Skip to main content

Posts

மரணத்தின் பின் வாழ்வு.

  “டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான்.

தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

  முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன்.  அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.

மண்ணெண்ணெய்

  கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “ என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா ?” “ இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ” ” அதுக்கு ?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா ? எண்டு வந்திட்டன். ” ” ஏன் இங்க வந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும் போய் துலைஞ்சிருக்கலாமே ” குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார். “ இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது.... ” “ ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா ? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள் .. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும் ? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல ”

பாலு மகேந்திரா

  அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏகன் அனேகன்.

  "கடவுள்" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.

ஈழத்து இராமாயணம்.

  மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன். நன்றி கேதா அவை வணக்கம் கம்பநாடன் கவிதையிற் போல கற்றோர்க்கிதயம் களியாதே - என்று வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைக்கு இங்க வந்து மன்றத்தில் பேச சொல்லி பொங்கல் தந்த சடையப்ப வள்ளலுக்கும் வணக்கங்கள்! காலத்தை வென்று வாழும் காவிய நாயகர்கள் நால்வருக்கும் தமிழில் ஒரு ஹாய்!

ஷண்முகி

  வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.