கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நாளைக்கு விடுமுறை.
34 செல்சியஸ் வெக்கை.
வெறிச்சோடிய கார் பார்க்குகள்.
வழமைக்கு மாறான கலகலப்பு.
புதியவர்கள் கூட
நத்தாருக்கு என்ன ப்ளான்?
ஷாப்பிங் முடிஞ்சுதா?
விசாரித்தார்கள்.
ரயிலில் ஒரு சிறுமி
லிண்டொர் தந்தாள்.
ஹாப்பி கிரிஸ்மஸ் என்றேன்.
மெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.

கதாவிலாசம்


274
ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.

மண்டேலா

 

Nelson-Mandela-by-Eli-Weinberg-1961

கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.

இரண்டாம் உலகம்

 

578277_10150989535508313_449493115_n

தொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.

“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”

1984


images (1)

 

“சுதந்திரம் என்பது  இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்ல அனுமதிப்பது”
வின்சன். உண்மைகளுக்கான அமைச்சு (Ministry of Truth) திணைக்களத்திலே அவனுக்கு சாதாரண கிளறிக்கல் உத்தியோகம். கட்சியின் வெளிவட்ட மெம்பர். நாற்பது வயது இருக்கலாம். புத்திசாலி. சுயசிந்தனை உள்ளவன்.
கட்சியின், நாட்டின் தலைவர் பெரிய அண்ணர் (Big Brother). கட்சிக்குள் மூன்று வட்டங்கள். உள்வட்டம; மொத்த சனத்தொகையில் இரண்டுவீதத்துக்கும் குறைவானவர்களே இந்த உள்வட்ட கட்சியில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சகலவித வசதியும் உண்டு. வைன் அடிக்கலாம். வீட்டு வேலையாள் வைத்திருக்கலாம். சீனி, சொக்கலேட், கோப்பி என்று எல்லாமே தண்ணியாக கிடைக்கும்.  சக்திவாய்ந்தவர்கள். தலைமைப்பீடம். முடிவெடுப்பவர்கள். இயக்குபவர்கள். The power house.

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

 

images

என் அன்புக்குரிய டமில் மக்களே,

ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் & சச்சின் & …

 

sachin-tendulkar-when-young

சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

வியாழமாற்றம் 14-11-2013: மரத்தில் காய்க்கும் ஆடுimages
மரத்தில் நிஜமாகவே ஆடு காய்க்கும் என்று அண்மைக்காலம் வரை நம்பியிருக்கிறார்கள். ஒற்றை தண்டால் ஆட்டின் வயிறு இணைக்கப்பட்டிருக்கும் என்றும், ஆடு காய்த்து, தனக்கு எட்டக்கூடிய இடத்தில் கிடைக்கும் புல்லை மேய்ந்துவிட்டு, பின்னர் பசி தாளாமல் இறந்துவிடும் என்றும் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். கண்ணால் கண்டதாக கதைவிட்டிருக்கிறார்கள். தண்டை ஓடித்துவிட்டால் ஆட்டின் கதை கந்தல்.
CottonPlantநான்காம் நூற்றாண்டில் அலக்சாண்டர், இப்போது இந்தியா என்று அழைக்கப்படும் பிரதேசத்தை ஆக்கிரமித்தபோது அங்கே மக்கள் பருத்தி உடைகள் உடுத்தியிருந்ததை பார்த்தார்கள். கம்பளி போல இருக்கிறது, ஆனால் மரத்தில் இருந்து எடுக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் சீனத்து புராதன கதைகளில் இப்படி செடியில் இருந்து ஆடு, கோழி முதல் மனிதன் வரை வளருமாம். அதையும் இதையும் இணைத்து இந்தியர்கள் மரத்தில் வளரும் செம்மறி ஆட்டில் இருந்தே கம்பளி எடுக்கிறார்கள் என்று கதை ஐரோப்பாவில் பரவிவிட்டது. இந்த விலங்கை/தாவரத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் தேடியிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். ஜூதர்கள் மரத்தில் காய்க்கும் மனிதன் இருப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.
ஹென்றி லீ என்பவர் “The Vegetable Lamb of Tartary: A Curious Fable of the Cotton Plant” என்று ஒரு ஆராய்ச்சி நூலே எழுதியிருக்கிறார். அதில் கிடைக்கின்ற தகவல்கள் சுவாரசியமானவை.
he told me that this plant, if plant it should be called, had blood, but not true flesh: that, in place of flesh, it had a substance similar to the flesh of the crab, and that its hoofs were not horny, like those of a lamb, but of hairs brought together into the form of the divided hoof of a living lamb. It was rooted by the navel in the middle of the belly, and devoured the surrounding herbage and grass, and lived as long as that lasted; but when there was no more within its reach the stem withered, and the lamb died
அட! என்ன இது லூசுத்தனமா யோசிச்சிருக்கிறாங்கள்? என்று நினைத்தால் அது தவறு. நம் அறிவியல் இப்படித்தான் வளர்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சரி என்று ஒன்றை நிரூபித்து பின்னர் “ம்ஹூம் அதில்ல இதான் சரி” என்றது. நியூட்டனின் விதிகள் ஓடும் இயக்கத்தில் முரணாக இருந்தது என்று ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கும் வரைக்கும் யாருக்கும் தெரியாது. தெரிந்தபோது நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம் கொஞ்சம் தெளிவானது. நீல்ஸ்போர் குவாண்டத்தின் கற்பனைக்கெட்டாத சாத்தியக்கூறுகளை விவரித்தபோது ஐன்ஸ்டீன் நக்கலாக சிரித்தார். குவாண்டம் சரி என்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. நீல்ஸ் போர் அதை இப்படி சொல்வார்.
“நாங்கள் நிஜமென்று நினைக்கும் எல்லாமே நிஜமற்ற பொருட்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது”
இதை புரிய கொஞ்சம் அணுவுக்குள் போய் uncertainity principle ஆராயவேண்டும். இன்னொருநாள் பார்ப்போம். ஐன்ஸ்டீன் இல்லை எல்லாமே certain என்றார். இதுதான் அறிவியல். Science is revision in progress என்பார்கள்.  அந்த தேடல் கூர்ப்பின் அடிப்படை. அதனால் தான் தப்பி பிழைத்திருக்கிறோம். இப்போதைய நிஜங்கள் கூட இன்னொரு இருநூறு ஆண்டுகளில் யாரோ ஒருவனால் உடைக்கப்படும். முதல் உடைபடும் நிஜம் கடவுளாக இருக்கலாம். கடவுளே வந்துகூட அதை உடைக்கலாம்!
நிஜத்தை அறியும் வரை தேடல் தொடரும்… நிஜம்? தேடல் தொடரும்வரை நிஜம் என்பதே கிடைக்காது. இந்த ஆட்டம் ஒன்றே சாத்துவதம்.
Goundamani-Sathyaraj-250_18072008

