Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

  யாழ்.குடாநாட்டின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கொல்லைப்புறத்து காதலிகள் புதிய தலைமுறைப்படைப்பாளி ஜே.கே.யின் பால்யகால வாழ்வனுபங்களின் பதிவு   படலை வெளீயிடாக இந்த ஆண்டு(2014) இறுதிப்பகுதியில் வெளியாகியிருக்கும் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற ஜெயக்குமரன் சந்திரசேகரத்தின் பால்ய கால நினைவுப்பதிவாக வெளியாகியிருக்கும் அவரது என் கொல்லைப்புறத்து காதலிகள் நூலைப்பற்றி அதனைப்படித்துப்பார்க்காமல் ஒரு வாசகர் பின்வரும் முடிவுக்கும் வந்துவிடலாம். ஜே.கே . என்ற எழுத்தாளரின் வாழ்வில் வந்து திரும்பிய நிஜக் காதலிகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளாக அல்லது கட்டுரைகளாகத்தான் இந்த நூலின் உள்ளடக்கம் இருக்கலாம் என்ற உத்தேச முடிவுக்கு அவர்கள் வரலாம்.

அன்போடு அழைக்கிறோம்

ராஜாக்களின் சங்கமம்

    பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள்.  ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான்.  இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல  தோழர்கள் "இருவர்".  அகிலன், கஜன்.  அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும். புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வ...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

முன் பதிவுகளுக்கு 2021-10-01 அச்சுப்பிரதிகள் தீர்ந்துவிட்டதால் புத்தகம் இப்போது அமேசனில் மாத்திரம் கிடைக்கிறது. நன்றி. https://www.amazon.com/dp/B0762ZRLZM/ref=cm_sw_r_sms_awdo_1ZXPSMTGVJFX4ZHPHNAE பிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். மெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும்.  புத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.   புத்தக விவரம் காப்புரிமை - ஜேகே  பதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au) ISBN-10 : 0992278422 ISBN-13 : 978-0-9922784-2-7 பக்கங்கள் – 344 அட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார் அட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ்...

கனவு நனவாகிறது

    விக்கி மாமா விக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய  பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி.  அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,. அவர்களுக்கும் தெரியாது. எண்ணினால் தரித்திரம் என்று எம்மையும் எண்ண விடமாட்டார்கள். நான்கரை மணிக்கே எழுந்து, பத்திருபதுபேர் சேர்ந்து பால் கறப்பார்கள். வெவ்வேறு சைஸ் பானைகளில் கறவை நடக்கும். ஆறரை, ஏழு மணி வரைக்கும் நீடிக்கும். கறந்த பாலில் தேத்தண்ணி ஊற்றி பட்டிக்கே கொண்டுவருவார்கள். தம்பிராசா அண்ணை பட்டியை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குப் போகும்வரைக்கும் பால் கறக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நாளுக்கு இருநூறு, முன்னூறு லீட்டர் வரைக்கும் சமயத்தில் பால் கிடைப்பதுண்டு.

மன்னிப்பாயா?

  காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது.  இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்த பாடலை முணுமுணுக்காமல் எவனும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டான். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது.

பாலு மகேந்திரா

  அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

மண்டேலா

  கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் & சச்சின் & …

  சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது. வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

  உ திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013 அவுஸ்திரேலியா. அன்புத்  தம்பிக்கு, நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். நலமே நாடு சேர்ந்தோம். மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது. அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது. மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர். கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர். நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு, நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது. ஆற்றல் கண்டு அதிசயித்தேன். பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புக...

ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

  “என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்...

Still Counting The Dead.

வைத்தியர் மே 15, 2009. ஒரு சின்ன கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடைசி வைத்தியசாலையையும் கைவிட்டாயிற்று. ஏனைய வைத்தியர்கள் இராணுவத்திடம் சரணடைய சென்றுவிட்டார்கள். வைத்தியர் நிரோனும் அவரின் உதவியாளர் மட்டுமே பங்கருக்குள். முந்தைய தினத்து பொஸ்பரஸ் குண்டு தாக்குதலில் நிரோனின் முதுகு, கைப்பகுதி எல்லாமே எரிந்து சிதிலமாகி இருந்தது. அகோர பசி. வெளியேயோ குண்டு மழை. பங்கருக்கால் கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப்பார்த்தால் ஒரே புகை மூட்டம். தூரத்தே கடற்கரை மணலில் ஒரு பனங்காய் விழுந்துகிடக்கிறது. ஓடிச்சென்று அதை எடுத்துவருமாறு தன் உதவியாளரிடம் நிரோன் சொல்லுகிறார். தாமதித்தால் இன்னொரு பங்கருக்குள் இருப்பவர்கள் முந்திவிடலாம். கொஞ்சம் குண்டுகள் தணிந்த சமயம் பார்த்து உதவியாளரும் ஓடிச்சென்று அதை எடுத்துக்கொண்டு வேகமாக பங்கருக்குள் திரும்புகிறார். அப்போது தான் அந்த உதவியாளன் கையில் இருந்ததை நிரோன் கவனிக்கிறார்.

Yarl Geek Challenge!

  தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்? The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில...

அன்பில் அவன் சேர்த்த இதை!

  ஐந்தாம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு. ரிசல்ட்ஸ் பார்க்கப்போன அப்பா திரும்பும் நேரம். சென்ஜோன்ஸ் கல்லூரி அனுமதிக்கு தமிழ், கணிதம், ஆங்கிலம் என மூன்று பாடங்கள். மொத்தமாக அறுநூறு மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் வெறும் முப்பத்தைந்து பேர்களை மாத்திரமே தெரிவு செய்வார்கள். வீட்டில் நம்பிக்கையில்லை. எனக்கோ அந்த கதீடறல் கட்டிடக்கலையும், பிரின்சிபல் பங்களோவும், ஐந்தடிக்கு ஒன்றாய் நிற்கும் மகோகனி மரங்களில் தெறிக்கும் ஒரு வித ஆங்கில வாசமும், இது தான் என் பாடசாலை என்ற எண்ணத்தை வேரூன்றவைத்துவிட்டது. வந்த அப்பாவின் முகம் சரியில்லை. இரண்டு புள்ளிகள். மயிரிழை .. அரும்பொட்டு என்று ஏதோதெல்லாம் சொன்னார். கத்த ஆரம்பித்து, அழுது கண்ணெல்லாம் சிவந்து படுக்கையறைக்குள் போய் போர்வையை மூடிக்கொண்டு, யாழ் இந்து கல்லூரியின் நுழைவுத்தேர்வு விண்ணப்பபடிவத்தை அண்ணா கொண்டுவந்து தந்தபோது கிழித்து எறிந்தது இன்னமும் சன்னமாய் ஞாபகமிருக்கிறது. கடைசியில் அப்பா யார் காலையோ பிடித்து, டொனேஷன் ஐயாயிரம் ரூபாய் எங்கேயோ கடன் வாங்கி கொடுத்து, சென்ஜோன்ஸ் கல்லூரியில் சேர்த்துவிடும்போது, முதல் நாள் வகுப்பை தவறவிட்டு இரண்டாம் நாள் தயக...

வாரணம் மூன்று!

  முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை! எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?  யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி  தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வேளை, பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்! அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும் வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு. அது முடிந்த பின்னும் நூலகம் தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு திருட்டுத்...

நாற்பத்து இரண்டு!

  உயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”! பதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன? என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது. தொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படு...

சச்சின்!

  Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை. “A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ்...