காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். "இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும் நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்? வாழ்க்கை என்னும் பயணம். இதை மாற்றிடவா முடியும்?" தொண்ணூறுகளில் இந்த பாடலை முணுமுணுக்காமல் எவனும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டான். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது.