தூங்காவனம்
அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!
.……
தீரா உலா
காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட சந்திப்புக்களைப்பற்றி எத்தனைதடவை பேசியிருக்கக்கூடும்? யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். “காதல் கவிதை” படத்தில் கமலிக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் என்று சின்னி ஜெயந்த் சொல்லுகின்ற காட்சி ஒன்றுகூட இருக்கிறது.……
ஓ காதல் கண்மணி
படம் பார்க்கையில் மனம் முழுதும் நிறைந்திருந்தது. ஒரு “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” மாதிரி. ஒரு “அலை பாயுதே” மாதிரி. ஒரு “அழகிய தீயே” மாதிரி. எம்மை காதலால் கட்டிப்போட்டு ரசிக்கவைத்த பீல் குட் படம். அவ்வளவுதான் விஷயம். முடிகையில் தியேட்டரில் இருந்தவர்கள் எல்லோருமே எம்மோடு சேர்ந்து தன்னிச்சையாக கைதட்டினார்கள். முகம் முழுதும் புன்னகையோடு வெளியேறினார்கள்……

அன்புள்ள சுகாசினிக்கு!
"ஓ காதல் கண்மணி" படத்துக்கு மவுஸ் பிடிக்கத்தெரிந்தவனெல்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது என்று வீணாக தம்பிமுத்தரோடு வம்புக்கு போயிருக்கிறீர்கள். சும்மா விட்டிருந்தா ரெண்டுபேர் செருப்பை கழட்டி வச்சதோட விஷயம் முடிஞ்சிருக்கும். இப்போ வாறவன் போறவன் எல்லாம் துப்பப்போறான். எதுக்கு? ஆனானப்பட்ட மணிரத்னமே பேசாமல் இருக்க உங்களுக்கேன் அறச்சீற்றம்?
![Linga-Movie-Latest-Photos-1_thumb[2] Linga-Movie-Latest-Photos-1_thumb[2]](http://lh3.googleusercontent.com/-v4_rouuc7yQ/VWAQY-WqUKI/AAAAAAAAMuA/RpR7zgHp5PA/Linga-Movie-Latest-Photos-1_thumb%25255B2%25255D_thumb%25255B7%25255D.jpg?imgmax=800)
லிங்கா
மிஸ்ஸிங் எதுவென்றால் ரஜினி ஸ்டைல். “கொஞ்சம் மேலே பாரு கண்ணா” பாஷா காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. சும்மா சடக்கென்று ஊஞ்சலை உருவி உட்கார்ந்து நீலாம்பரிக்கு முன்னாலே கால்போடும் படையப்பா இல்லவே இல்லை. “பஜ்ஜி சீன்” இல்லை. அண்ணாமலை போர்ட் மீட்டிங் கிடையாது. “கறுப்பு ஆடு” கத்தவில்லை. ரஜினியின் ஸ்டைல் என்பது வெறும் கிமிக்ஸ் கிடையாது. அது கதையின் ஓட்டத்தோடு வரும்போது அதன் பரிமாணமே வேற லெவல். இந்தப்படத்தில் ஸ்டைல் தனித்தனியாக வருகிறது. காட்சியோடு ஒட்டியதாக எதுவும் … ம்ஹூம். அவ்வப்போது ஸ்டைலாக முடியை சுருட்டினாலும் அதையும் சந்தானம் காமடியாக்கிவிடுகிறார். பன்ச் வசனங்களும் அப்படியே. மிக வேகமாக கட கடவென்று பேசிவிட்டு திடீரென்று பிரேக் போட்டுப் பேசும் அவருடைய வசனநடை எதுவுமே இந்தப்படத்தில் இல்லை.
