Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

மெல்லுறவு

அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு இரண்டே நிமிடங்களில் போட்டிருக்கிறான். எல்லாமே ஜனவரி எட்டிலிருந்தே ஆரம்பித்தது. இரட்டை முகமூடி. ஹிப்போகிரிட். இதை வெளிப்படையாக எழுதுவதால் அவளுக்கு என்ன அவமானம்? எதுவுமே இல்லை. அவள் என்ன தவறு செய்தாள்? என்ன மண்ணுக்காக அவள் துவாரகா என்ற பெயரில் எழுதவேண்டும் புனைவு என்று சொல்லிப் பிணைந்துகொண்டிருக்கவேண்டும்? ஒரு முடிவெடுத்தவளாய் குரொப் பண்ணிய படத்தை வேர்ட் டொக்கியுமெண்டில் பேஸ்ட் பண்ணிவிட்டுத் தேவகி மீண்டும் எழுத ஆரம்பித்தாள்.

தேவகியின் முகநூல் பதிவு

மெல்லுறவு சிறுகதையின் உபபிரதி ********************* நன்றி : புதியசொல்

பொண்டிங்

பொண்டிங் இன்னமும் வந்துசேரவில்லை. மழைத்தூறலும் குளிருமாய் இருந்தது. அருண் பொறுமை இழந்துகொண்டிருந்தான். “Where are you?”, மயூரிக்கு மெசேஜ் பண்ணினான். “On the way” என்று ரிப்ளை வந்தது. டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தால் எப்படி டெக்ஸ்ட் பண்ணுவாள்? பொய். வாய் திறந்தால் பொய். சட் பண்ணினால் பொய். எஸ்.எம்.எஸ் எல்லாம் பொய். மயூரி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யாகி நிற்பவள். இன்னமும் அவள் கட்டிலிலேயே கிடக்கலாம். அருகிலேயே அந்தச் சூடானியன்… ச்சிக், பொண்டிங்கை நினைக்கத்தான் கவலையாக இருந்தது. அவனை எப்படி நடத்துகிறார்களோ. பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது. தாம் ஏன் அவ்வாறெல்லாம் தேவையில்லாமல் யோசித்து விசனப்படுகிறோம் என்று அருண் தன்னையே நொந்துகொண்டான். மயூரி எக்கேடு கெட்டால் அவனுக்கென்ன? அவன் எண்ணம், சிந்தனை, கவலை எல்லாம் பொண்டிங்மீதே. மயூரி பொண்டிங்கைச் சரியாகக் கவனிப்பாளா? பொண்டிங் என்ற பெயரை வைத்ததே மயூரிதானே.

சிறுவர்கள் சொல்லும் கதை

  சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி. ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம். சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம்....

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

  கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வ...

வீராவின் விதி

  “The present determines the past” -- Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது. யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி. “நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்” வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசி...

தீராக் காதலன்

  படகு மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.. கங்கைத்தாய் இப்படி துக்கம் அனுஷ்டித்து இதற்குமுன் எவருமே பார்த்ததில்லை. சிறு அலையோ, அசைவோ, நீரோட்டமோ அற்று எவ்வித சலனமுமின்றி அவள் கிடந்தாள். அந்தப் படகோட்டிகூட நீர்த்திவலைகள் தெறிக்காவண்ணம் மிகப்பக்குவமாக துடுப்பு வலித்துக்கொண்டிருந்தான். ஒப்பாரி முடிந்து தூங்குகின்ற பாலைத் தலைவியின்  இரவு போன்று சுற்றுவட்டாரம் முழுதும் ஒருவித நிசப்தம் நிரவியிருந்தது.   தினமும் ஆற்றிலே பாய்மரமேற்றி மீன் பிடிக்கும் வலைஞர்களின் பாடல்கள் எங்கேயும் ஒலிக்கவில்லை. காலையில் மேலாற்று வழியாக தாவிக்குதித்து சூரிய நமஸ்காரம் செய்யும் வாலை மீன்கள் ஆற்றின் படுக்கையடியில்  இருந்த கற்களுக்குள் ஒளிந்திருந்தன.  கர்ணனின் கவச குண்டலங்களை கவர்ந்து சென்ற நாளது போன்று இன்றைக்கும் சூரியன் தயங்கித்தயங்கி வெளிவரலானான். அவனோடு இழவுவீட்டில் ஊடல் கொண்டன தாமரைச்செடிகள். என்றுமே இணை பிரியாத மகன்றில் பறவைகள் தன் துணைகளைக்காணாமல் தென்திசை தேடி பறந்துகொண்டிருந்தன. இராமன் காடேகிவிட்டான்.

