இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி


நா. பார்த்தசாரதியின் இந்தச் சிறுகதை 1966ம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்தது. ஐம்பது வருடங்களில் தமிழில் இலக்கிய விமர்சன உலகில் உள்ள அரசியல் அப்படியே மாறாமல் இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. எஸ்.பி.எஸ்களும், மர்ம பலராமன்களும் வேறு வேறு பெயர்களில் அலைந்துகொண்டேயுள்ளனர். இலக்கிய இராட்சசன், இலக்கியக் கொம்பன் போன்ற பத்திரிகைகளும் இன்னமும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டாவது விமர்சகர்களுக்கு மரணமே கிடையாது. சிறுகதையைப் பகிராமல் இருக்கமுடியவில்லை.

சகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்
என்னை “எப்போது தமிழிலே எழுதப்போகிறீர்கள்?” என்று இங்கு வந்திருக்கும் எஸ்.பி.எஸ் ரேணுகா துரைசிங்கம் ஒருமுறை கேட்டார். அப்போது ஜேகேயின் கொல்லைப்புறத்துக் காதலிகள் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படி எழுதவேண்டும் என்றேன். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருடைய எழுத்துகள் மீது காதல் கொண்டேன். 

William Shakespeare, George Bernard Shaw இருவரும் சமூகக்குறைபாடுகளை கேலிப்பேச்சு, அதாவது satire மூலம் மக்களுக்கு அவர்கள் காலத்துக்கேற்ற பாணியில் எடுத்துரைத்திருக்கின்றனர். உதாரணமாக , Touchstone என்று ஒரு முட்டாள் செக்ஸ்பியரின் நாடகத்தில் அப்பப்போ தோன்றி மக்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் உதவினார் .

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வுகள்

கந்தசாமியும் கலக்சியும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வின்போது இடம்பெற்ற உரைகளின் தொகுப்பு.

சுபாசிகன்
கேதா
சகுந்தலா கணநாதன்
ஜூட் பிரகாஷ்
முருகபூபதிநிருஜன் - தமிழ்த்தாய் வாழ்த்து
ஜெயலலிதாபதினொரு வயது இருக்கலாம். எங்கள் ஊர்களில் எல்லாம் மண்ணெண்ணெய் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரவு முழுதும் ஆறேழு படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கின்ற சீசன் அது. ஸ்பொன்சர்களுக்காகப் பழைய படங்களை முதலாவதாக ஏழு மணிக்கே போடவேண்டிய தேவை எமக்கு அப்போது இருந்தது. ஒருமுறை இரண்டு லீட்டர் எண்ணெய் இலவசமாகத் தந்தார் என்பதற்காக, அவர் சொல்லிப் போட்ட படம்தான் “எங்கிருந்தோ வந்தாள்”

ஹீரோ சிவாஜி. மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த படம். ஹீரோவுக்கு மனநிலை குழம்பிய சமயத்தில் அவரை எல்லோரும் கைவிட்டுவிட, ஹீரோயின் மாத்திரம் பரிவுகாட்டிப் பணிவிடை செய்வார். ஆனால் ஹீரோ குணமானதும் அவருக்கு நிகழ்ந்ததெல்லாம் மறந்துவிடும். தமிழில் இதுபோல் ஆயிரம் திரைப்படங்களும் நாவல்களும் வெளியாகிவிட்டன. “எங்கிருந்தோ வந்தாள்”தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று நினைக்கிறேன்.
“எங்கிருந்தோ வந்தாள்” படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ள பாத்திரம் சிவாஜிக்கு. ஆனால் அடித்து ஆடியது என்னவோ அதில் ஹீரோயினாக நடித்த ஜெயலலிதா. வழமையாக ஜெயலலிதா எடுத்து நடிக்கும் பாத்திரங்களிலிருந்து சற்று வேறாக கொஞ்சம் அடக்கி வாசிக்கும் நடிப்பு. மிக இயல்பாகச் செய்திருப்பார். “நான் உன்னை அழைக்கவில்லை” என்று சுசீலாவில் குரலில் ஒரு பாடல் காட்சி உள்ளது. சிவாஜி உலகத்தில் உள்ள அத்தனை எக்ஸ்பிரஸனையும் ஒன்றாகப் பிழிந்து தள்ளுவார். ஜெயலலிதா சிம்பிளாக ஒரு flick. பந்து மைதானம் தாண்டிவிழும். பின்னாளில் “சுமதி என் சுந்தரி” படத்திலும் அப்படித்தான். நடிகை வேடம். ஆனால் மிக சப்டிலாக நடித்திருப்பார். “பொட்டுவைத்த முகமோ” பாடலில் தோன்றி நடித்த ஜெயலலிதாமீது காதல் கொள்ளாதவர்கள் எவரும் இலர். எக்காலத்திலும். 

எனக்கென்னவோ ஜெயலலிதா என்ற நடிகையை பல எம்.ஜி.ஆர் படங்களினால் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. அவருடைய திறமை அவர் எம்ஜிஆர் தவிர்ந்த ஏனையோருடன் நடித்தபோதே வெளிப்பட்டது.

“இரு மாங்கனிபோல் இதழோரம்” என்ற பாடலைக் கணீரென்று பாடியிருப்பார் ஜெயலலிதா. பாடகியாகவே தனித்து ஜொலிக்கக்கூடிய அளவுக்கு குரல்வளம் கொண்டவர். சில பாடல்களுக்கிடையே அவர் குரல் கொடுத்ததுமுண்டு. “நான் என்றால் அது அவளும் நானும்” என்ற டிப்பிகல் எம்எஸ்வி மெலடியில் இடையிடையே ஜெயலலிதாவின் ஆங்கில சம்பாஷனைகள் இடம்பெறும். “கட்டிய கணவன், கட்டளைப் படியே.., காரிய மாச்சும் குணமுடையாள்” என்று சொல்ல அவர் “In thoughts, birds and bees!” என்பார். அந்த ஆங்கில சொலவடையின் அர்த்தம் புரிந்தால் ரசித்துப் புன்னகைக்கலாம். “புருஷனுக்கு அருகே, சரிசமமாக, அமர்ந்திடத் தயங்கும், பண்புடையாள்” என்று சற்று பயத்துடனேயே ஆண் சொல்ல “Ohh there he goes.., again” என்பார். “அவளொரு பாதி, நானொரு பாதி, என்பதுபோல நடப்பாளே.” எங்கையில் “The better half, than, the bitter half” என்பார். அப்போது அவருடைய எக்ஸ்ப்ரஷன் ... such a smart lady.

இவையெல்லாமே பதின்மங்களில் ஜெயலலிதாமீது எனக்கொரு சொப்ட்கோர்னரை உருவாக்கியிருக்கவேண்டும். போதாதற்கு 97ம் ஆண்டு "இருவர்" திரைப்படம் வெளியாகிறது. இருவரை எந்த முன்முடிபுகள் இல்லாமல் மீண்டுமொருமுறை பாருங்கள். இயல்பாகவும் நைச்சியமாகவும் ஜெயலலிதாவை கல்பனா பாத்திரம்மூலம் மணிரத்னம் செதுக்கியிருப்பார். ஓடும் ஜீப்பிலிருந்து ஆனந்தனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே குதித்துவிடுவார் கல்பனா. ஆனந்தனும் பதட்டத்துடன் தேடிவந்து நெருங்கையில் கல்பனாவின் கோபம் மறைந்து கொஞ்சம் காதல் எட்டிப்பார்க்கும். எல்லாமே calculated moves. எல்லாமே தெரிந்து செய்வது. நிஜ உலக ஜெயலலிதாவின் அத்தனை அடிகளும் அதிகாரத்தினை நோக்கி, அதிகாரத்தைத் தக்கவைக்க, அளந்து எடுத்து வைக்கப்பட்டவைதாம். அதுவும் வாஜ்பாய் அரசாங்கத்தை ஒரு டீபார்ட்டி மூலம் கவிழ்த்த சம்பவத்தை எவர் மறப்பார்.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை நிறையவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவரின் அரசியல்வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆளுமை, தலைமைப் பண்புகள் பற்றி விமர்சனத்துடனான ஆய்வுசார் கண்ணோட்டங்கள் அவசியமானவை. அவருடைய சுயசரிதத்தை சசிகலா போன்றவர்கள் பிறர் உதவியுடன் முழு நேர்மையுடன் எழுதலாம். ஆனால் இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் சாத்தியமற்றவை. இக்கணத்தில் அவைபற்றிப் பேசத் தேவையுமில்லை.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நம்மோடு, நம்காலத்தில் கூட வாழ்ந்த ஒரு பொது ஆளுமை. இப்போது இல்லை என்னும்போது ஏதோ ஒன்று அடிவயிற்றைப் பிசைகிறது. விளக்கம் கொடுக்கமுடியவில்லை. அது எங்கோ ஒரு மூலையில் தனியோர்மத்துடன் வாழ்ந்து கழித்த காஸ்ட்ரோவுடைய மரணமாகட்டும். அல்லது லீகுவான்யூவாக இருக்கட்டும். நம் அயல் தேசத்தின் ஜெயலலிதாவாகட்டும். இவர்களோடு நெருங்கிப்பழகியதில்லை. ஆனால் பாதிக்கிறார்கள்.
இரவு வானத்தை அண்ணாந்து பார்க்கையில், சமயத்தில் நட்சத்திரங்கள் காணக்கிடைக்காதபோது ஒரு வெறுமை கிடைக்குமே. நட்சத்திரங்கள் எல்லாம் தொலைந்துவிட்டனவோ என்ற ஏக்கம் கணம் தோன்றி மறையும். நட்சத்திரங்களுக்கும் நமக்குந்தான் என்ன உறவு?

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்.

சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்.

அஞ்சலிகள்.

கந்தசாமியும் கலக்சியும் - கார்த்திகா

நீண்டதொரு ரயில் பயணம், நீண்ட நாட்களின் பின்னான நல்லதொரு நாவலும்,என் தமிழ் எழுத்தும்.

