முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள். மணல் அளையும் சிறுவர்கள். ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி. தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு. வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு. சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு ப