   வர வர ஜேகே ஜக்கி ஆகிட்டு இருக்கான்டா.. ஜாக்கிரதை
ராமர்பிள்ளை

இவரும் ஒருவகையில் நம்ம வேளாண் விஞ்ஞானி பொன் ஐங்கரநேசன் போல தான். மூலிகையில் இருந்து பெட்ரோல் உருவாக்குவேன் என்று சொல்லி ஒரேநாளில் உலக பிரபலமானார். புறநானூற்றில் இருக்கும் மூலிகை சம்பந்தமான விஷயங்களை வைத்தே பெட்ரோல் தயாரித்ததாக சொன்னார். லீட்டர் ஐஞ்சு ரூபாய்க்கு விற்கலாம் என்றார். நம்பி தமிழ்நாடு அரசாங்கம் மூலிகை பயிரிட என்று 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இரண்டு வருடங்களில் தலைவர் போலி ஆசாமி என்று கண்டறிந்து சிபிஐ உள்ளே தூக்கி போட்டது.  டெட்ராஹைட்ராபூரா, லோலிக் அமிலம் என்று வாயினுள் நுழையாத சில விஷயங்களை தண்ணீரில் கலந்து அண்ணர் உலகம் பூரா பேமஸ் ஆயிட்டார்.
23-ramar-pillai200
சிங்கன் இப்போது என்ன செய்கிறார் என்று கூகிளினேன். செம போர்ம்ல தான் இருக்காப்ல. சிபிஐ விசாரணை இன்னமும் முடியவில்லை. இப்போதும் மூலிகை பெட்ரோல் கொண்டுவரப்போவதாக தான் சொல்கிறார். திசைகாட்டிகள் என்ற தளத்தில் பேட்டி என்ற பெயரில் ஒரு பன்னாடை இவரை சம்பந்தமே இல்லாதை கேள்விகளை கேட்க, அண்ணரும் அடி பின்னியிருக்கிறார். சாம்பிளுக்கு ஒன்று.
நீங்கள் பேசுவதை பார்த்தால் நீங்கள் தமிழ் உணர்வாளர் என்று தெரிகிறது மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?என் வாழ்வில் நான் இருவரை மாவீரன் என்று சொல்வேன் ஒருவர் அண்ணன் பிரபாகரன் மற்றொருவர் வீரப்பன்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இனத்திற்காக வாழ்ந்தவர் அவர் அவரை எவராலும் அழிக்க முடியாது. மேலும் ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஒருவேளை நான் ஈழத்தில் பிறந்திருந்தால் என் கண்டுபிடிப்புகள் உலக அளவில் போற்றப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
senthil-goundamani-250_19022008தமிழ்நாட்டில் மூலிகை பெட்ரோல்காரனுக்கு கூட பிரபாகரன் கிள்ளுக்கீரை ஆகிவிட்டார். அப்புறம் ஜெயலலிதா ஏன் முள்ளிவாய்க்கால் முற்றத்து சுவரை இடிக்கமாட்டா? அடிங்கடா அடிங்க … நல்லா அடிங்க. எவ்வளவு அடிச்சாலும் ஈழத்தமிழன் தாங்குவாண்டா.


காதல் டைம்.