கடுகதி ரயில் சேவை என்று கடைசியில் கடுகடுப்பாக்கிய 12 மணித்தியாலங்கள்,ஆபத்பாந்தனாய்
"கந்தசாமியும் கலக்சியும்"

முன் பின் தெரியாதவர்களிடம் அவ்வளவாக பேச்சுக் கொடுக்கமாட்டேன்,ஆனால் அவர்கள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் என் பூர்வீகம் முழுவதும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள்,பதிலுக்கு அவர்கள் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் என்று மட்டும் தெரிந்து கொள்வேன்.அப்படிப்பட்ட சக பயணியிடம் தப்பிப்பதற்கு நான் எடுத்துக் கொள்ளும் ஆயுதங்கள் ஒன்று புத்தகம்,இன்னொன்று நல்ல மலையாளப்படம். அச் சகபயணி கொழும்பு பயணத்தை ரத்து செய்து இன்னுமொரு அரைமணித்தியாலதில் அநுராதபுரத்தில் இறங்கிவிடுவார் என்ற செய்தி லாட்டரிச்சீட்டு விழுவதைப்போல.லாட்டரிச்சீட்டு விழுகிறதோ இல்லையோ எனக்கு அவாட ஜன்னல் சீட்டு confirm.பிறகென்ன , ஜன்னலோரம் ,ரயில் பயணம், தனிமை,புத்தகம்,கையில் ஒரு hot coffee இல்லாததுதான் குறை.ஸ்டார்ட் த மியூஜிக்.

ஜேகே அண்ணா,உங்களுடைய "கொல்லைப்புறத்து காதலிகள்" பற்றியே முதல் பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஏதேதோ காரணங்களால் அது முடியாமற் போனது.கொல்லைப் புறத்துக் காதலிகளின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும் உள்ளூரப்பூரிப்பு.நீங்கள் பயணித்த இடங்களில்,பழகிய மனிதர்களில்,விளையாட்டுகளில்,பழக்க வழக்களில்,மொழியாடல்களில் என எல்லாவற்றிலும் எனக்கும் பரிச்சயமுண்டு.That "same blood"moments.உங்களின் சில காதலிகளை நானும் சைட் அடித்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும்."காதலிகள்" என்று சொல்லமுடியாது,உங்கள் கதைக் களம் அமைந்த காலப்பகுதிகளில் எனக்கு 8/9 வயதிருக்கும் என நினைக்கிறேன்.ரங்கனைப் பற்றிய சில ரகசியங்களைக்கூட உங்கள் புத்தகங்களிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.நான் சொல்ல வந்தது என்னவென்றால் அன்றிலிருந்து நான் உங்கள் எழுத்துகளின் விசிறி.

கொல்லைப்புறத்து காதலிகளில் முழுக்க முழுக்க யாழ்ப்பாண மண்வாசனை கமழ்கிறது. அட!யாழ்ப்பாணத்துக்கு ஒரு பாரதிராஜா சிக்கீட்டான்யா என நினைத்துத் திரும்புகையில் இந்தப்பக்கம் கந்தசாமியும் கலக்சியும் மண்ணையும் விண்ணையும் தாண்டி வேறு உலகத்திற்குக் கூட்டிச்செல்லும் யாழ்ப்பாண நெடி கலந்த ஒரு science fiction.இரண்டாவது நூலிலேயே இப்படி ஒரு versatility கொண்டு வருவது ஆச்சரியம் .

இந்த புத்தகம் படிக்க படிக்க எனது மனவோட்டம் இதுதான் ,இந்த மனிதர் எப்படி உருவாகியிருப்பார்.

என்ட சின்ன வயசில வானத்த அண்ணாந்து பார்த்து இதுக்குப் பின்னால என்ன இருக்கும்?
"சூரியன் "
அதுக்குப் பின்னால என்ன இருக்கும் என்டு கேக்க எத்தனிக்கும் நேரம் சோத்தை வாயில வச்சு அடைச்சு
"இந்தா நிலாப் பாரு, அங்க பாட்டி வடை சுடுறா" என்டு சொல்லி திசை திருப்பி
திரும்பவும் அந்தப்பாட்டி விறகுக்கும் ,நெருப்புக்கும் எங்க போ.... "களுக்" அடுத்த கவளச் சோறுடன் தொண்டையில் கேள்வியும் சிக்கிக் கொண்டது.

இதேபோல் அப்பாவோட அப்பா -தாத்தா அப்புறம் கொள்ளு தாத்தா அவேட அப்பா என முடிவிலியாய் போய்க் கொண்டிருக்கின்ற இந்த அப்பன்களுக்கெல்லாம் அப்பன் யாராய் இருக்கும்?

கடவுளுக்கு ஒரே நேரத்தில எத்தனை குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளமுடியும்?எங்கட வாழ்க்கை சீரியல் மாதிரி அவர்ட TV ல ஓடுமா?எங்கட வீட்டு சீரியல் எத்தன மணிக்கு telecast ஆகும் ?சரஸ்வதிக்கு நாலு கை என்டா எப்படி saree blouse போடுவா போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு என்றுமே விடை காணாமல்,கற்பனைகளை அங்கேயே கழட்டிவிட்டு,school,படிப்பு,O/L,
A/L,college,internship,வேலை என்று அந்தச் சிறுமி செத்துச் சுண்ணாம்பாகிப் போகும் வேளையில்..........

இங்கே ஜேகே என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடி அடித்த பந்தொன்று பால்வீதியைக் கடந்து சூபி கிரகத்திலிருக்கும் சுப்பையா வீட்டின் கண்ணாடியைப் பதம் பார்த்திருக்கலாம்,அதை எடுக்கப்போகும் ஜேகே கொலை வெறியுடன் சுற்றும் சுப்பையாவைக் கண்டு நடுங்குகிறார்.இதைப் பார்த்த சுப்பையாவின் பேத்தி மேனகா,பந்தினை சுப்பையாவிற்கு தெரியாமல் இவரிடம் கொடுக்க "முன் தினம் பார்த்தேனே...பார்த்ததும் தோற்றேனே"என Harris Jeyaraj BGM உடன் காதல் அரும்புகிறது.மேனகா செல்லுமிடமெல்லாம்
பின் தொடர்கிறார்.அவர் மணி tution க்கு செல்கிறார் என்று தெரிந்து அங்கு போய் சேர்கிறார்.கவனம் சிதறுவதாக வேலாயுதம் சேரிடம் குட்டும் வாங்கிறார்,அப்புறம் என்ன அனுதாப அலைகள் மேலிட மேனகா "கண்ணும் கண்ணும் நோக்கியா எங்கப்பன் கிட்ட வந்து கேப்பியா" என்று சொல்ல காதல் கல்யாணம் இனிதாக நிறைவேறியது.December vacation க்கு மனைவியுடன் சபரிக்கிரகத்திற்குச் செல்கிறார்,அங்கு சில காலம் கழிந்த பின் தான் பெற்றஅனுபவங்களை ஒரு நூலாக வெளியிடும் நோக்கில் பூமி திரும்புகிறார்.பூமியில் தன் நாட்டுடைய போர்,அரசியல் ,விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளை update செய்து கொள்கிறார்.இந்த புத்தகத்தை எழுதும்போது அம்பியாகவும்(சிறுவன்)அந்நியனாகவும்
(வளர்ந்தவராக) இரு மனநிலைகளில் இதை எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.சிறுபிள்ளைத்தனமான அவருடைய கேள்விகளுக்கான விடைகளை யாரிடமும் கேட்காமல் தானே அதற்கான விடை தேடத்தலைப்பட்டு இந்த பிரபஞ்சம் முழுதும் தன் கற்பனைக் குதிரையை இரக்கமே இல்லாமல் ஓட வைத்திருக்கிறார்.இதுதான் இவரை சிறந்த எழுத்தாளராய் ஆக்கியிருக்க வேண்டும்.

இந்த கதை முழுக்க இழையோடிக் கொண்டிருக்கும் நக்கலும் நையாண்டியும் தான்,கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்லும் Hero.கந்தசாமியின்ட colloquial language-epic.(சில்லுப்படோணும்,சேட்டை கதை,விழல் கதை,அறளை பேந்துட்டுதா,கம்மாஸ் etc)
வடிவேலின்ட comedy scenes பார்ப்பது போல் ரயில் பயணம் முழுதும் தனியாக சிரித்துக் கொண்டே வந்தேன்.என்னைப் பார்த்தவர்கள் நான் பைத்தியம் அல்லது காதலில் திளைத்திருக்கிறேன் என ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.நகைச்சுவையுணர்வினை எழுத்துக்கள் மூலம் உணர்வது இதுவே முதல் தடவை.Hats off to your sense of humour.

சுமந்திரன்,கந்தசாமி,சோமரத்ன,
மிகிந்தர்கள்,புக்கை,சக்கை என பாத்திரப்படைப்புகள் நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் உள்ளன.நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மைச்சம்பவங்களையும் மனிதர்களையும் தான் ஞாபகப்படுத்தின.கந்தசாமிகூட ஒரு வகைல என் பெரியப்பா முறைதான் .இது இப்படி இருக்க கதிர்காமக்கந்தன் நிலை என்னாகுமோ தெரியவில்லை.

அன்றாடம் நாம் காணும் மனிதர்கள்,அரசியல்வாதிகள்,
உபகரணங்கள்,சாப்பாடு என எல்லாவற்றையும் இப்படி ஒரு கோணத்தில் பார்க்கமுடியுமா என்பது இன்னொரு ஆச்சரியம்.

அருந்ததியில எல்லாக் கலியாணங்களும் register ஆகுதல்.பரிசோதனை எலிகள் கடைசியில் எங்கள வேவு பார்க்க வந்தவை என்பதெல்லாம் வேற level.பிரகராதி ,விடுப்பு மீன்கள் உங்கள் கற்பனையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள் .அவற்றின் விளக்கங்கள் அருமை.