மணிரத்னம்
“பூ கொடியின் புன்னகை” பாடல். காட்சியில் நடிக்கும் இருவரும் நிஜமாகவே காதல் வயப்படுகிறார்கள். “நீ ஒருமுறை திருப்பிக்கொண்டால், என் உயிருக்கு உறுதியில்லை” என்ற வரிகள் வரும் வேளையில் கௌதமியும் மோகன்லாலும் தன்னிலை மறப்பார்கள். காட்சி குழம்பிவிட, இயக்குனர் கட் கட் என்பார். கிராமபோன் அடிக்கடி அபஸ்வரமாக நிறுத்தப்படும். மீண்டும் ரீடேக். மீண்டும் உணர்ச்சி வசப்படல். மீண்டும் கிராமபோன் கீச்சிடும். நிஜத்தில் காதல் திரையில் காட்சிப்பிழை. அப்படி என்றால் திரையில் காதல் நிஜத்தில் காட்சிப் பிழையாகிறது. கவிதை. அதை கமராவில் கொண்டுவருவார் நம்மட ஆள். படம் இருவர்.
![deepika-padukone-still-from-kochadaiyaan_1394439744160[3] deepika-padukone-still-from-kochadaiyaan_1394439744160[3]](http://lh3.googleusercontent.com/-yfKG76JyOY4/VWAQbcDW5fI/AAAAAAAAMug/B6S6fF-DWSM/deepika-padukone-still-from-kochadaiyaan_1394439744160%25255B3%25255D_thumb%25255B13%25255D.jpg?imgmax=800)
கோச்சடையான் - வடை போச்சே!
தீபிகா படுகோன், சிரிக்கும் போதெல்லாம், பார்ப்பவன் அந்த இடத்திலேயே பேதி போகிறான். செம டெரரா இருக்கு பாஸ். என்னாத்த கப்ஷர் பண்ணி மூஞ்சில போட்டானுகளோ தெரியேல்ல. தீபிகா தப்பித்தவறி இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், தற்கொலை முடிவுக்கும் போகலாம். அவ்வளவு மோசம். அதுவும் மெதுவாகத்தானில் இருக்கும் சில நடனங்கள். சர்க் சரக்கென்று கால் கையை அடித்து, கல்வியங்காட்டுச் சந்தியில், கோழி வாங்கி உரிக்கையில், அது படக் படக்கென்று செட்டை அடிக்குமே. ஞாபகம் வந்தது.
![237776_Soundarya-Rajinikanth-Wallpapers-Wide-Tamil-Actors-Actresses_1280x800[12] 237776_Soundarya-Rajinikanth-Wallpapers-Wide-Tamil-Actors-Actresses_1280x800[12]](http://lh3.googleusercontent.com/-qR20EiqfPtc/VWAQdAoAlRI/AAAAAAAAMwI/dikM5rj_X2I/237776_Soundarya-Rajinikanth-Wallpapers-Wide-Tamil-Actors-Actresses_1280x800%25255B12%25255D_thumb%25255B4%25255D.jpg?imgmax=800)
கோச்சடையான் – முன்னோட்டம்
ரஜனி யார் என்று அவர் மகளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ரஜனியிடம் நாங்கள் என்ன ரசிக்கிறோம் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை. பிரமாண்டமே இல்லாத படம் தான் அருணாச்சலம். செம மொக்கைப்படம். ஆனால் நாங்கள் இப்போதும் சண் டிவியில் போனால் பார்ப்போம். “மாங்குயில் கூவுது, மாமரம் பூக்குது, மேகம் வந்து தாலாட்ட” என்று தலைவர் ஒயிலாக நடக்கும்போது பக்கத்தில் ரோஜா ஐந்து இஞ்சியில் ஜட்டி மாதிரி ஒன்று போட்டிருப்பதை எந்த ரசிகனும் கவனிப்பதில்லை. எமக்கு திரையில் தேவை, ரஜனி .. ரஜனி .. ரஜனி.