கக்கூஸ் - வானொலி நாடகம்

பொதுக்கழிப்பறையில் இருக்கும்போது பக்கத்து அறைக்காரன் நம் "சவுண்டை" கேட்டால் அந்தரமாக இருக்குமே என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டோம். மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது. "பண்புடன்" இதழுக்காக ஸ்ரீதர் நாராயணன் ஒரு சிறுகதை கேட்டபோது எழுதிக்கொடுத்தது. சென்றவருடம் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூல் வெளியீட்டு புரோமஷனுக்காக "தமிழ் அவுஸ்திரேலியன்" பத்திரிகை அவுஸ்திரேலிய  தேசிய வானொலியான எஸ்.பி.எஸ் இல் ஒரு பேட்டியை ஓழுங்கமைத்து கொடுத்தது. பேட்டியை எடுத்தவர் றைசல். என் அதிர்ஷ்டம், றைசல் வெறுமனே கடனுக்கு பேட்டியை எடுக்காமல், பேட்டிக்கு முன்னர் படலையை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார். அப்போதே இந்த "கக்கூஸ்" மற்றும் "குட் ஷாட்" சிறுகதைகள் அவருக்கு பிடித்துவிட்டது. அவற்றை வானொலி வடிவமாக்க அனுமதி கேட்டார். சந்தோஷமாக சரி என்றேன். குட்ஷொட்டை சென்ற வருடமே ஒலி வடிவமாக்கினார். ஆறு மாதங்கள் கழித்து "கக்கூஸ்" ஒலிவடிவமாகியிருக்கிறது. றைசலின் நெறியாள்கையில் குரல் தந்திருப்பவர் பாலசிங்கம் பிரபாகரன்.  வழமைபோலவ...

பச்சை மா

“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு.  மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,

"குட் ஷொட்" சிறுகதை ஒலி வடிவில்.

அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் " குட் ஷொட் " சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி சிறுகதை. இதைத்தொடர்ந்த என்னுடைய வானொலிப்பேட்டி. சிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள். இந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

முன் பதிவுகளுக்கு 2021-10-01 அச்சுப்பிரதிகள் தீர்ந்துவிட்டதால் புத்தகம் இப்போது அமேசனில் மாத்திரம் கிடைக்கிறது. நன்றி. https://www.amazon.com/dp/B0762ZRLZM/ref=cm_sw_r_sms_awdo_1ZXPSMTGVJFX4ZHPHNAE பிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த  விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். மெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் "என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும்.  புத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.   புத்தக விவரம் காப்புரிமை - ஜேகே  பதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au) ISBN-10 : 0992278422 ISBN-13 : 978-0-9922784-2-7 பக்கங்கள் – 344 அட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார் அட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ்...

சியாமா

  சியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க? எதை விட? என்று தெரியாமல் குழம்பினார். "சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா" தாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ...

சப்புமல் குமாரயாவின் புதையல்

  குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். "யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு" கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்...

குட் ஷொட்

  “எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?” வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார். கையில் இருந்த கிளாஸில் கொக்கோகோலாவோடு கொஞ்சம் சஷிவாஸ்; அடிக்கடி ஒரு உறிஞ்சி உறிஞ்சினார். “ஆய்க்” என்று காறியபடியே “டொக்” என்று மேசையில் கிளாசை வைப்பார். சற்றுத்தள்ளி சவுண்ட் சிஸ்டத்தில் டீ.ஆர் “ஒஸ்தீ” என்று கதற, சிலர் பிதுக்கி பிதுக்கி ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் டான்ஸில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜூஆர் அடிக்கடி வந்துபோனார். இன்னொருவர் ஆடும்போது அவரின் பொன்ட்ஸ் அண்டர் வெயார் கங்காரு குட்டி போல எட்டிப்பார்த்தது. ஒருவரின் தோளில் இருந்த இரண்டுவயதுக் குழந்தை கைகளால் தாளம் போட்டு சிரித்துக்கொண்டிருந்தது. ஒரு சின்னப்பெடியன் அறையின் லைட்டை ஒன் பண்ணி ஒப் பண்ணிக்கொண்டிருந்தான்.

MH 370

சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும்.  கடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ...  விதானையாரின் வாசற்படி வந்துவிட்டது.

மரணத்தின் பின் வாழ்வு.

  “டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான்.

மண்ணெண்ணெய்

  கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “ என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா ?” “ இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ” ” அதுக்கு ?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா ? எண்டு வந்திட்டன். ” ” ஏன் இங்க வந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும் போய் துலைஞ்சிருக்கலாமே ” குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார். “ இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது.... ” “ ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா ? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள் .. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும் ? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல ”

ஷண்முகி

  வாசலில் ஓட்டோ நின்றது. இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். உயரமான தகர கேட். உள்ளே ஒன்றுமே புலப்படவில்லை.  போன் பண்ணிவிட்டு வந்திருக்கலாமோ? என்று மனைவியிடம் முணுமுணுத்தேன். ஓட்டோ ஓட்டிவந்த ராஜா அண்ணா ஒன்றையும் யோசிக்காமல் கேட்டில் “டங் டங்” என்று தட்டினார்.  பத்து செக்கன் கழித்து கேட் அரை அடி திறக்கப்பட, உள்ளிருந்து ஒரு சிறுமி முகம் எட்டிப்பார்த்தது.

இரண்டாம் உலகம்

  தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார். “சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

போயின … போயின … துன்பங்கள்!

  “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);     லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.