எனக்கு இன்னுமொரு டவுட்டு வந்திச்சு.சுமந்திரன் மீண்டும் சபரிக் கிரகத்தில் ஜேகே ஆகப் பிறப்பெடுத்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டு,வாசகர்களை உருவாக்கி,வாகர்களினூடாக அந்த கேள்வியைக் கண்டுபிடிக்கும் ஒரு யுக்தியோ?அதற்கென உருவாக்கப்பட்ட கணணிகள் நாம்தானோ?

சுமந்திரன்,கந்தசாமியுடன் கண்ணுக்குத் தெரியாத கருந்துளையாக மூன்றாவதாக எங்களையும் கூட்டிச் சென்றமைக்கு நன்றி

ஒரு புத்தகத்தை வாசித்து அந்த எழுத்தாளருடைய ஏனைய படைப்புகளை வாசிப்பதைவிட.ஒரு எழுத்தாளரை அவர் பிறந்ததிலிருந்தே வாசிப்பது என்பது அலாதியான விஷயம்.நாம் பாக்கியசாலிகள்.

ஆனா கடைசிவரைக்கும் சொப்பன சுந்தரிய யார் வச்சிருக்காங்க என்ட விடை தெரியாத கேள்வி போல ,இந்தக் கேள்வி என்னவாயிருக்கும் என்டு எங்களையும் அந்த பெருச்சாளி போல முழி பிதுங்க வைத்துவிட்டீர்கள்.

"மிகச்சிறந்த கிழங்குரொட்டி கிடைக்கும் அபிராமி விலாஸ் அமைந்துள்ள இடம் எது?"

"தின்னவேலி"
(கேள்வி இதுவாயிருக்குமோ?நமக்கு சாப்பாடுதான் முக்கியம் அமைச்சரே)

௧ந்தசாமியும் கலக்சியும் -An enjoyable ride

-- கார்த்திகா முருகானந்தவேல்

தமிழில் ஒலிப்புத்தகங்கள்

வேலை மாறியதன் விளைவாக ரயில் பயணங்களில் புத்தகம் வாசிப்பதை வெகுவாக மிஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ஆபத்பாந்தவராக எனக்கு ஒலிப்புத்தகங்கள் வந்துசேர்ந்தன. நான் முதலில் கேட்க ஆரம்பித்தது தாஸ்தாயேவ்ஸ்கியின் இடியட் நாவலை. மொத்தமாக நான்கு பாகங்கள். புத்தகமாக வாசித்தால் எழுநூறு பக்கங்கள்தான் வந்திருக்கும். ஆனால் அந்த ஓலிப்புத்தகம் முப்பது மணித்தியாலங்கள் நீளமானது. கொஞ்சம் அகலக்கால்தான். நட்டாசியா பிலிப்போவ்னா மாதிரியான ஒரு பெண் பாத்திரத்துக்காகவே பொறுமையாகக் கேட்டு முடித்தேன். ஒரு மாதம் எடுத்துவிட்டது. அச்சடித்த புத்தகங்களை மடியில் வைத்து வாசம் பிடித்து வாசித்தவனுக்கு இடியட் நாவலைக் கேட்ட அனுபவம் ஒலிப்புத்தகங்கள் மீது நம்பிக்கையை வரவழைத்தது.

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

"பதாகை" இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம்.

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

பொண்டிங் சிறுகதைக்கான சுட்டி

பொண்டிங்

நன்றி.

சுமந்திரன் வருகை - SBS வானொலி நாடகம்

SBS வானொலியில் ஒலிபரப்பான சுமந்திரன் வருகை நாடகம்.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/cumntirnnn-vrukai-naattkm?language=ta


SBS வானொலி நேர்காணல்

நேற்றைய தினம் அவுஸ்திரேலிய தேசிய வானொலிச்சேவையான SBS இல் வெளியான எனது நேர்காணல்.பகுதி 1

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/puttkngkllaik-kuuvikkuuvi-virrk-veennttiy-kiilllttrmaannn-nilaiyil-ellluttaallr-cmuukm?language=ta

பகுதி 2

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/naannn-elllutuvtu-aavnnppttuttlukkaak-all?language=ta

ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி

"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்"


நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார்.

அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது.

ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று.

ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.

இடியட்

கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும். 

புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முதியவர், சிறுவர் என்ற பலவித பாத்திரக்குரல்கள் உண்டு. ஆனால் ஒலிப்புத்தகத்தில் அவை எல்லாமே இன்னொருவருக்கு சொந்தமாகி அவர் குரலிலேயே வாசிக்கவேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. திடீரென்று பெர்டின்செங்கோ யாரென்ற குழப்பம் வருகையில் முன்னே இரண்டு பக்கங்கள் சென்று பார்த்துவிட்டும் வரமுடியாது. சில வசனங்களை வாசித்தபின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யன்னல்வெளியே வெறித்துப்பார்க்கும் அனுபவமும் இதில் இல்லை. வேண்டுமானால் சற்று நிறுத்திவிட்டுப் பின்னர் தொடரமுடியும். இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் வாகனத்தில் பயணிக்கின்ற அந்த இரண்டுமணி நேரத்தைப் பயனுள்ளவகையில் பயன்படுத்த இதைவிட வேறுவழி தெரியவில்லை.

“இடியட்” நாவலில் பிரதான பாத்திரம் பிரின்ஸ் மிஸ்கின். நேர்மையான அப்பாவி. அந்த அப்பாவியைக் கொண்டே சென்பீட்டர்ஸ்பேர்க் சமூகத்தின் அபத்தங்களை தாஸ்தாயேவ்ஸ்கி(வழமைபோல) புட்டுப்புட்டு வைப்பார். தாஸ்தாயேவ்ஸ்கியின் பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களைவிட எப்போதுமே விசித்திரங்களாக, புரியாத புதிர்களாக இருக்கும். அதில் ஒருவித மிகையும் இருக்கும். சூதாடியில் வரும் பலீனா, சூதாட்டக் கிழவி. இடியட்டில் வரும் நட்டாசியா பிலிப்போவ்னா என எல்லோருமே மிகைத்தன்மை வாய்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கரீனாவைக்கூட அவ்வளவு குழப்பமான சஞ்சலம் நிறைந்த பெண்ணாக dramatize பண்ணி தோல்ஸ்தாய் காட்டியிருக்கத்தேவையில்லை. பெண்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்கள், புதிரானவர்கள் என்கின்ற பொதுப்படையான ஆண்பார்வையின் விளைவே அது என்று நினைக்கிறேன். சமகாலப் படைப்பாளிகளான லாகிரி(Interpreter of Maladies), கோர்ட்சே (Disgrace) போன்றவர்கள் பெண்களை விசித்திரம் நிறைந்தவர்களாகக் காட்டுவதில்லை. மனச்சிதைவுகள் எல்லோருக்குமே பொதுவானவை. அவை இயல்பு. அதில் ஆண் பெண் வேறுபாடுகள் இல்லை. மனச்சிதைவுகளை அதீத மிகையோடு காட்டவேண்டிய எந்தத்தேவையுமில்லை. ஆனால் அப்படிக்காட்டும்போது ஒருவித கிளர்ச்சி ஏற்படுகிறது. வசதியான அடித்து ஆடக்கூடிய படைப்பு வெளி கிடைக்கிறது. எழுதும்போதும், வாசிக்கும்போதும். அதை வசதியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவே. அட்டைப்படக் கவர்ச்சியின் செவ்வியல் வடிவம் இது. லோலாண்ட் என்கின்ற லாகிரியின் சமீபத்திய நாவலில் வருகின்ற கௌரி பாத்திரம் ஒரு மனச்சிதைவு நிறைந்த பெண் பாத்திரத்தை எவ்வளவு இயல்புத்தன்மையோடு சப்டிலாகக் காட்டலாம் என்பதற்கு பாலபாடம். 

இடியட்டில் பிரின்ஸ் மிஸ்கின் பேசுகின்ற ஒரு வசனம் இரண்டுநாட்களாக மனதைப்போட்டு அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
Colia : “Hippolyte is an extremely clever boy, but so prejudiced. He is really a slave to his opinions.’ 
Prince : ‘Do you say he is consumptive?’
நம்மில் பலர் முன்முடிபுகளால் நிறைந்திருக்கிறோம். நம்முடைய கருத்துகளின் அடிமைகளாக இருக்கிறோம். அவை சரியாக அமைவதற்காக எந்த எல்லைக்கும் போகத்தயாராகவிருக்கிறோம். ஒருவரை எடைபோட்டுவிட்டே அவருடன் பழகத்தொடங்குகிறோம். நாம் போட்ட எடைக்கு அமையவே அவரை உருவகிக்கிறோம். கல்லுக்குள்ளே சிலை ஏலவே இருக்கிறது, அதை செதுக்கி வெளியே எடுக்கும் வேலையை மாத்திரமே சிற்பி செய்கிறார் என்பது கவித்துவத்துக்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் நிஜத்தில் சிற்பத்தை, கல்லைக் காணும்போதே (சமயத்தில் அதற்கு முதலே) சிற்பி உருவகித்துவிடுகிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனபிம்பத்திற்கேற்ப கல்லைச் செதுக்க ஆரம்பித்துவிடுகிறார். அதனாலேயே எல்லா சிற்பங்களும் நமக்கு ஏலவே தெரிந்த காந்தியாகவோ பாரதியாகவோ அப்துல்கலாமாகவோ சிவபெருமானாகவோ இருக்கிறார்கள். ஒரு குப்பனோ, சுப்பனோ, நமசிவாயமோ, நாகமுத்துவோ சிலையில் தெரிவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி சொல்லும் விஷயம் “கல்லை ஏன் செதுக்குவான்?” என்பது. அப்படியே விட்டுவிடவேண்டும். அது ஆவுரஞ்சியாகட்டும். தோய்க்கப்பயன்படட்டும். தான்தோன்றி என்றால் கோயில் கட்டி கும்பிடவும் முடியும். ஆனால் நீ செதுக்கி அதன் இயல்பைக் கெடுக்காதே. 