பாலு மகேந்திரா
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
கடல்
கர்ணன், சத்தியவான் சாவித்திரி, இராவணன் என்று எல்லாமே இந்து புராண கதைகளாக இருக்குதே. ஒரு சேஞ்சுக்கு கிறிஸ்தவ மத கதையை எடுப்போமா? என்று மணிரத்னத்துக்கு அட்டமத்து சனி உச்சத்தில் இருக்கும்போது சுகாசினி அட்வைஸ் பண்ணியிருக்கலாம். கிறிஸ்தவ மத கதைக்கு எங்கே போறது? என்று மணிரத்னம் யோசிச்சிருக்கலாம். ஜெயமோகன் கிறிஸ்தவ கதைகள் ஐந்தாறு வைத்திருக்கிறார். நம்ம நாகர்கோவில் பக்கம் தான். பின்னுவார் என்று சுகாசினி சொல்லியிருக்கலாம். அவரு தான் இந்திய தத்துவ மரபியல் கோட்பாடுகளை எழுதுவாரே என்று மணி குழம்பினாலும், இல்ல பாஸ் எழுதுவார் நம்புங்க என்று யாராவது சொல்லியிருக்கலாம். வந்த சான்ஸை விடுவானேன் என்று ஜெயமோகனும் “கடலும் கடல் சார்ந்த பகுதியையும் சேர்த்தபடி கிறிஸ்தவ கதை ஒண்ணு நம்மகிட்ட இருக்கடே” என்று சொல்லியிருக்கலாம். விளைவு?
விஸ்வரூபம்
ஆரம்ப காட்சிகளில் கதக் கலைஞராக நடை உடை பாவனைகளில் நளினம் காட்டுகிறார். அதை தவிர்த்து மிகுதி இடங்களில் கமல் வெகு இயல்பாக நடித்திருக்கும் படம். தேவையே இல்லாமல் எல்லா வேடங்களிலும் தானே வர முயலாமல், ஒரு அக்ஷன் திரில்லருக்கு எது வேண்டுமோ அது, அந்த டைமிங், “அவருடைய நடிப்பு பெரிதாக ஒன்றுமில்லை” என்று படம் முடிந்து போகும்போது எவனோ ஒருவன் சொல்லிக்கொண்டு போனான். கமல் நடித்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை.
Life of Pi
“நாமெல்லாம் நட்டநடு சமுத்திரத்தில் தனியனாக அல்லலுறும் சிற்றறிவு ஜீவன்கள். எங்களை காத்து மீட்க எப்போதுமே இறைவன் ஒருவனே எம்மோடு இருப்பான்” என்ற ஆன்மீகத்தின் ஆதார தத்துவத்தை இத்தனை தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்காயாக எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் ஒரு படம் கொடுக்கிறது என்றால் .. what a film!
![1276894408724[4] 1276894408724[4]](http://lh3.googleusercontent.com/-EWPRhl_T8Qs/VWAQi28vStI/AAAAAAAAMvg/HGFldRcJe2A/1276894408724%25255B4%25255D_thumb%25255B5%25255D.png?imgmax=800)
சூப்பர் ஸ்டார்
ரஜனிக்கு methodical acting தெரியாது என்றில்லை. ஆனால் அவர் அதை எப்போதும் தவிர்த்து வந்திருக்கிறார். அது செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள், என் வழி தனி வழி என்பது தான் அவர் பிலோசபி! ஆனாலும் அவ்வப்போது அது வெளியே வரும். முள்ளும் மலரும் காளி அந்த வகை. ஒரு உணர்ச்சி மேல்வயப்படும் பாசக்கார கோபக்கார அண்ணன், தங்கை மேலதிகாரி என்று சுற்றும் கதை. ரஜனியின் நடிப்பு அபரிமிதம். சுயகௌரவம், அண்ணன் பாசம், கையிழந்த சோகம், ஆனால் அதை வெளிக்காட்டாத பிடிவாதம் என ரஜனி காட்டும் உணர்ச்சிகள் hall of fame ரகம். “கெட்ட பையன் சார் அவன்” என்றும் சொல்லும் போது வாய் சிரிக்கும், கண் அழும் .. Genius!
குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)
பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும். அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில் புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும்.
காட்சிக் கவிதை
தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.
கவிதை.........!