கீரனூர் ஜாஹிர்ராஜா எழுதிய ‘ஞாயிறு கடை உண்டு’ என்ற நாவலை வாசித்தேன். சமகால தஞ்சை மண்ணில் நிகழும் கதை இது. அதிலும் தஞ்சையில் மையப்பகுதியில் அமைந்திருக்கும் கீழ்வாசல் மீன் சந்தை மனிதர்கள், ராவுத்தர் பாளையத்தில் தங்கியிருந்து தவணை வியாபாரம் செய்பவர்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் என நாம் கேள்வியேபட்டிராத ஆனால் தஞ்சையின் சீவனாக இருக்கக்கூடியவர்களின் நாளாந்த வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசுகின்ற நாவல் இது. அதுவும் இன்றைய, காவிரி வற்றிப்போன, தன் பெருமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருக்கின்ற அல்லது மறந்துகொண்டிருக்கின்ற மண்ணின் கதை.