ஒரு இடத்திலே கார்னியா மிஸ்கினைப்பார்த்து "நீ ஒரு முட்டாள்" என்பான். பிரின்ஸ் எந்தச் சலனமுமில்லாமல் இப்படிப் பதில் சொல்லுவான்.

‘I think I ought to tell you, Gavrila Ardalionovitch, that though I once was so ill that I really was little better than an idiot, yet now I am almost recovered, and that, therefore, it is not altogether pleasant to be called an idiot to my face. Of course your anger is excusable, considering the treatment you have just experienced; but I must remind you that you have twice abused me rather rudely. I do not like this sort of thing, and especially so at the first time of meeting a man, and, therefore, as we happen to be at this moment standing at a crossroad, don’t you think we had better part, you to the left, homewards, and I to the right, here? I have twentyfive roubles, and I shall easily find a lodging.’

இன்னுமொரு இடத்தில் மீண்டும் இந்த முட்டாள் பேச்சு வருகையில் பிரின்ஸ் இப்படிச் சொல்லுவான்.

“I am often called an idiot, and at one time I certainly was so ill that I was nearly as bad as an idiot; but I am not an idiot now. How can I possibly be so when I know myself that I am considered one?”

திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.

How can I possibly be so when I know myself that I am considered one?

The Human ExodusToday marks the 21st anniversary of the tragic internal displacement of Jaffna, a northern city of Sri Lanka.

I was fifteen at the time. I was living with my sister who had just finished her Advanced Levels and my brother who had started to practice as an English teacher. Both my parents were not in the town by then. My cousin sister hosted a Deepavali fiesta with a delicious mutton curry and yellow rice as per my family’s usual festive custom. My tummy was full after three or four servings and I could barely walk. “Kaushalya akka, I never had such Deepavali lunch ever after!”

It was around three in the afternoon, an announcement was made throughout the entire Valigamam region that people are to be moved from the town before the dusk. Three wheel auto vehicles (Tuk Tuk) were running around the city with loudspeakers on their top announcing the news. Sri Lankan Army had initiated a military operation, was marching towards the city from the north and there was a rumor that it had reached as far as to Achchuveli and Kopai, just few kilometers from the town, and little time left before the only few routes to Chavakachcheri getting cut off. A potential fighting breakout in a civilian dense area could create a humanitarian disaster. Most of us started panicking after the announcement and the sky rocketing rumours. My sister had no idea what to do and we hardly knew anybody living in Chavakachcheri. Where could we go?

Unfortunately, there was no other option but to evacuate. We packed our suitcases. We had two or three “posh” suitcases from Middle East where our father worked in the early eighties. We packed some clothes, kitchen utensils, grocery items, Jewelry and our school text books. We tied the suitcases on our bicycle carriers with nylon rope. There had always been some dilemma on what to take and not. Would you go for the valuables? Valuables in what sense? An expensive camera against a kilo of rice? A big television box against a thermo flask and a kettle? You never know. You never know when you would be able to come back. May be next day, may be in a week time or in a month.

In our case, it was two long years!

My sister had only one thousand rupees at that time. Brother might have had another couple. I had twenty rupees which I kept in my shorts pocket. I also secretly kept my tennis ball and the cricket bat in the suitcase, something my sister wasn’t aware of. Had she known, couple of drumsticks would have replaced bat’s place. I had a big suitcase in my carrier. Two “Chandrika” bags on both sides of the front handle and, obviously, my backpack with school books. My sister had a similar setup so had my brother. He also had an extra sack full of things on his cycle bar. Our plan is to leave early so that we could reach Chavakachcheri town before it gets dark. Chavakachcheri is merely seventeen kilometers away from Jaffna town and it wouldn’t take little more than an hour before we get there. That’s what we thought.

We started pedalling. By the time we reached Nallur temple area, we realized it’s going be a nightmare. The traffic was so congested we could hardly even walk, let alone pedaling. The whole Jaffna city of ten hundred thousand people was moving on the narrow street to Chavakachcheri like wounded snails. 

Nothing helped us. The sky started to drizzle. The nylon knot of the suitcase started to lose its grip. My Bata slipper was giving trouble and the imbalance of the weight didn’t help pushing the bike either. A chaos. 

The time was dripping so did we. Every kilometer of our walk literally consumed more than two hours. In between, many things happened. The army started to shoot para-lights in the area, a usual sign before any bombings. Couple of war planes flew over us too. Fortunately they retreated, a rare katabasis. We were hungry and tired. We soon lost our brother in the chaos. Me and my sister were holding together somehow. But around 1 a.m. in the morning, we too got separated. We both were screaming and crying, calling each other’s name, so did so many other people too for their missing ones. Luck was on our side, we somehow managed to find each other in half an hour time. That half an hour period was my worst nightmare ever. It also helped our relationship to an extent that we became inseparable there on. 

We reached Chavakachcheri in the morning around eight, took us almost sixteen hours to get there, what should have been an hour long cycle ride in normal circumstances. We then moved to Palai, another three hours long journey, stayed there for a month before getting displaced to Vanni where we lived for the next two years. 

This longest worst nightmarish walk should never have happened. Sri Lankan ethnic conflict is ugly and ruthless. Both the warring parties were responsible for this and many other humanitarian chaos in the country. Sri Lankan army shouldn’t have been shelling and air bombing the civilian areas during their course. On LTTE’s behalf, they should have handled this situation better. It makes sense asking the people to displace from the vulnerable areas. But it doesn’t make sense asking people to do it in a single night for political advantages. I have to say, my experience is nothing compared to what unraveled during the last phases of Sri Lankan civil war. Yet this was my experience, a brutal unforgettable and probably life changing one too. My beloved city of Jaffna was never the same. 

I was never the same either.

பத்தில வியாழன்காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன்.
“தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்”
அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம்? குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது? பிறகென்ன? சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது. 
“ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள்? என்ன இந்த நேரம்?”
சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை. 
“தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”

பொப் டிலான்பொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

ஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்குச் செய்தால் எல்லோரையும் பாடலாசிரியர்கள்(Song writers) என்று அழைப்பார்கள். அநேகமான சமயங்களில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதுமுண்டு. மைக்கல் ஜாக்சன் கூடுதலாக நடன அமைப்பையும் தானே பார்த்துக்கொள்வார். பொப் டிலானும் தானே பாடலை எழுதி இசையமைத்து பாடவும் செய்பவர். பொப் பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை தேவையற்றவை. 

பொப் டிலான், மைக்கல் ஜாக்சன் போன்றோ, போல் மக்கார்டினி போன்றோ ஒரு தனித்துவ அற்புதக்குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவருடைய பலம் அவர் எழுதும் பாடல் வரிகள். அந்த வரிகளைக் கடத்துவதற்குத் தேவையான இசையை மாத்திரம் பெரும்பாலும் கிட்டாரின் உதவிகொண்டு அவர் நிகழ்த்திவிடுவார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இன்னமும் அது நிலைத்து நிற்பதற்கு அவருடைய இந்த எளிமையான minimalist பாணியே காரணம் என்பார்கள். “Music & Lyrics” என்ற திரைப்பட நாயகி கூறுவதுபோல இசை என்பது காம இச்சைபோன்றது. அது நம்மைக் கவரவே பயன்படும். ஆனால் அதற்குமேலே உள்ளார்த்தங்களை அறிந்து நீடித்து நிலைக்க பாடலின் வரிகளே ஆதாரம் ஆகும். இதனை என்னால் இளையராஜாவின் திருவாசகம் கேட்கும்போதே ஆத்மார்த்தமாக உணரமுடிந்தது.

பொப் டிலானுக்கும் எனக்கும் ஒரு பூர்வஜென்ம பந்தம் உண்டு. ஒருவகையின் அவருக்கு நான் நன்றிக்கடனும் பட்டவன். பொப் டிலானுடைய ஒரு கவிதை எங்களுடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்தது. தொண்ணூற்றைந்தாம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி சென்றதும் ஆங்கில இலக்கியத்தை லிப்கொ அகராதி உதவியுடன் படிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போது குறிப்பிட்ட ஒரு கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வரவேண்டுமென்று நான் நேர்த்திக்கடன் வைத்திருந்தேன். காரணம் அந்தக்கவிதையை வெறுமனே பாடத்திட்டம் என்பதையும் தாண்டி நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தலாம். பலமுறை வாசிக்கும்போது அதன் உள்ளர்த்தம் எங்கேயோ ஒரு மூலையில் சிறு சலனத்தை நிகழ்த்தியே செல்லும்.  அதுவும் பதினாறு வயது இளைஞனுக்கு நிகழ்த்தியது. நான் விரும்பியதுபோலவே கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வந்தது. என்னைப் பாஸ் பண்ண வைத்தது. அந்தக்கவிதை பொப் டிலான் எழுதிய “Blowing In The Wind”

எனக்கு அப்போது பொப் டிலான் ஒரு பாடகர் என்பதெல்லாம் தெரியாது. ஆன் ரணசிங்க, ரொபேர்ட் புரோஸ்ட்மாதிரி தனிக் கவிஞர் என்றே நினைத்திருந்தேன். இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது நம்முடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தை. பொப் டிலான், ரொபேர்ட் புரோஸ்ட் போன்றோரின் கவிதைகள், "The Sacred Land", "Madam Curie" போன்ற அற்புத கட்டுரைகள், Necklace என்று சிறுகதை இலக்கியத்தின் வரைவிலக்கணம் என்று சொல்லக்கூடிய கதை, மடல் டூவா, சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் போன்ற நாவல்கள் என்று அந்தப் பாடத்திட்டம் பல நூற்றாண்டு இலக்கியங்களை சிறப்பாகக் கோடிகாட்டியது. ஆங்கில இலக்கியங்களை மேலும் மேலும் வாசிக்கத் தூண்டியதும் அதுவே. ஆனால் நம் தமிழ் இலக்கியப் பாடத்திட்டம் பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்களோடும் மரபுக் கவிதைகளோடும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது மகா சோகம். செல்லம்மாளும், மரையாம் மொக்குவும் நிச்சயம் தமிழிலக்கிய பாடத்திட்டத்தில் இருந்திருக்கவேண்டாமா?

