Skip to main content

Posts

Showing posts with the label கவிதை

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு விளக்குமாறால் கூட்டித்தள்ளியும் சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள் மரத்தடி நிழலில் நாற்காலி என் ராங்கிகார அம்மா, கால்கள் மெல்லமாய் தாளம்போட ஏதோ ஒரு பாட்டு நாளை இந்த வேளையோ?  இது நல்ல வேளையோ? எப்படிச்சொல்வேன் நான்? என்னை விட்டு போய்விட்டான் என்றா? அதிர்வாளா? அழுவாளா? யாருக்காக அழுவாள்? ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு. பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன். என்னடா? சொன்னேன். என்னடி சொல்லுறாய்? திரும்பவும் சொன்னேன். போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா? அரற்றினாள் விடம்மா.. போனால் போறான். அம்மாளாச்சி … போயிட்டாரா .. அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ அழுதாள். அரட்டினாள். அதிர்ந்து போனேன் நான். அம்மா நீ வந்து…  உடம்பில் ஏதோ ஊர்வது போல அவனை காதலித்தேனா? அறிந்தேனா புரிந்தேனா? என்ன கருமாந்திரம் செய்தேன் நான்? நான் நினைத்தது தான் அவன் என்றேனோ? அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ? அறியவும் முயலாமல் முனிந்தேனோ? அம்மாவை பார்த்தேன். கண்களால் கோதிவிட்டாள். இந்த அன்பு அவங்கள் இல்லாதவிடத்தில்  அம்மாவின் அன்பு அவளுக்கு என் அன்பு நடக்கும் என்று பயந்தது தான் நடந்த

கள்ளக்காயச்சல்

காலமை வெள்ளன ஏழரை ஆகியும் காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும் கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை. அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது. அண்ணலின் நடிப்போ மகாநதியானது. அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது - ஒத்திய புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது. வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும் கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான் வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான். இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில் மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ?- கொத்த மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள் பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ! நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால் நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள். வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!

சாலையோர தேநீர் கடை

சாலையோர தேநீர் கடை கோடை மழை நாசி நெடி தாவாரத்தில் இரண்டு கதிரை நானிருக்க இழுத்துப்போட்டான் ஏ ஆர் ரகுமான் பிடிக்கும் என்றான்.  ராஜா என்றான் சுஜாதா என்றான். ரசல் பீட்டர் டோம் ஹான்ஸ் என்றான் ராஜபக்ஸ ஒரு ஷிட் என்றான். ராஸ்பெரி கொஃபி இரண்டு நாக்கு புரள ஓர்டர் செய்தான். “70 பர்சன்ட் பொருத்தமாம்” "இந்த பேரண்ட்ஸ் ஆர் சோ சில்லி”  என்று சொல்லி சிரித்தான். “நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்”  - என்று மழையை பார்த்து கவிதை சொன்னான். “Enough is enough. “ “வா போய் நனைவோம்” என்றேன். “சட்டை நனைஞ்சு சளி பிடிக்கும், லேட்டர்” என்றான் “போடா புளுகு மூட்டை”

அவளேகினான்.

மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன. இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல் அவதாரங்களுக்கு தயாராகின்றனர். சூரியன் தீக்குளித்தவன் போல வெப்பம் மேலேறி அலறுகிறான். தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள். அவள் வருகிறாள். சித்தார்த்தர்கள் போதிமரத்து குயிலிசையில் மயங்குகிறார்கள். ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார். வரவேற்பரையிலோ வைரமுத்து. எறும்புக்கும் கவிதை வருகிறது. அவனிடம் வருகிறாள்.

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

  அவை வணக்கம். தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி. கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும் மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே. தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.  

காத்திருப்பேனடி!

  என்னைப்போல் நீயும் எவர் அவர் என்று எண்ணுவியோ? எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம்  பண்ணுவியோ ? புரியாத கவிதைகள் மரியானின் பாடல்கள்  புறநானூற்று சுளகாலே பிடரியில் இட தாளங்கள் இவை யாவும் செய்திடவே இலவு காத்து இருக்கிறியோ? இதுகாலும் எழுதாத கதையொண்டு வச்சிருக்கன். இவரெதுவும் அறியாத கவியொன்று முடிஞ்சிருக்கேன். நீ வந்து திருத்தவென சொற்பிலைகள் பொருட்பிழைகள் ஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும் விட்டிருக்கன்.

கலட்டி

ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள். பொன்னப்பன் துலாவின் மீது போய் வந்து கொண்டிருந்தான்; சின்னையன் இறைத்தான்; தண்ணீர் சென்றோடி உருகும் வெள்ளி என்னப் பாய்ந்தது வாழைக்குள். “ஏனிந்த கஞ்சிக் காரி இன்னும் வந்திறங்க வில்லை?” என்று பொன்னப்பன் பார்த்தான்.

உயிரிடை பொதிந்த ஊரே!

  இந்த ஆண்டு பொங்கல்விழா கவியரங்கில் வாசித்த கவிதை(?) இது. கரும்பிடை ஊறிய சாறு என்ற தலைப்பில் என்னது “உயிரிடை பொதிந்த ஊரே” என்ற உபதலைப்பு. சென்றமுறை கவிதை சொன்னபோது போது “அண்ணே சந்தம் சுட்டுப்போட்டாலும் அண்டுதில்ல” என்று வாலிபன் நங்கென்று குட்டியதால், இம்முறை சந்தம் கொஞ்சம் சேர்க்க ட்ரை பண்ணியிருக்கிறேன். ஓரிரண்டில் நேரிசை வெண்பா முயற்சிகளும் உண்டு. மாட்டருக்கு போவோம்! மறப்போரில் மாண்டிட்ட புறத்திணைக்கு அஞ்சலிகள் இருப்போரில் தமிழ் வளர்க்கும் உயர்த்திணைக்கு வந்தனங்கள் அக்கப்போராம் என்கவிதை அதை சொல்ல அழைத்து வந்த ஆராரோ அவராரோ அவர்க்கெல்லாம் வணக்கங்கள்

மரம் போதும் படர்வோம்

மலை அளவு கருமேகம் அலை அலையா வரு நேரம் கருவறுத்த கறுப்பு தாலி எழவெடுத்த கருங்காலி கட்டியவனை தேடி ஓடி கருவறையில் வாடி வதங்கும் கருமாந்திர தமிழ்சாதி. மலர் படர தேர் கொடுக்கும் பாரி வேந்தன் சமர் இல்லை என்றபின் டொலர் கொடுத்தானில்லை! தேர் வேண்டாம் மரம் போதும் படர்வோம் என்றால் மரம்கொத்தி பறவைகள் வருமாம் என்று தார் ரோட்டில் பேர் எடுக்கும் ஜாரிசாந்தன்! இனியில்லை வழியொன்று வலியெல்லாம் கழியென்று கொடியொன்று வேர்விட்டு மரமாகுது மரம் வெட்டி விறகெடுத்து விலைபெசுது. Photo : Ketha 

காதல் போகி

மேய்வது எல்லாமே மேய்க்கப்படுவதால் மேய்க்கலாம் என்று மேயப்போனவன்! மெய்யெனப் பெய்யும் மழையும் பொய்யன மேனியாம் பொன்னாம், பெண்ணாம் பெண்ணாகரத்தில் இடைத்தேர்தலாம்! கானல் நீராம் ! காட்சிப்பிழையாம்! காதலியாம்! போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதாம் போதாத கனவாம்! பூமியும் பொய்யாம்! படி தாண்டா பத்தினியாம் படலை தாண்டிய பரமனாம்! குஞ்சியழகும் கொடுந்தானை கோட்டழகும் குமட்டுதாம். நெஞ்சத்து நல்லம்யாம்! ஒரு போல்லாப்பும் இல்லையாம்! புங்குடுதீவு புகையிலையாம்! பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமாம்! போகமாம், மோகமாம், மோசமாம் முப்பது நாளில் மாசமாம்! முன்னூறே நாளில் போகியாம்!  

மறதிக்கு மருந்து மாஸ்டரிண்ட பிரம்பு!

  ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. கேட்டு/வாசித்து விட்டு சொல்லுங்கள்! யார் அந்த கோகிலவாணி என்று யோசிப்பவர்கள், உங்கள் கண்ணாடியில் போய் கேட்டுக்கொள்ளுங்கள்!   தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். பரணிகள் பலவும் முழங்கிய தேசம். அதை பரணிலே போட்டுவிட்டு படகேறியவர் நாம். நாம் தமிழர்! பனி விழும் தேசத்தில், பட்டதெல்லாம் மறந்துவிட்டு படகுக்காரும், பத்தினியும் பளிங்கினால் ஒரு மாளிகையும் கட்டியவனுக்கு பட்டென்று சுட்டது எதுவோ? அதுவே சுயத்தை என்றான் ஒருவன். சுரத்தை வந்த நேரம் சுற்றம் எல்லாம் சுடுகாட்டில் பரத்தை அழகின் செழி

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

  சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது. ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது. The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related. எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.  இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்

குவா குவா ஹைக்குவா!!

              பாடசாலை எதிரே            படையினர் காவலரண்,            உள்ளே சீருடைகள்! அடையாள அட்டை எடுத்து வச்சியா? அம்மா கேட்டாள் இன்று சுதந்திரதினம்! இந்தை இப்பிறவிக்கு இருமாதரை என் சிந்தையாலும்… கொய்யால என்னை முதல்ல தொடுடா Its been fourteen years! மணலாறு வெலிஓயா! நயினாதீவு நாகதீப நாமம்தான் இனி! “ச்சே என்ன மனிதன் இவன்” பக்கத்தில் அமர்ந்திருப்பவரை திட்டினேன் பஸ்ஸில் கர்ப்பிணி 2002ம் ஆண்டு இருக்கும். நானும் அறிவிப்பாளர் குணாவும் சேர்ந்து சக்தி FM இல் ஹைக்கூ பற்றிய ஒரு தனி நிகழ்ச்சி நடத்தினோம். நல்ல பல ஹைக்கூக்களை சேகரித்து, அவற்றின் தோற்றம், இலக்கணம் என ஒரு முழு நிகழ்ச்சி செய்தபோது மகிழ்ச்சி தான். இதிலே முதலாவது ஹைக்கூ நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போது கிருஷாந்தி சம்பவத்தை சுட்டி நிற்கிறது என்று சொல்லி sensor செய்து விட்டார்கள். இன்னும் பல ஹைக்கூக்கள் அந்த காலத்தில் எழுதினேன். எல்லாம் தொலைந்து விட்டது. தோன்றும்போது எழுதுகிறேன். எப்போதோ ஒருமுறை, கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன், ஒரு ஹைக்கூ வெளியானது. யா