சுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட, நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர், படு ஸ்மார்ட்டாக நடந்துவருகிறார். “எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா” என்னும்போது தீபிகாவின் சேலை தலைப்பை ஸ்டைலாக தூக்கிப்போட, தீபிகா வெட்கப்பட்டு ஓடுகிறார். தலைவரின் அதகளம் ஆரம்பிக்கிறது. “அன்னம், மடவண்ணம்” என்னும்போது மிகவேகமான நடை. “கொடிவேண்டுமா, குடை வேண்டுமா“ என்ற ஒவ்வொரு தாள கட்டுகளிலும், இருவரும் சேர்ந்து தோன்றும் ஒவ்வொரு பிரீசிங் காட்சிகளிலும் ஒரு கட். ஒருமுறை கண் மேலே எகிறும். மற்றப்பக்கம் நாடி தாழ்ந்து காதலுடன் பார்க்கும். “படை வேண்டுமா, பகை வேண்டுமா, உனைப்போல வேறார் ஏது?” என்னும்போது எஸ்பிபி சிரிப்பும் சேர்ந்துகொள்ள, தலைவர் நளினமாக அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுக்க, அப்படியே பிரமாண்டமான பின்னணி நடனங்கள் சேர்ந்துகொள்ள…..