பாடல் வரிகள் இலக்கியம் ஆகா என்கின்ற ஒரு விமர்சனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. பொப் டிலானுக்குக் கிடைத்த இந்தப்பரிசு அந்த எண்ணத்தை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய உதவட்டும்.

இப்போது பொப் டிலானின் கவிதை.

Blowin' in the Wind
How many roads must a man walk down
Before you call him a man?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand?
Yes, and how many times must the cannon balls fly
Before they're forever banned?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
Yes, and how many years can a mountain exist
Before it's washed to the sea?
Yes, and how many years can some people exist
Before they're allowed to be free?
Yes, and how many times can a man turn his head
And pretend that he just doesn't see?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
Yes, and how many times must a man look up
Before he can see the sky?
Yes, and how many ears must one man have
Before he can hear people cry?
Yes, and how many deaths will it take 'till he knows
That too many people have died?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
மீசை வைத்த கேயிஷா - கருத்துகள்

"மீசை வைத்த கேயிஷா" சிறுகதைக்கு கிடைத்த கருத்துகள்.சுபாசிகன்

ஆஹா! என்ன சொல்வது.... கற்பனையில், போனபோக்கில், flow இல்லாது எழுதியது போல் தோன்றினாலும், இப்படி எழுதியதே அழகாக இருக்கிறது. மனதின் உண்மைகளை அப்பட்டமாக்குகிறது. ஒவ்வொரு வரியும் அனுபவித்து வாசித்தேன். ஜே.கே., ஒன்று சொல்ல வேண்டும். நான் அழகிய அம்மன் சிலைகள்/படங்களை ஒரு ஆண் இண்டிமேட் உணர்வு கொண்டு பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு அணுகியிருக்கிறேன். இரசித்திருக்கிறேன். 

'இயற்கைக் கடன்கள் எதுவாயினும் அக்கர்மாக்கள் நிறைவேற்றும் போது உச்சம் கிடைக்கிறது. தவம். கொண்டாட்டம். கட்டுடைத்தல்'. எவ்வளவு உண்மை. ஆறாவது அறிவின் பலன், மனிதனுக்கு எல்லாம் எந்திரமயமாகவோ, மேம்போக்காகவோ ஆகிவிட்டது . 

இப்போது வசந்தகாலம். பறவைகளின் கொண்டாட்டம் பார்த்திருக்கிறீர்களா? எது பற்றியும் கவலையில்லாத காதல். வீட்டைச்சுற்றி நிறைய 'மக்பை' பறவைகள். மௌனமாக அவைகளின் களிப்பைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நேற்று, நாளை, உறவு, சொந்தம் எது பற்றியும் பயமற்ற, எல்லாமற்ற நிலை. ஏகாந்தம்! கடவுளைக் கும்பிடும்போது கூட இந்தப் பொறுமை கிடைப்பதில்லை. காதல் காட்சி கையெடுத்துக் கும்பிடத்தக்கது.

*******************


கேதா

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

கேயிஷாவை நேற்று இரவு வாசித்தது முடித்தேன். 

வழக்கமாக உங்கள் கதைகளில் இருக்கும் நதி போன்ற ஓட்டம் இதில் உணரவில்லை. அமைதியான ஏரியில் படகு வலிப்பது போலிருந்தது. கதை என்னை நகர்த்தவில்லை, கதையில் நானே நகர்ந்துகொண்டிருந்தேன்.

சில வருடங்களுக்கு முன் சிறுகதையை எப்படி உருவாக்குகிறீர்கள் என்று யசோ அக்கா கேட்ட்தாக நீங்கள் சொன்னது நினைவிருக்கிறது.

இந்த கதை அதற்கான பதிலை சொல்கிறது என்று நினைக்கிறேன்.

எழுத்தின் வேறுபட்ட வடிவங்களை வாசகனுக்கு உணர்த்தும் ஒரு பயணமாகவே இதைப் பார்க்கிறேன். 

எல்லா வேறுபாடுகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் என் மட்டுப்படுத்தப்படட வாசிப்பனுபவம். இருந்தாலும் இயல்பான கேயிஷா, பூதக்கண்ணாடியால் படைக்கப்பட்ட கேயிஷா, களையப்படட ஆடைகளை மட்டும் காட்சிப்படுத்தி கற்பனைக்கு இடம் கொடுத்தல் போன்ற வேறுபாடுகளை உணர்ந்தேன், இரசித்தேன்.

கேயிஷாவிற்கும் சிவாவிற்குமான உறவு, படைப்பாளிக்கும், கருப்பொருளுக்குமான உறவாகவே படுகிறது. படைப்புகள், உருவான பின் பறவைகள் காவிச்செல்லும் விதைகளை போல எங்கோ போய் விழுகின்றன. சில விருட்ச்சமாகலாம், சில வீணாகலாம். படைப்புகளும், படைப்பாளியும் பேசிக்கொள்ளும் விதத்தை இரசித்தேன்.

இதில் பணம் எதற்காக படிமம்? இந்த இடத்தில் நான் குழம்பிப்போகிறேன்.

அப்படி என்றால் சிவா படைப்பாளியா வாசகனா? 

சிந்தனையை கிளறி, மண்டையை காயவைத்து,

இப்பிடி ஒரு பத்தி எழுதவச்சு, எட் சட் ரா, எட் சட் ரா.....

*******************

ரோசி கஜன்

உலகின் அத்தனைக் காதலையும் விட உயர்ந்த காதலில் கட்டுண்டு மணம் புரிந்த கணவன் மனைவி ...ஐந்து ஆண்டு மணவாழ்வின் பின் இன்றைய நிலை என.. ஆரம்பத்தில் இதைக்காட்டி ...இப்படியான நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை அலசுவதாகவே மீசை வைத்த கேயிஷா எனக்குத் தெரிந்தாள்.

அதிஉயர்ந்த காதல் என்ற உணர்வில் மூழ்கியிருக்கையில் புலப்படுவது எல்லாமே அதன் மயக்கத்தின் தாக்கத்தில் உயர்வாகவே பட்டுத் தொலைக்கும்.

அங்கு வெற்றுப் பார்வை இருப்பதில்லை.

அது எத்தனை நாட்களுக்கு !

ஒரு கட்டத்தில் சலித்துப் போகையில் என்னாகும்.

அதோடு, ஏதோவித கட்டாயத்தில் இணைகையில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் தொட்டுச் செல்கின்றது.

ஆரம்பத்தில் அழகாக பிடித்தமாக இல்லையென்றாலும் மனதை ஏமாற்றி அதை விரும்புவதும், போகப் போக அடிக்கடி நிஜத்தின் தலையீட்டால் ஏற்படும் விரிசலும் ...சலிப்பும் ..முடிவில் தனித் தனித் தீவுகள்.

‘பூதக்கண்ணாடி இல்லாத வெற்றுக் கண்ணால், புனைவின்றி, கனவோடை இன்றி, தம் விருப்பு வெறுப்புகளின் தாக்கமின்றி, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமின்றி எத்தனைபேரால் தம் இணையை பார்க்கவும் புரியவும் ஏற்கவும் முடிகின்றது. (இது கதையில் வருது.. எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது.)

அவளை/னை அவர்தம் இயல்புகளோடு ..அப்படி அப்படியே ஏற்க முடிந்தால்..

இங்கு சிவாவுக்கு, பெண்ணை மீசை வைத்துப் பார்க்கப் பிடிக்குது. அது அவளுக்கு அழகாக இருப்பதாக எண்ணுகிறான் அவன். அதே, மீசை வைத்துக்கொள்ள அவளுக்கு பிடிக்குமா என்று அவன் யோசிக்கவில்லை ..

வாசிக்கையில் ஆங்காங்கே நம்மில்உள்ள சிவாக்களையும் கேயிஷாக்களையும் தரிசிக்கலாம்.

*******************

ஜெயதர்சினி


இப்ப தங்கட பிள்ளையத் தாங்களே பெத்துக்கிறாங்க. அதோட பொம்பிள்ளபிள்ளைக்கு அதிகம் சிலவழிக்கவேண்டியிருக்கு. ஆம்பிளப்பிள்ளைக்கு சீதனம் குடுக்கோணும். மாப்பிள்ளையோ பொண்ணோ பார்க்கும்போது ஐகியூ கூடிய ஆக்களை தெரிந்து காசு குடுத்துச் செய்யூறாங்க. படிச்ச அழகான வசதியான வேலைக்குப் போகிற குணமான ஆள் எண்டு தேடுறாங்க. அப்பத்தான் சந்ததி அப்பிடி வரும் எண்டு. ஆனா தங்கட சைடு எப்பிடி எண்டு பாக்கிறேல்ல. கதையில் பெற்றோர் தாங்கள் வளர்க்கிற பிள்ளை குறிப்பிட்ட குணங்களோட இருக்கோணும் என்று யோசிக்கிற மாதிரி, இப்ப தங்கட பேரப்பிள்ளைகள் இப்பிடி இருக்கணும் எண்டு தாத்தா பாட்டிகள் நினைக்கிறாங்க.


ஆனா இது நல்ல ஐடியா ஒய். இப்பத்தைய இனப்பெருக்க வடிவத்தின் தேர்ந்த செயன்முறை. ப்பா. பீலிங்காவது மண்ணாங்கட்டியாவது. எங்களுக்கு எல்லாமே வேணும். பெர்பெக்டாக வேணும். எங்கடையானதா இருக்கணும் எண்டு தேவையில்லை.*******************

மீசை வைத்த கேயிஷாஒரு கணவன் மனைவி. 

எல்லாக் காதலர்களையும்போல, உலகின் அத்தனை காதல்களையும்விட ஒரு படி அதிகமாகக் காதலித்துக் கல்யாணம் முடித்த கணவன் மனைவி. திருமணமாகி ஐந்து வருடங்களாகின்றன. இருவருக்கும் வேலை. வேலை முடிந்து வீடு. வந்ததும் ஆளாளுக்குக் கையில் ஒரு ஐபாட். யார் யாருடனோ சட்டிங். எதுவெதற்கோ சிரிப்பு. இருவருக்கும் பொதுவாக வரவேற்பறையில் ஓடிக்கொண்டிருக்கும் டிவி. இவர்கள் தமக்கிடையில் மனம்விட்டுச் சிரிப்பதும் பேசுவதும் அவ்வப்போதும் சிணுங்கும் தொலைபேசி அழைப்புகளோடுதான். மற்றும்படி டிவியின் விளம்பர இடைவேளைகளில் “மதியம் என்ன சாப்பிட்டாய்?”, “கரண்ட் பில் கட்டியாயிற்றா?”, “வருட இறுதியில் கம்போடியா போவோமா?”, “இரவு உணவுக்கு பிட்ஸா வாங்குவோமா?” என்கின்ற வழமையான அலுத்துப்போனக் கேள்விகள். இரண்டுவாரங்கள் தொடர்ச்சியாகக் கவனித்தால் பதில்கள்கூட மீளச்சுழற்சிக்குள்ளாவது புலப்படும். எப்போதாவது மழைநாள் இரவு, குளிர், டிவியில் ஒளிபரப்பாகும் பதின்மவயதில் ரசித்தப்பாடல், இணையத்தில் இக்கொக்னிட்டோ திரையில் பார்த்த கூசிழிவுப்படம் கொடுத்த எழுச்சி என்ற அற்ப காரணங்களுக்காகக் காமம் மேலிடலாம். காரணங்களைக்கூட சமயத்தில் காமம்தான் தானாகவேத் தேடுகிறதோ என்றுகூடத்தோன்றுகிறது. இல்லாவிட்டால் அன்றைய இரவில் வெறும் பல்லி கொட்டிய உச்சிலேயே எதற்காகச் சம்பவம் நிகழவேண்டும்?

அவர்களின் காமம் தானியங்கிகளாலான இயந்திரத் தொழிற்சாலைபோலவே இயங்குகிறது. எல்லாமே டியூன் செய்யப்பட்ட பொம்மைகள்போல வேலை பார்க்கின்றன. கிரமமாக இயங்கி, சிரித்து, கதைத்து, தழுவி, ஆடை அகற்றி, முத்தம்கொடுத்து என்று உற்பத்திப்பண்டம் ஈற்றில் பொதிசெய்யப்பட்டு சீல் அடிக்கப்படும். தொழிற்சாலை சைரன் ஒலித்ததும் அத்தனை தொழிலாளர்களும் தத்தமது உடை அணிந்தபடியே புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்றுவிடுவர். அப்புறம் தொழிற்சாலை வெறிச்சோடிவிடுகிறது. 

சிட்னியில் ஒரு சந்திப்பு

சிட்னியில் வசிக்கும் புத்தகப்பிரியர்களுக்கு.
வரும் ஞாயிறு நான்கு மணியளவில், சிட்னி முருகன் ஆலயத்துக்கு அருகே இருக்கும் அறிவகம் எனும் இடத்திலே சிறு சந்திப்பு ஒன்றை நிகழ்த்தலாம் என்று ஒரு சிற்றிச்சை.
"கந்தசாமியும் கலக்சியும்" புத்தகத்தைச் சாட்டாகக்கொண்டு கொஞ்சம் டக்ளஸ் அடம்ஸ், டெரி பிரச்சட் ஆகியோரின் நாவல்களைப் பற்றியும் பேசலாம் என்று ஒரு ஆசை.
கூடவே நண்பர்களையும் சந்திக்க விருப்பம். ஐந்துபேராவது வருவதை உறுதிப்படுத்தினால் நிகழ்ச்சியை நிச்சயம் நடத்தலாம். இல்லையேல் கோரம் இன்றி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.
அறியத்தாருங்கள். நன்றி.

02-10-2016 Sunday 4.00 pm
191 Great western high way May hill NSW2145

Yarl Geek Challenge – Season 5கி.பி 1600. 

நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார். 

ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவும் அண்மித்துத் தெரிகிறது. இதனைக் கண்ணுற்ற லிப்பர்ஷிக்கு அன்றிரவு முழுதும் தூங்கமுடியவில்லை. அடுத்தநாளே மரக்குழாய் ஒன்றினைச் சரிக்கட்டி அதனுள் இரண்டு வில்லைகளை சரியான இடைவெளியில் நிலைநிறுத்திப்பூட்டி எல்லாவிடமும் கொண்டுசென்று தூர இடங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார். சாதாரண கண்களுக்குத் தெரியும் எட்டத்துப் பொருட்கள் எல்லாம் அக்குழாயினூடாகப் பார்க்கும்போது மூன்று மடங்கு கிட்டத்தே தெரிந்தன. அடுத்தநாளே லிப்பர்ஷி அக்கண்டுபிடிப்புக்குரிய காப்புரிமையைப் பெற்றுக்கொள்கிறார். காப்புரிமையின் பெயர்,

“For seeing things far away as if they were nearby”.

அரைச்சுக் குழைச்சுத் தடவ


அரைப்பு

“அடி
அரைச்சு அரைச்சுக்
குழைச்சு குழைச்சுத்
தடவத் தடவ
மணக்குஞ் சந்தனமே...!”
மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார்.  அதில் வெளிவந்த சங்க இலக்கியப் பாடல்தான் இந்த "அரைச்சு அரைச்சு".  பாடலின் வரிகள் படான் என்றாலும் (உ.தா சின்ன சேலம் மாம்பழமே, மச்சான் தட்டுற மத்தளமே), வழமைபோல ராஜாவின் இசை நுணுக்கமானது. “சந்தனமே..”யில் விழும் சங்கதியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு மேல் டீடெயிலாக எழுத இதுவொன்றும் இசைப்பதிவு கிடையாது. நிற்க.

“அரைச்சு அரைச்சு” பாடல், வெளிவந்த காலத்தில் பயங்கரப் பேமஸ். யாழ்ப்பாணத்தில் சரிந்து கிடந்திருந்த நியூமார்க்கட் வழியாக நடந்து செல்கையில் குறைந்தது இரண்டு புடவைக்கடை, ஒரு தேத்தண்ணிக்கடையிலாவது இதனைக் கேட்கமுடியும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பட்சத்தில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் ரோட்டுக்குச் சைக்கிள் மிதிப்பதற்குள் முழுப்பாடலையும் கேட்டு ரசிக்கலாம். எல்லாக்கடைகளிலும் ஒரே வானொலி. ஒரே பாடல். பயணவழி முழுதும் தொடர்ச்சியாகப் பாடல் அறுபடாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

ஏனோ இப்பாடலை கடந்த இருபது வருடங்களாக நான் தேடவேயில்லை. முற்றாக மறந்துபோயிருந்தேன். அண்மையில் ராஜாவின் யூடியூப் சனலிலே இதனைப் பதிவேற்றியிருந்தார்கள். கேட்கும்போது மீண்டுமொருமுறை வளையங்கள் சுற்ற ஆரம்பித்தன. ரிப்பீட்டில் கேட்டபடியே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மெல்லுறவு

அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது.

கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்?

ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

தேவகியின் முகநூல் பதிவு


மெல்லுறவு சிறுகதையின் உபபிரதி*********************

நன்றி : புதியசொல்

ச்சி போ
ஏன் என் அடிவயிற்றை
எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல
ஏன் எப்போதும்  என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்?
நான், என் மனம், என் விசித்திரங்கள் என்று
என்னோடு நான் பேசும் பொழுதுகளில் மட்டும்
எதற்காக ஒலிபெருக்கிகள் பூட்டிக் கடவுளைத் தேடுகிறீர்கள்?
நான் கூரையைப்பிரித்துவைத்து
வானில் நட்சத்திரங்களை எண்ணுகையில்
எதற்காக உள்ளே எட்டிப் பூராயம் பார்க்கிறீர்கள்?
தண்ணீர்த் தொட்டியை ஏன்  உங்களது ஆவுரஞ்சிக்கல் ஆக்குகிறீர்கள்?
கிளியோபற்றாவின் ஊசிகளோடு எதற்காக என்னையே சுற்றிச் சுற்றி நீங்கள் அலையவேண்டும்?
ஈக்களைத் துரத்தக்கூட எதற்காக வாளைச் சுழற்றவேண்டும்?
எப்பொழுதுமே யாரையேனும் நிராகரித்துக்கொண்டேஇருக்கிறீர்களே, ஏன்?
நான் என்று நினைத்து எதற்காக யாரோ ஒருவரைத் திட்டுகிறீர்கள்?
நிற்க.
எனக்கெங்கே மதி போனது?
நான் ஏன் இங்கேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்?
உலகம் முழுதும் எனக்காகத் திறந்து கிடக்கையில்
ஒரு கண்ணாடிக்குவளைக்குள் நான் ஏன் முடங்கிக்கிடக்கவேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் அப்படி என்னதான் உறவு?
என் மரண வீட்டுக்குக்கூட நீங்கள் வரப்போவதில்லை.
சொட்டுக்கண்ணீர் விடப்போவதில்லை.
கல்வெட்டைக்கூடத் திறக்கப்போவதில்லை.
என் மகிழ்ச்சி, என் துக்கம், என் உறவு, என் பகை
எதுவுமே உங்களை உறுத்தப்போவதில்லை.
நான் ஏன் உங்களையே நினைத்து அழுங்க வேண்டும்?
உங்களோடே சுற்றி அலையவேண்டும்?
யார் நீங்கள் எனக்கு?
உங்களைவிட்டு ஓடித்தப்பி
ஒலிபெருக்கிகளின் வீச்செல்லைக்கு அப்பால்
கிளியோப்பற்றாவின் பொறாமைக்கு வெளியே
நாய்கள் தாண்டாத ஆற்றுக்கு அப்பால்
பாரிய நீர்நிலைக்கு அருகில் ஒரு தண்ணீர்த்தொட்டியாய்
நான் மாறிவிட மாட்டேனா?
யாருமே எட்டமுடியாத
கூரையே முற்றுமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்
ஒளிந்துகொள்ளக்கூடாதா?
மழை காட்டில் பெய்தாற் போதாதா? 
இங்கு கிடந்து மாரடிக்க என்ன வினை எனக்கு?
உங்களோடு எதற்கு முட்டிமோதிக்கொண்டிருக்கிறேன்?
காதலியின் கடைக்கண் பார்வைக்காய் ஏங்கும் நிலை எதற்கு?
உங்களைப்பார்த்து எதற்காகப் பொறாமை கொள்கிறேன்?
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிலைத்தகவல்,
ஒரு புகைப்படம், ஒரு காணொலி
ஒரு திருமணம், ஒரு மரணம், ஒரு பிறந்தநாள்,
கிடைத்த விருப்பு, கிடைக்காத விருப்பு
கிடைத்த கருத்து, கிடைக்காத கருத்து
கிடைத்த வாழ்த்து, கிடைக்காத வாழ்த்து
ஒரு நட்பு விண்ணப்பம், ஒரு நட்புத் தடை
மற்றவரின் நட்பு, மற்றவரின் விருப்பு
அறியாதவரின் நட்பு, அறியாதவரின் விருப்பு
எல்லாமே
எதற்காக எனக்குப் பதட்டத்தைக் கொடுக்கவேண்டும்?
எனக்குப்பிடிக்காதவர்களுக்கு கிடைக்கும் இகழ்ச்சி
எதற்காக என்னை மகிழ்விக்கவேண்டும்?
என்னோடு இருப்பவரின் உயர்வு
எப்படி என்னை அசூயைப்படுத்துகிறது?
அத்தனைபேரும் இழுக்கும் வடத்தை
எப்போது என் கையும் பற்றிக்கொண்டது?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கின்றன
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கவேண்டும்
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
என்னை அழகனாக்க எத்தனைபேரை
அரியண்டப்படுத்தவேண்டியிருக்கிறது?
என்னை அறிஞன் ஆக்க எத்தனை பேரை
முட்டாளாக்கவேண்டியிருக்கிறது?
என்னை இலக்கியவாதியாக்க எத்தனைபேரை
நிராகரிக்கவேண்டியிருக்கிறது?
நான் மட்டும் தனித்திருக்க எத்தனைபேரை
கொலைசெய்யவேண்டியிருக்கிறது?
என்னுள் உறைந்திருந்த அரக்கனுக்கு
எப்படி நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்?
ஒரு சாகசக்காரனுக்குரிய இச்சையை
என்னுள் ஏன் தூண்டிவிட்டீர்கள்?
இத்தனைக்குப் பிறகும்
இவ்வளவு அகோரத்துக்குப் பின்னரும்
இமயமளவு விசனத்துக்குப் பிறகும்
ஏன் என் வால் என் சொல் கேளாமல்
சுழன்றுகொண்டே கிடக்கிறது?
ச்சி போ.
************** 
படம் : Sayuri Ito

கந்தசாமியும் கலக்சியும் - ஆனந்த் பாலா

கந்தசாமியும் கலக்சியும் - அறிவியல் +அரசியல் + நையாண்டி - Its a Bloody Mary Cocktail!!
எங்களுக்கு எல்லாம் அரை டவுசர் போட்ட அஞ்சாம் வகுப்பிலிருந்தே அறிவியல் என்றால் அடி வயிற்றில் புளி கரைக்கும். அறிவியலும், அறிவியல் மாஸ்ட்டரும் குனிய வைத்து கும்மிய மறத் தமிழர் வம்சம் நாங்கள்..! ராஜ ராஜ சோழன் காலத்திலேயே அறிவியலை எல்லாம் கூரை மீது ஏத்தி விட்டு, கலையின் ஆழம், ஆழம், ஆழம் சென்று "ஆலுமா, டோலுமா" வை கண்டெடுத்த சாதனையாளர்கள். அப்படி இருக்க இந்த கந்தசாமியும், கலெக்சியும் - படலைல தல சினிமா விமர்சனம் எழுதும் ன்னு ஆசையோட காத்திருந்தா இந்த நாவல update பண்ணிட்டு ஒரு வாரத்துக்கு escape ஆயிடும். அடுச்சு புடுச்சு அத்தோட முடுஞ்சுதுன்னு பாத்தா தல கடைசில புக்காவே release பண்ணி புடுச்சு. சரி ஆனது ஆய் போச்சு படுச்சு தான் பாத்திருவோம் ன்னு எடுத்தா..
"பூமியப் பத்தி ஒரு அற்புதமான intro.. முடிவா, இந்த லூசுக் கூட்டத்தில் ஒருவர் தான் கந்தசாமி!!" கதையோட ஹீரோவுக்கு என்ன ஒரு opening!! அப்ப தான் ஒரு நம்பிக்க வந்துச்சு. கந்தசாமி மேல பாரத்த போட்டுட்டு பக்கத்த தள்ளுன்னா.. climax ல ஜிகர்தண்டா பாத்த producer மாதிரி கண்ணுல தண்ணி வர "இத படிக்கற audience ஒவ்வொருத்தனும் கை தட்டி தட்டி சிரிப்பான் டா!!" சிரித்துக் கொண்டே வளர்கிறது கதை.

பூமி அழியறத இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டாரேன்னு பாத்தா அதுக்கு மேல பல matter கள் இருக்கிறதால பூமிக்கு அவ்வளவு தான் scope.
matter என்பதை வேறறற ஒரு மார்க்கமாய் புரிந்த கொண்ட தமிழ் ரசிகன் நான். இங்க என்னடா ன்னா dark matter க்குள் முரட்டுக் குத்துக் குத்தி, அறிவியலை விளக்கும் போது அறிவியலின் ஆழத்தை, இருப்பை, எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத அதன் complexity ஐ புரிந்து கொள்ள முடிகிறது. அப்போதும் நம்மை கந்தசாமியே காப்பாற்றுகிறார்.

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் climax இல்லாமல் post modern style லில் சம்பந்தம் இல்லாத முடிவு தான் பல சம்பந்தங்களை ஏற்படுத்துகிறது. எங்கோ படித்ததாய் ஞாபகம் "A new story begins at the end of a good story!" கந்தசாமியும், கலெக்சியும் ஒன்றை தொடக்கி விட்டு முடிகிறது.
அறிவியல் என்பது ஒரு அலெக்ஸ்சண்டர் குதிரை. அதில் அலுங்காமல் குலுங்காமல் சிரித்துக் கொண்டே அரசியல் பேசிய படி பகடி செய்து கொண்டு எங்களை பயணம் செய்ய வைத்த ஜே. கே வுக்கு மிகுந்த நன்றிகள்

நன்றே செய்க

கடந்த சிலவாரங்களாகவே எனக்கு மிகவும் பிடித்த ஒரு அண்ணரின் தந்தையார் சுகவீனமில்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சந்திக்கச் செல்லவில்லை. செல்லுபடியாகாத உப்புச்சப்பற்ற காரணங்களால் அடுத்த கிழமை, அடுத்த கிழமை என்று பிற்போட்டுக்கொண்டேயிருந்தேன். நமக்குத்தெரிந்தவர்களை மரணம் அண்டாது என்கின்ற ஒரு ஆழ்மனது நம்பிக்கை எப்போதுமே எம்முள் இருக்கிறதோ என்னவோ. 

அந்த நம்பிக்கை அண்மைக்காலத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. பத்து, இருபது வயதுகளில் எனக்குத்தெரியாத தாத்தா, பாட்டிமார்களே அதிகம் இறந்துகொண்டிருந்தார்கள். முப்பதுகளில் இப்போது அங்கிள்களும் அன்ரிகளும் பிரியத்தொடங்கி இருக்கிறார்கள். சிறுவயதில் நான் ரசித்து வளர்ந்த ஆளுமைகள் இப்போதெல்லாம் ஒவ்வொருவராய் மறையத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் பத்திருபது வருடங்களில் என் நண்பர்களும் பிரியத்தொடங்குவார்கள். ஆர்மிக்காரன் மூவ் பண்ணத்தொடங்கிவிட்டான். தூரத்தில் விழுந்துகொண்டிருந்த ஷெல்கள் நம்மூரையும் தாக்கி, அயலட்டத்தையும்தாக்கி இப்போது வீட்டுவாயிலிலும் விழுந்து வெடிக்க ஆரம்பிக்கின்றன. ஒருநாள் அது என் கட்டிலிலும் விழுந்துவெடிக்கவே செய்யும்.

கந்தசாமியும் கலக்சியும் - ரோசி கஜன்

மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்!

ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள்!

இப்படி, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’.

பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை.

சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் .

பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது.

கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல் படலம் கண்முன்னால் விரிகையில், என மனம், நிஜங்களோடு ஒப்பிட முனைந்ததையும் அடுத்தடுத்த படலங்களிலும் அப்படியே ஒப்பிட்டுப் பார்த்ததையும் மறுக்க முடியாது.

பூமியின் அறிமுகம்; மனித உயிரினத்தை எடை போட்டது; இருவகைப் புத்திசாலிகளின் விளக்கம் என்று ஆரம்பித்து லூசுக் கூட்டத்தில் ஒருவனாக கந்தசாமியை அறிமுகப்படுத்தி, அவரோடு சேர்ந்து எங்களையும் பிரபஞ்சத்தை சுற்றி வரவைத்து...

கந்தசாமி, பாடசாலையில் பிரதம விருந்தினர் உரைக்காக ஒத்திகை தொடங்க முகத்தில் பலமாக ஒட்டிக் கொண்ட முறுவல், அப்பப்போ பெரும் நகைப்பாகி, திடீரென்று அருகில் கரும்பொருள்வாசிகளின் நடமாட்டம் உணர்ந்து அவர்களுக்கு ஒரு ‘ஹாய்’ சொல்லி...

‘கணனி பற்றி உனக்கு அவ்வளவு தெரியாது என்ற கவலையே உனக்கு வேண்டாம். ஏனென்றால் நீயே ஒரு கணினியாக்கும்.’ என்று என்னை நானே தட்டிக் கொள்ளவும் வைத்து...