அக்கா திடீரென்று கோல் பண்ணி, ஹலோ கூட சொல்லாமல், “டேய் இதை கேளு” என்றார். அந்தப்பக்கம் போனுக்கூடாக சிஸ்டத்தில் பாட்டு “டன் டின் டன் டின்” என்று ஆரம்பிக்க, அந்த நிமிஷமே தடால் என்று விழுந்தேன். என்ன பாட்டுடா.
Vaagai Sooda Vaa1“சர சர சாரைக்காத்து வீசும்போது”
”சாரைப்பாத்து பேசும்போது”
”சாரைப்பாம்பு போல நெஞ்சு”
”சத்தம்போடுதே”
சுஜாதா வாசித்துக்கொண்டே இந்த பாட்டை இயர்போனில் ஒருமுறை கேளுங்கள். மெல்லிய குளிரில் வீட்டுமுற்றத்தில் இருந்தால் நல்லது. மெல்பேர்ன் ஐடியல். மிதமான ஒலியில் கேட்கவேண்டுமே. காதலி காதுக்குள் வந்து மூக்கு நசு நாடு என்று முட்ட கிசுகிசுப்பது போல கூசசித்தள்ளும். தலை கொஞ்சம் மடங்கி அனிச்சையாய் சிரிப்பீர்கள். ஒத்தை சொல்லில் சொன்னால், காதலிப்பீர்கள்.
உருமியில் வரும் “சின்ன சின்ன கண்ணனுக்கு” பாட்டை கொஞ்சமே ஞாபகப்படுத்தும் இந்த பாட்டுக்கு இசை ஜிப்ரான். மின்னியிருக்கிறார். பாடிய சின்மயிக்கு ஏன் தேசியவிருது கிடைக்கவில்லை?
வரிகளில் கவிப்பேரரசரின் ஆட்சி. ஏறி இருந்து மனுஷன் எழுதியிருக்கு. பாடல் காட்சியும் அதகளம். இவளுக்கு உள்ளம் உடம்பு என்று யாவுமான காதல். அவனோ படித்த அசடு. ஒரு இடத்தில் கரும்பலகையில் “மதி” என்று இவளுக்கு அவன் எழுதக்கற்று தருவான். அவளோ இவனை காதலாய் பார்ப்பாள். “என்ன சனியண்டா, ஒண்டுமே விளங்குதில்ல” என்ற ஒரு ரியாக்ஷன் குடுப்பாள். சின்மயிகுரல்  கீச்சென்று உயர் ஸ்வரத்தில் பாடும் இடம்.
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல … மக்கு நீ…
இதுக்கு மேலே எவன் தாங்குவான். கோல் போட்டேன்.
Vaagai Sooda Vaa Movie Stills 001 04039ஹலோ ..
என்னடா ..இந்த டைம்ல .. வியாழமாற்றம் எழுதேல்லையா?
இல்ல சும்மா … வந்து
என்ன வந்து போய்?
இல்ல .. அது .. காதல்
போனை வச்சிட்டு போய் எழுது!


சொன்னோட வச்சிட்டுது … ..சரியான மொக்கு


கம்பவாரிதி வாங்கச்சொன்ன சீப்பு

அலுவலகத்தில் இருந்தபோது தான் ஈமெயில் வந்து. “ஜெயராஜ் அண்ணா எழுதித்தந்தவர்” என்று இருந்தது. விறுவிறு என்று கொம்பியூட்டரில் எழுத்துரு இன்ஸ்டோல் பண்ணி வாசிக்க தொடங்கினால், முடியவில்லை. கண்ணீர் முட்டி ரெஸ்ட் ரூம் போகவேண்டியிருந்தது. என்ன தவம் செய்தனை ஜேகே?
kampavaruthy_jeyaraj (1)
நான் எந்த மேடை ஏறினாலும் சுஜாதாவுக்கும் கம்பவாரிதிக்கும் மானசீக வணக்கம் சொல்லியே பேச்சை ஆரம்பிப்பேன். அதிலே முன்னவர் எம்மோடு இல்லை. மற்றவர் என்னை வாசித்து, நெருங்கி வந்து கையைப்பிடித்து “முருகா முருகா முருகா” என்று குரல் தழுதழுத்து, ஊரு திரும்பி இப்படி மனம்விட்டு ஒரு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் எனக்கு?
என் படலை எனக்கு இன்னொரு அம்மாவை தெரிந்தது.

கம்பவாரிதி வெறும் கடிதத்தோடு நின்றுவிடாமல் கொஞ்சம் வீட்டுப்பாடமும் தந்திருக்கிறார். சீப்பு பற்றி அவரும் ஒரு கவிதை எழுதி, அதே போல பத்து கற்பனையில் எழுதி அனுப்பு என்றிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஒரு கவிதை என்று ட்ரை பண்ண போகிறேன். நேரிசை, விருத்தப்பா, புதுக்கவிதை, ஹைக்கூ என்று கொஞ்சம் விதம் விதமாக ஆடிப்பார்க்கலாம். இது இந்தவாரத்து கவிதை.
மொட்டைதலை முருகேசன்
        தொப்பிஒண்டு மாட்டிகொண்டு
பெட்டிக்கடை ஓடிபோயி
        சீப்புரெண்டு வாங்கிவந்தான்.
கண்ணாடி முன்னநிண்டு
         கரைஉச்சி பிரிச்சுவார
முடியாம தவிச்சபோது
        முன்னாடி வாழ்ந்தவாழ்க்கை
முடியாக முளைச்சுவந்து
        வெடியாக சிரிக்ககண்டான்.
காயா? பழமா?


என் கொல்லைப்புறத்து காதலிகள் - சச்சின்

வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடிக்கு வெட்டி இரண்டு காலிலையும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  அதுதான் பாட். இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டை ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். போல் கார்ட் என்ற மாட்டர் இருப்பது அப்போது தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. கையில் தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட். வீட்டு சன்ஹூட் படியில ஜம்மென்று ஹீரோ குந்தியிருக்கிறார்.
இப்போது இரண்டு விக்கட்டுகள் டவுன். அடுத்தது தலைவர். இரண்டுகால்களையும் ஸ்ட்ரெச் பண்ணியபடி முற்றத்துக்குள் இறங்கும்போது கிரவுண்ட் பூரா ஒரே சத்தம். சூரியனை பார்த்து கும்பிட்டுக்கொண்டே கேட்டடில போய் நின்று அம்பயர் லெக்ஸ்டொம் கேட்டு சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்க வேண்டும். “அந்த ஏரியா”வில் கைவைத்து கொஞ்சம் மேலே இழுத்து விடவேண்டும். பின்னர் ஸ்டாண்ட் எடுத்து ரெடியாகியாச்சு.

அடுத்ததாக தேசிக்காய் மரத்தடில நிண்டு  அப்துல் காதர் பந்தை நக்கி நக்கி போடுவதாக நினைத்துக்கொண்டு ஒரு சல்லிக்கல்லை பொறுக்கி தூக்கிப்போட்டிட்டு, அது ஒரு கூக்ளி, டவுன் த ட்ராக் சார்ஞ் பண்ணி வந்து அந்தக்கல்லுக்கு ஓங்கி ஒரு அடி.
கல்லு சர்ர்ர்ர் என்று சன்ஹூட் தாண்டி, எழுமிச்ச மரம் தாண்டி, கிணற்றடி அன்னமுன்னா மரம் தாண்டி, சீமை கிழுவைக்குள்ளாள போயி முன்வீட்டு கமலராணி அக்காவீட்டு ஒட்டு கூரையில விழுந்து டக்கடடிக்கடடிக் என்று உருண்டு பின்னர் எங்கேயோ செருகியிருக்கவேண்டும். அடுத்த கல்லு புரக்டர் வளவுக்குள். நான்காவது சிக்ஸர் நம்வீட்டு புகைக்கூண்டுக்குள், அம்மாவிடம் இருந்து “டேய் கல்லு விளையாடாத” சத்தம் கேட்கும். பெருமிதமாக பூங்கன்று சுற்றுவட்டார மரத்தையல்லாம் பார்க்க, கரகோஷம் வானை பிளக்கும்.
சச்சின் … சச்சின் … சச்சின் ...
sachin2
வார இறுதியில்!
&&&&&&&&&


கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

 

kampavaruthy_jeyaraj

திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013
அவுஸ்திரேலியா.

அன்புத்  தம்பிக்கு,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நலமே நாடு சேர்ந்தோம்.
மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.
அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.
மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.
கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர்.
நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு,
நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது.
ஆற்றல் கண்டு அதிசயித்தேன்.
பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள்.
எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது.
சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும்.
கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு.
விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள்,
மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை.
நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம்.
இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள்.
வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும்.
மற்றை இனத்தார் தமது தகுதிகளை,
அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர்.
ஈழத் தமிழினத்தார் உலகெலாம் பரவியும்,
தம் ஆற்றல்களை, தமிழுலகிற்குத்தானும் காட்டத் தவறி நிற்கின்றனர்.
ஈழத் தமிழர்தம் ஆற்றல்கள் உலகலாவி விரிய,
உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் வழி செய்ய வேண்டும்.

வியாழமாற்றம் 07-11-2013 : என்னாச்சு?

 

அடேல் அன்ரி

Adele-Balasingham
முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.

அடேல் அன்ரி


Adele-Balasingham
முல்லைத்தீவிலிருந்து படகு மூலமாக பாலாவும் அடேலும் வெளியேறுகிறார்கள். கூடவே துணைக்கு சூசையும் சில போராளிகளும். தூரத்தில் சக்கையோடு இரண்டு படகுகள் காவலுக்கு. ஆபத்து மிகுந்த இந்த பயணம் முடிவில் ஒரு சரக்கு கப்பலை அடைகிறது. அந்தக்கப்பலில் சிலநாட்கள் பயணம். பின்னர் அதிலிருந்து இன்னொரு சரக்கு கப்பலுக்கு தாவுகிறார்கள். அதில் பலநாட்கள் பயணம். முடிவில் தாய்லாந்து நாட்டு கரையிலே மேலும் இரண்டு படகுகள் மாறி, நள்ளிரவில் கரையை அடையும் அதி பயங்கர அனுபவத்துடன் அடேல் பாலசிங்கம் எழுதிய “The Will To Freedom”, தமிழில் “சுதந்திர வேட்கை” நூல் ஆரம்பிக்கிறது.

மனதை நெகிழவைத்த குட்டி கதை.


காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் வாங்கில் எழும்பி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது. ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.

பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு

 

IMG_55332
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்னது “சூர்ப்பனகை மூக்கு”. கேதாவும் உடன் ஏறிய(அகலிகை கல்), அரங்கின் தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா என்பதும் அவையிலே என்னுடைய கொல்லைப்புறத்து காதலி கம்பவாரிதி அவர்கள் இருந்து கேட்டு ரசித்ததும் வாழ்நாள் பெருமை. இருப்பத்துமூன்று வருட தவமும் கூட!கறந்த பால் கன்னலொடு கலந்த நெய் கடையவல்லர்.
கம்பநாடன் காவியத்தின் இதயம் புக்கி ஆவி கொள்வர்.
இவரெல்லாம் இருக்கும் அவையீர், இவனை ஆசி வழங்கிடுவீர்.
உவரெல்லாம் இருக்கும் கவி, உறை போட்டு வடித்திடுவீர்!

வியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!

 

சைக்கிள் கடைச்சாமி

PR9A0398

யாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள்.  சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட் தாண்டினா இங்காலப்பக்கம் அபிராமியோட ஒட்டி இருக்கிறது தான் சாமிண்ட சைக்கிள் கடை.  கடை என்றால் வேறொன்றுமில்லை. ஒரு தகரக்கொட்டில் தான். உள்ளே ஒரு பத்து பதினைந்து பழைய டயர்கள், ஒன்றன் மேல் ஒன்றாய் கறல் பிடித்த சைக்கிள்கள். கிரீஸ் கறை அடைப்புகள். வேலியில் கூட டயர் தொங்கும்.

ஆண்கள் இல்லாத வீடு

முற்றத்து வேம்பு
விளக்குமாறால் கூட்டித்தள்ளியும்
சோளககாற்றில் பறந்து விழும் மஞ்சள் பூக்கள்
மரத்தடி நிழலில் நாற்காலி
என் ராங்கிகார அம்மா,
கால்கள் மெல்லமாய் தாளம்போட
ஏதோ ஒரு பாட்டு
நாளை இந்த வேளையோ? 
541957_10151420977146654_20018706_nஇது நல்ல வேளையோ?
எப்படிச்சொல்வேன் நான்?
என்னை விட்டு போய்விட்டான் என்றா?
அதிர்வாளா? அழுவாளா?
யாருக்காக அழுவாள்?
ப்ளேன்டீயும் ஊத்தி பனங்கட்டியும் நொறுக்கி
ப்ளேட்டில் கொடுத்தேன் அவளுக்கு.
பேன் சீப்பை எடுத்து தலை நீவினேன்.
என்னடா?
சொன்னேன்.
என்னடி சொல்லுறாய்?
திரும்பவும் சொன்னேன்.
போயிட்டாரா? ஐயோ போயிட்டாரா?
அரற்றினாள்
விடம்மா.. போனால் போறான்.
அம்மாளாச்சி … போயிட்டாரா ..
அவரை இனி எப்பிடி பார்ப்பன்? ஐயோ
அழுதாள். அரட்டினாள்.
அதிர்ந்து போனேன் நான்.
அம்மா நீ வந்து… 
உடம்பில் ஏதோ ஊர்வது போல
அவனை காதலித்தேனா?
அறிந்தேனா புரிந்தேனா?
என்ன கருமாந்திரம் செய்தேன் நான்?
நான் நினைத்தது தான் அவன் என்றேனோ?
அவனுள்ளும் பலவுண்டு அறியேனோ?
அறியவும் முயலாமல் முனிந்தேனோ?
அம்மாவை பார்த்தேன்.
கண்களால் கோதிவிட்டாள்.
இந்த அன்பு
அவங்கள் இல்லாதவிடத்தில் 
அம்மாவின் அன்பு
அவளுக்கு என் அன்பு
நடக்கும் என்று பயந்தது தான்
நடந்துவிட்டது
இனி என்ன?
இதே வீடு தான்
ஆண்கள் இல்லாத வீடு
இதே வேம்பு, தோட்டம், துரவு
அடுப்புக்கரி  சரவச்சட்டி
ஒழுகல் கூரை, தேடாவளையம்
பட்டி மாடு கன்றுக்குட்டி
கழுத்துவெட்டி சேவல் கோழி
கெக்கலிக்கின்றன
இது ஆண்கள் இல்லாத வீடு
 

கள்ளக்காயச்சல்


காலமை வெள்ளன ஏழரை ஆகியும்
காந்தனை எழும்பென பெத்தவ கத்தியும்
கட்டில விட்டவன் எட்டலை கண்டனை – பெட்ஷீட்டை
பட்டென இழுத்தனள். பொட்டென கிடந்தனை.

அம்மாவின் அழைப்பு ஆகுதியில் கரைந்தது.
அண்ணலின் நடிப்போ மகாநதியானது.
அணலை தொட்டதும் தணலாய் கொதித்தது - ஒத்திய
புனலின் ஈரத்தில் களவு வெளுத்தது.

வெள்ளம் முட்டினாலும் பள்ளிக்கு போகோணும்
கள்ளம் நெடிப்பெல்லாம் சல்லிக்கு பெயராது – எள்ளி
நகையாடிய அன்னைக்கு வயிற்றில் ஆப்பு வைத்தான்
வசை மொழிந்து ஈற்றில் இயக்கம் போவேன் என்றான்.

இடி விழுந்த மலையானாள் வடு சொன்ன சுடு சொல்லில்
மடி கொடுத்த தலைமகளால் பொடி தாங்க முடியுமோ?- கொத்த
மல்லி இலை அவித்து சீனி போட்டு கொடுத்தாள்
பள்ளிக்கு கள்ளமடித்த காய்ச்சல்கார ..ஆஆஆஆ!

நாளும் பொழுதும் நனைவிடை தோய்ந்தால்
நாளைய தலைமுறைக்கு விடுவது எதுவோ? – மேகலா
நாக்கை அறுப்பது போல நாலு கேள்வியை முறுக்கினாள்.
வாக்கை கொடுக்கும் வரை ஆளு காதினை திருகினாள்!

விடியவில்லைஎதை எடுக்க? எதை மறைக்க?

தெரியவில்லை

அவை உடைக்க, அது உரைக்க

உறைக்கவில்லை

வலு பிறக்க கழு இறக்க

முடியவில்லை

கரை உடைக்க, தளை அகற்ற

விடியவில்லை

சாலையோர தேநீர் கடை

சாலையோர தேநீர் கடை
கோடை மழை நாசி நெடி
தாவாரத்தில் இரண்டு கதிரை
நானிருக்க இழுத்துப்போட்டான்
ஏ ஆர் ரகுமான் பிடிக்கும் என்றான். 
samantha-and-nani-upcoming-tollywood-movie-yeto-vellipoyindi-manasuராஜா என்றான் சுஜாதா என்றான்.
ரசல் பீட்டர் டோம் ஹான்ஸ் என்றான்
ராஜபக்ஸ ஒரு ஷிட் என்றான்.
ராஸ்பெரி கொஃபி இரண்டு
நாக்கு புரள ஓர்டர் செய்தான்.
“70 பர்சன்ட் பொருத்தமாம்”
"இந்த பேரண்ட்ஸ் ஆர் சோ சில்லி” 

என்று சொல்லி சிரித்தான்.
“நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்”  - என்று
மழையை பார்த்து கவிதை சொன்னான்.
“Enough is enough. “
“வா போய் நனைவோம்” என்றேன்.
“சட்டை நனைஞ்சு சளி பிடிக்கும், லேட்டர்” என்றான்
“போடா புளுகு மூட்டை”

வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே

 

mqdefault

அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.

“ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் போடாமல் வெற்று மேலோடு. கதவை திறந்தேன்.  கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்திருக்கலாம். போடாமலும் விட்டிருக்கலாம். கவனிக்கவில்லை. காரணம் பக்கத்திலேயே .. என்ர கடவுளே. நம்ம ஸ்ருதி.

அவளேகினான்.


மௌனங்கள் வெட்கப்பட்டு பேச ஆரம்பிக்கின்றன.
இறைவர்கள் இமயத்தின் குளிர் தாங்கோணாமல்
1214_10151382156725791_1804901319_nஅவதாரங்களுக்கு தயாராகின்றனர்.
சூரியன் தீக்குளித்தவன் போல
வெப்பம் மேலேறி அலறுகிறான்.
தேவதைகள் ஒளிந்துகொள்ள இடம் தேடி
பதுங்குகுழிகள் தேடுகின்றார்கள்.

அவள் வருகிறாள்.

சித்தார்த்தர்கள் போதிமரத்து
குயிலிசையில் மயங்குகிறார்கள்.
ராஜாவின் வீட்டுக்கு ரகுமான் விரைகிறார்.
வரவேற்பரையிலோ வைரமுத்து.
எறும்புக்கும் கவிதை வருகிறது.

அவனிடம் வருகிறாள்.

போயின … போயின … துன்பங்கள்!

 

dentist-love-41

“நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே”

சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும் சரியாக காதில் அழுத்திவிட்டு, iTunes இல் சவுண்டை கொஞ்சம் கூட்டிவிட்டான்.  “எந்தன் வாயினிலே அமுதூறுதே, கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே” எனும்போது டிஷூ பொக்ஸில் இருந்து ஒரு டிஷுவை எடுத்து வாய் துடைத்தான். “கண்ணம்மா கண்ணம்மா” என்று ஸ்ரீனிவாசுடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே service.doBnExtract(req);    லைனை செலக்ட் பண்ணி Alt + Ins கீயை அழுத்தி try, catch block போட்டான். கைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் டைப் பண்ணிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் பாடல் முடிந்ததை உணர்ந்தவனாய், மீண்டும் விண்டோ சுவிட்ச் பண்ணி, பாட்டை ரீபிளே பண்ணிவிட்டு, ரிப்பீட் மோடுக்கு மாற்றினான். ஜாவாவுக்கு திரும்பி லொகர் சேர்த்தான்.

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

 

அவை வணக்கம்.

180437_495364482381_6536877_nதமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி.

கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே
ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே
கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும்
மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே.

தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே
ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது
காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து
என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.

 

எளிய நாய்!

 

dogindex

நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம்.

அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த போட்டோவை கிளிக் பண்ணுங்க. அண்ணே அப்பிடியே கொப்பி பண்ணி தேடாதீங்க. அந்த பொண்ணுக்கு எங்கண்ணே தமிழ் தெரியப்போகுது? இங்கிலீஷ்ல டைப் பண்ணி தேடுங்க.  “Manisha Sur”ஆ வருதா? ஒரு பொம்பிளை படம் இருக்கா? கொஞ்சம் நிறம் குறைஞ்ச பிள்ளை. தலையை ஸ்ட்ரெய்ட் பண்ணி, கண்ணெல்லாம் பெயின்ட் அடிச்சு அரியண்டம் பண்ணியிருக்கும். கடும் நாவல் கலர்ல லிப்ஸ்டிக் அடிச்சிருக்கும்.

