிடும். புரட்சி மலரும்.  பின்னர் புரட்சியின் மலர்ச்சி இன்னுமொரு அதிகார மையத்தை உருவாக்கி, அதன்பால் அத்தனை இயக்கங்களும் சடத்துவங்களும் ஈர்க்கப்பட்டு இறுதியில் புரட்சி கட்டுடைந்து மீண்டும் சூனிய வெளியை நோக்கி தள்ளப்படும். இத...

கல்லைக்கண்ட அரசியல்வாதி!

  கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்?  கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மொழியின் முதலுறவே கல்லாகத்தானே இருந்திருக்க முடியும்? அதை கற்றதனாலாய பயனே எம் இனம்! எம் இலக்கியங்களில் கல்லுக்கென்று எப்போதுமே தனியிடம் இருக்கும். கல்லும் கவி சொல்லும். கல்லுக்குள் பெண் இருப்பாள். சமயங்களில் கல்லோடு கட்டி கவிஞர்களை கடலிலும் போடுவார்கள். "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா" என்று கல்லை கடவுளாக்கியவர்கள் நம் முன்னோர்கள். அந்தக்கல்லையே கவிப்பொருளாக்கிய அரங்கு இது. தலைப்பு "கல்லிலே கலைவண்ணம் கண்டார்". அரங்கில் கல்லைக்கண்ட விஞ்ஞானியாக கீர்த்தனா, கல்லைக்கண்ட சாமியார்யாக ஆனந்த், கல்லைக்கண்ட கந்தசாமியாக (பாமரன்) ஜெயகாந்தன் மற்றும் கல்லாய் அமைந்து மறுமொழியை கேதாவும் பகர்ந்தார்கள். இதில் என் பங்கு அரசியவாதி. கல்லை அரசியல்வாதியாகவும் அரசியல் கண்ணோட்டத்திலும் நோக்கியிருக்கிறேன். உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் (முழு தொகுப்பு கிடைத்தவுடன் பகிர்கிறேன்).  நன்றி. ...

குட் ஷொட்

  “எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார். கையில் இருந்த கிளாஸில் கொக்கோகோலாவோடு கொஞ்சம் சஷிவாஸ்; அடிக்கடி ஒரு உறிஞ்சி உறிஞ்சினார். “ஆய்க்” என்று காறியபடியே “டொக்” என்று மேசையில் கிளாசை வைப்பார். சற்றுத்தள்ளி சவுண்ட் சிஸ்டத்தில் டீ.ஆர் “ஒஸ்தீ” என்று கதற, சிலர் பிதுக்கி பிதுக்கி ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் டான்ஸில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜூஆர் அடிக்கடி வந்துபோனார். இன்னொருவர் ஆடும்போது அவரின் பொன்ட்ஸ் அண்டர் வெயார் கங்காரு குட்டி போல எட்டிப்பார்த்தது. ஒருவரின் தோளில் இருந்த இரண்டுவயதுக் குழந்தை கைகளால் தாளம் போட்டு சிரித்துக்கொண்டிருந்தது. ஒரு சின்னப்பெடியன் அறையின் லைட்டை ஒன் பண்ணி ஒப் பண்ணிக்கொண்டிருந்தான்.

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

அசோகவனத்தில் கண்ணகி!

  அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம்.  மரத்தடியில் முழங்கால்களுக்குள் முகம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது உஸ் உஸ் என்ற சத்தம். இது எதுவுமே கண்ணகி காதில் எட்டவில்லை. அவளுக்கு ஊர் ஞாபகம். பூம்புகார் வெயில் அவ்வப்போது நினைவுக்கு வந்து வந்து மிரட்டிக்கொண்டிருந்தது. கோவலன் வந்து தன்னை மீட்டபின்னர் அப்படியே இங்கேயே ஒரு கடை வைத்து செட்டிலாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மாதவியிடம் இருந்தும் கடல் தாண்டி தொலை தூரத்தில் இருந்துவிடலாம். இவனும் அங்காலே இங்காலே அசையமாட்டான். கோவலன் நினைவில் கண்ணகிக்கு இரண்டு செல்சியல் குளிர் இன்னமும் கூடியது. சாக்கு போன்ற ஒரு போர்வையை ...

இலையான்!

  “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார். “ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்” சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். “உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..” “சேர்…” இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் ...

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

  சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்த...

கக்கூஸ்

  ர யிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போ...

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!

“தேங்க்ஸ் ஜெஸ்ஸி,  நான் கூப்பிட்ட உடனேயே டின்னருக்கு வந்தது, வருவியோ மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்!”  “என்ன கார்த்திக் இது கேள்வி, இட்ஸ் மை ப்ளஷர்”  "ம்ம்ம்ம்,  நீ வந்து நின்னா இந்த ஏரியாவையே போட்டு தாக்கும், எனக்கெல்லாம் கிடைப்பியான்னே ஒரு டவுட் ஜெஸ்ஸி"  "கார்த்திக்..."  “ம்ம்ம், சொல்லு.. அப்புறம் இன்று முழுக்க என்ன செய்தாய்?”  “ஆரம்பிச்சிட்டியா? உன்னோட தானேடா நாள் முழுக்க இருந்தேன்”  “ஹா, சில நேரங்களில், நீ முன்னால் இருக்கும் போது என்ன பேசுவது என்றே தெரிவதில்லை”  “ஹேய், ஆர் யு ஓகே?”  “ம்ம்ம், நீ கிடைக்கும் வரை ஓகேயாகத்தான் இருந்தேன்”  “இப்போது என்னை என்ன செய்யச்சொல்கிறாய் கார்த்திக்?”  “எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா? உனக்கு புரியாது ஜெஸ்சி! யாரும் என்னை சட்டை செய்வதே இல்லை  தெரியுமா? அம்மா கூட, நீ ஒருத்தி தான் .. நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பாய்”  “ஏண்டா? நீதானே எனக்கு எல்லாமே, நீ சொல்வதைக்கேட்காமல் வேறு யார் சொல்வதைக்கேட்பேன்?”  “ஆகா, கவிதை”  “உனக்காகவே வாழ்ந...