மைதிலிக்காக மனம் நொந்து, ‘காலைச் சாப்பாடு இப்படி சாப்பிட்டால் எப்படிப் படிப்பாய்?’ என்று ஆதங்கப்பட்டு, கண்ணிமைக்கும் பொழுதில் அவளோடு சேர்ந்து மொத்தமும் காணாமல் போனதும், என்ன காரணத்துக்காக அவள் வந்தாள், எதைச் சொல்ல முயன்றாள் என்று குழம்பி, கடைசியில் அவள் மீண்டும் வர ‘அடடா’ என்று இருந்தது .

“பிள்ள கொஞ்சம் பொறுமையாக கேள்வியைக் கண்டு பிடித்திருந்தால் பூமி இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்குமோ?” என்றும் எண்ண வைத்தது.

நம்ம சோதியரும் குமரனும் மிக்ஸரும்... ‘ஹா..ஹா.., ‘சபாஷ்’ போட வைத்தாலும் அதுவெல்லாம் நாம் கால்பதிக்க வேண்டிய இடமாக்கும் என்ற எண்ணமும் வந்தது. வருங்கால நிஜமாகட்டும்.

சுமந்திரன் வரவில் கற்பனை பறக்க ஆயத்தமானாலும் பறக்கவே செய்தாலும் ஏனோ நிஜத்தின் தொந்தரவு இருந்து கொண்டேதான் இருந்தது.

இதுவரை நான் வாசித்து, என் கருத்துகளோடு கதை முன்னோட்டம் சொன்ன கதைகள் அனைத்துமே கணனியில் வாசித்தவை.

அவற்றில் சிலதுகள் புத்தகமாக வாசிக்கக்கிடைக்கவில்லையே , எப்படியும் வாங்கி இன்னொரு முறை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியும் இருக்கின்றது.

‘கந்தசாமியும் கலக்சியும்’ மிகுந்த ஆவலோடு காத்திருந்து, புத்தகம் கைக்கு வந்ததும் அத்தனை வேலைகளையும் ஓரம் தள்ளிவிட்டு வாசித்து முடித்த கதை.

வாசிக்க விரும்பியவர்கள் இணையத்தில் ‘படலை’ என்கின்ற ஆசிரியரின் ப்ளாக்கில் புத்தகம் வாங்கலாம்.

அதோடு, இரசித்து வாசிக்க பல சிறுகதைகளும் அங்கே கிடைக்கும்.

மருதூர்க்கொத்தன் கதைகள்
“மரையாம் மொக்கு”. ஒரு கடலோரக் கிராமத்தில் வாழும் வறுமை மீனவரான காத்தமுத்துவின் கதை. 
“முன்னங்கை பருமனனான நேரான வரசங்குத்திய சாணளவு அறுத்து, அறுவை வாயின் நடுவைத் தொளச்சி, ஒரு பாகம் நெடுப்பமான கதியாக்கம்பை துவாரத்தில விட்டு இறுக்கி அடிச்சி இணைக்கிறதுதாண்டா மரையாம் மொக்கு” 
என்று கிழவர் ஆதம்பாவா “மரையாம் மொக்கு”வுக்கு விளக்கம் கொடுப்பார். மரையாம் மொக்கு என்பது வாவியில் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணம். சில்லி வலையை நீர்ப்பரப்பினுள் வளைத்துக்கட்டி நீரடியில் ஒளிந்துகிடக்கும் மீன்களை வெருட்டி வெளிக்கொணர்வதற்காக, நீரைத் தாம்தூம் என்று அடித்துக் கலக்குவதற்கு மரையாம் மொக்கு பயன்படும். 

காதர் பக்கென்று கேட்பான்.
“மரையாம் மொக்கைத் தூக்கிப்பிடித்தா தூரத்திலிருந்து பார்ப்பவனுக்கு ரொக்கட் லோஞ்சர் மாதிரிதானே தெரியும்?”

பொண்டிங்
பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை.

மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின்
தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன…

உங்கள் பாஷையில் சொல்வதானால்…
Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும்

அசையும் கரும்பொருட்கள் எல்லாம்
அகக் கண்ணில் தெரிகிறது…
ஓடும் எலிகள் எல்லாம்
விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது…

ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்..
புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது…
நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து
வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட..
இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்…

எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள்
ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி
உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது…

‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..
சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்..
பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின்
சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய்
பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்..

உங்கள் எழுத்துக்களின்
பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி
– காயத்திரி

எழுத்தாளருடன் முரண்படுதல்“நான் என்பது எனக்கு வெளியே இருப்பது” என்றார் ழாக் லக்கான். சிறு வயதில் எனக்கென்றிருந்த அறம் இப்போது என்னிடமில்லை. சிறுவயது நானுக்கும் இப்போதைய நானுக்குமே மிகப்பெரிய வித்தியாசத்தை "நான்" காண்கிறேன். சமயத்தில் அதனை வியப்போடு பார்த்துமிருக்கிறேன். நாளை இதுவும் மாறுமென்றே தோன்றுகிறது. இதில் எனக்கு கெட்டியான இரும்புப்பிடி கிடையாது.

கந்தசாமியும் கலக்சியும்


அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா,
ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா இலங்கை, இந்தியாஇலங்கையில் கொழும்பு,  நல்லூரடி பூபாலசிங்கம் புத்தகசாலைக் கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஏனைய வழிகளில் பெற்றுக்கொள்ள jkpadalai@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.


கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வருடத்தில் அவர் ஆட்களை இனம்கண்டு சிரிப்பார். நான்காம் வயதில் முழுமையாகப் பேசத்தொடங்குவார். பத்துவயதில் சில்மிஷங்கள். பதினேழு வயதில் முதற்காதல். இருபத்தொரு வயதில் முதன்முதலாகத் தனியாகச் சென்று மேற்படிப்போ, வேலையோ செய்யலாம். இருபத்தைந்து வயதில் தன்னுடைய வாழ்க்கைத்துணையைத் தேடலாம். முப்பது வயதில் காலம்முழுதும் நினைவுகூறும்வகையில் அண்ணர் எதையாவது சாதிக்கவுங்கூடும். இப்போது அண்ணர் அந்த எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் நித்திரை கொண்டுகொண்டிருந்தார். அந்தத் தூக்கமும் சுவாசத்தில் ஏறியிறங்கும் நெஞ்சும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும் இமைகளும் விரல்களும் நிம்மதி என்னும் சுகந்தத்தை அந்த வார்டு முழுதுமே நிறைத்துக்கொண்டிருந்தது.

ஏகன் அநேகன்

 

image

விடியக்காலமை மூன்று மணி.

அது ஒரு தனி உலகம். படிப்பதற்கு என்று எலார்ம் வைத்து எழுந்து, தூங்கித் தூங்கிக் கொல்லைக்குப் போய், தூங்கித் தூங்கி முகம் கழுவி, அம்மா தரும் தேத்தண்ணிக்கு வெயிட் பண்ணி, புத்தகம் கொப்பி திறக்கவே நான்கு மணியாகிவிடும். அந்த அதிகாலை அமைதியில் ஒரு மலர்ச்சி கிடைக்கும். நடுங்கும் குளிர். வீட்டு செல்லநாய் கூட குரண்டிக்கொண்டு சாக்குத் துணிக்குள் அயர்ந்து தூங்கும் நேரம். மொத்த ஊருமே தூங்கும்போது நாம் மட்டும் விழித்திருக்கிறோம் என்ற எண்ணமே அலாதியானது. வெளியே மழை சொட்டினால் அனுபவம் மேலும் இரட்டிப்பாகும்.

விழித்திருப்பவனின் இரவு அது.

ராசாளி


நான் ஒரு பாட்டு வெறியன் என்று சொல்லுவதே under statement. ஒரு பாட்டின் இஞ்சி இடுக்கு, சின்னச்சின்னச் சங்கதிகள், இசைக்கோர்வைகள் என்று வரிசையாக, ஒரு பாடலைக் கேட்காமல் வெறுமனே நினைத்துக்கொண்டே ரசிக்கக்கூடியவன். "பொத்திவச்ச மல்லிகை மொட்டு" என்று யோசித்தாலே போதும். ஆரம்ப வயலின்களிலிருந்து கீபோர்ட், புல்லாங்குழல், தபேலா, நாதஸ்வரம், தவில், எஸ்பிபி, ஜானகி, முன்னே நோட்டுகளுடன் இளையராஜா என்று மூளைக்குள்ளேயே கச்சேரி நிகழ்ந்து முடியும். ஒன்பது மணிநேர வேலையில் குறைந்தது அறுபது எழுபது பாடல்களேனும் தினம் கேட்பேன். இசை கேட்டுக்கொண்டிருந்தால் புரோகிராமிங் தானாக இயங்கும். இது எனக்குக்கிடைத்த வரம்.

தமிழ் ஆங்கிலேயர்கள்

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பிரச்சனை இருந்துவருகிறது. நான் ஓரளவுக்கு ஆங்கிலத்தைச் சரளமாகத் தொடர்பாடல் செய்யக்கூடியவன். ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக்கொண்டுள்ளவர்களோடு ஒரு உரையாடலையோ அல்லது பிரசெண்டேஷனையோ செய்வது அவ்வளவு சிக்கல் கிடையாது. 

ஆனால் யாரேனும் தமிழ் தெரிந்தவர் என்னோடு ஆங்கிலத்தில் உரையாடத்தொடங்கினால் என்னுடைய ஆங்கிலம் திக்கித்திணற ஆரம்பித்துவிடுகிறது. எதிரிலே பேசுபவருக்கு நன்றாகத் தமிழ் தெரியும் என்று அறிகின்ற பட்சத்தில் குஷ்புவைகண்ட அண்ணாமலை ரஜனிக்காந்த்மாதிரி "பே பே" என்று திணற ஆரம்பித்துவிடுகிறேன். இது ஏன் என்று தெரியவில்லை.