வியாழமாற்றம் 04-07-2013 : உஷ்ஷ்ஷ்..!


shhh---finger-on-lips

உஷ் ….. 1

ஓமந்தை சென்றிபொயின்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. காந்தன், அவன் நேரத்தை அடிக்கடி செக் பண்ணியபடி கொஞ்சம் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தான். எட்டரை மணிக்கு பாதை திறப்பார்கள்.  இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. கண்டுபிடிச்சிடுவாங்களோ? பிடிக்கேலாது. என்னெண்டு பிடிக்கிறது? ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும் என்று உள்ளூர நினைத்துக்கொண்டே அடிக்கடி தலைமயிரை கைகளால் மேவியபடி இருந்தான். ஆனாலும் ஒரு நடுக்கம் கால்களில் இருந்தது. அடிக்கடி வரிசையில் பின்னுக்கிருந்தவரிடம் சொல்லிவிட்டு பத்தடி தள்ளி இருந்த கக்கூஸுக்கு போய் வந்துகொண்டிருந்தான்.

வியாழமாற்றம் 27-06-2013 : இது எங்கட கதை.

 

brother-and-sister-gladiola-sotomayor

நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா?

கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

And the mountains echoed


brother-and-sister-gladiola-sotomayor
நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா?
கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

நான் … வருவேன்.

 

14883751-couples-in-cafe“சம்வன் இஸ் நோட் இன் திஸ் வோர்ல்ட்…”

“சொறி .. நிரஞ்சனா.. ஐ ஜஸ்ட் …”

“நிரு”

“ஆ?”

“கோல் மீ .. நிரு .. அப்பிடித்தான் எல்லாரையும் கூப்பிடச்சொல்லுவன் .. நிரஞ்சனா இஸ் டூ லோங்”

“ஓ … அப்ப சுரேன் ஓகேயா?”

“பெயரை கேட்கிறீங்களா? இல்ல .. ஆளையே ..”

காத்திருப்பேனடி!

 

601029_10151611428160791_677914073_nஎன்னைப்போல் நீயும்
எவர் அவர் என்று
எண்ணுவியோ?
எடுத்ததுக்கெல்லாமே எகத்தாளம் 
பண்ணுவியோ ?
புரியாத கவிதைகள்
மரியானின் பாடல்கள் 
புறநானூற்று சுளகாலே
பிடரியில் இட தாளங்கள்
இவை யாவும் செய்திடவே
இலவு காத்து இருக்கிறியோ?

இதுகாலும் எழுதாத
கதையொண்டு வச்சிருக்கன்.
இவரெதுவும் அறியாத
கவியொன்று முடிஞ்சிருக்கேன்.
நீ வந்து திருத்தவென
சொற்பிலைகள் பொருட்பிழைகள்
ஒரு நூறு பலநூறு பலர் சொல்லியும்
விட்டிருக்கன்.

வியாழமாற்றம் 06-06-2013:கனவு மெய்ப்பட வேண்டும்

 

DG12_09_27_220.jpg

வாக்கினிலே இனிமை வேண்டும்

“I owe my life to this country. I was born in a country called Sri Lanka… and we saw the way .. people lost their freedom. The years civil war …”

இந்த நாட்டுக்கு(அமேரிக்கா) நான் வாழ்நாள் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஸ்ரீலங்கா என்ற நாட்டிலே பிறந்தேன்.  அங்கே மக்கள் சுதந்திரத்தை எப்படி தொலைத்தார்கள் என்பதை பார்த்தோம். உள்நாட்டு யுத்தத்தை பார்த்தோம். என்னுடைய தந்தை தாய் இருவருமே ஆசிரியர்கள். கல்வியோடு, சொந்தக்காலில் எப்படி நிற்பது என்பதையும் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள். உன்னுடைய சுற்றத்துக்கு எவ்வளவு உதவமுடியுமோ அவ்வளவு உதவவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.  வீட்டிலே நான் ஆறாவது பிள்ளை. எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. நான் தேங்காய், மாங்காய் கூட விற்றிருக்கிறேன். கஷ்டம். உங்களுக்கு தெரியும். குடும்பத்திலிருந்து ஒரு பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பும் செலவில் இருக்கிற காசு எல்லாமே தீர்ந்துவிடும். அவ்வளவு கஷ்டம். ஆனாலும் கௌரவம் என்று ஒன்றிருக்கிறது. அதை நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

வியாழமாற்றம் 30-05-2013 : குரு பெயர்ச்சி பலன்கள்!

 

guru_aishwariya-rai

மாதா, பிதா, குரு, தெய்வம், இவிங்கள மதிக்காதவங்க வாழ்க்கைல உருப்படமாட்டாங்க என்று தில்லுமுல்லுவில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். இந்த லிஸ்டில் மாதா பிதா பிரச்சனை இல்லை. ரெண்டு பேருமே எப்போது வேதக்கோயிலுக்கு போனாலும் இருப்பார்கள்.  இந்த தெய்வம் வேற எங்கேயுமே இல்லை, நமக்குள்ளேயே இருக்கு என்றார் மொக்கை பிஃகர் கிரனை கூட கோட்டை விட்ட நம்ம நல்லசிவம் aka நல்லா. ஸோ இந்த கியூல மூணாவதா நிக்கிற குரு தான் கொஞ்சம் கவனிக்கபடவேண்டிய ஆசாமி என்பது கலட்டி சந்திக்கு பக்கத்தில் இருக்கும் குச்சொழுங்கையில் வசித்த யாழ்ப்பாணத்து சித்தர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொல்லிவிட்டு போய்விட்டார்.

வியாழன்,  இவர் வருடா வருடம் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு தாவும் பழக்கத்தை கொண்டவர். அந்த ராசிக்கு தாவிய பின் அங்கிருந்து எல்லா ராசியையும் பார்த்து ஒரு இளிப்பு இளிப்பார். அவர் பார்த்து இளிக்கும் இராசிகள் அந்த வருஷம் நல்ல பலனையும் ஏனைய ராசிகள் அந்த வருடம் முழுதும் பழிப்பையும் சுமக்கும் என்பது ஒரு ஐதீகம். இட்ஸ் ட்ரூ மா.

வியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை!


247087_10151611421145791_2031778702_n
“சுண்டுக்குளி வேற ...கேட்கவா வேணும்?.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்!”
சொன்ன குமரனை திரும்பிப்பார்த்து செல்லமாய் முறைத்தாள் மேகலா. முறைக்கும்போதும் எப்படித்தான் அழகாய் இருக்கிறாளோ! ஹேர்லி ஹேர், கார் கண்ணாடியை இறக்கும்போதேல்லாம் காற்றிலே நெற்றிக்கு முன்னால் சரிந்துகிடப்பது காற்றில் பின்பக்கம் அலைந்து போய் விழுகின்ற விவரங்கள் எல்லாம் வியாழமாற்றத்துக்கு தேவையில்லை. ஆனாலும் எழுதாமல் விட்டாலும் திட்டுவாள்.
“எதிலையாவது உங்களை விட டலண்டா இருந்தா உடனேயே நக்கலடிப்பீங்களே..”
“ரிலாக்ஸ் மேகலா ... சொல்லு ..  இந்த போட்டோ .. அதுக்காக சாப்பாடு தண்ணி மறந்து கமராவோட கிடக்கிறது .. எல்லாமே .. யாரு உனக்கு இன்ஸ்பிரேஷன்”
“…பேபி போட்டோ மாமா”
“ஹூ? .. யாரு?”

வியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை

 

eye

 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

வியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்

 

604145_436509086438264_1618075806_n

உரைநடை

இது ஒருவித ரெடிமேட் காய்ச்சல்.  ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.

“அப்பன் எழும்படா”

ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

 

1950s-photo-of-two-boys-r-007

“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்கத்தில் அரிக்கன் இலாம்பை வைத்து நிலவு வெளிச்சமும் கூட இருக்க, அக்கா வந்தியத்தேவனோடும் குந்தவையோடும் மூழ்கிக்கிடப்பார். புத்தகங்களும் வாசிப்பும் ஈழத்து வாழ்க்கையில் இன்றியமையாத பின்னிப்பிணைந்த தோழனாக, தோழியாக, சுற்றமாக எப்போதுமே இருந்திருக்கிறது.

வியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.


திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன நடக்கும்?

கனவு மெய்ப்படவேண்டும்!

vasul_12_800“வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறாய்” என்ற சின்ன வயது கேள்விக்கு ரெடிமேட்டான பதில் “டொக்டர்” தான். எனக்கும் வளர்ந்து FRCS முடித்து ஏழைகளுக்கு இலவச சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று ஐந்து வயதில் ஒரு ஆசை இருந்தது. கஜனிடம் சொன்னேன். தனக்கு மூன்று வயதிலேயே அது வந்தது என்றான்.

வியாழமாற்றம்-11-04-2012 : அஞ்சு அழகிகள்

 

சோதி அக்கா

pukal2[3]எண்பதுகளின் இறுதி அது. டிவியில் மகாபாரதம் போய்க்கொண்டிருந்த சமயம். விளக்குமாற்று ஈர்க்கை வளைத்து தையல் நூலால் வில்லு சரிக்கட்டி வைத்திருப்பேன். நான்கைந்து ஈர்க்குகள் என் காற்சட்டைக்கு பின்னால் செருகி இருக்கும். வாழைமரங்களுக்குள் ஒளிந்திருந்து, அம்புறாத்துணியில் இருந்து ஒரு ஈர்க்கை எடுத்து, வில்லில் ஏற்றி இழுத்து விட்டால் அடுத்த வாழையில் போய் சரக்கென்று குத்தி நிற்கும். குத்திய இடத்தில் வாழைச்சாயம் இரத்தமாய் ஓடும். “இன்று போய் போர்க்கினி நாளை வா” என்று ராமன் டயலாக்கை வாழையை பார்த்து சொல்லுவேன். அந்த சண்டையில் இராமன் பீஷ்மன் வாலி அர்ச்சுனன் எல்லாம் ஒவ்வொரு வாழைக்கு பின்னால் அம்போடும் வாளோடும் நிற்பார்கள்.

Q & A

200px-Q_and_A_-_black_swan_edition

விகாஸ் சுவார்ப் எழுதிய இந்த நாவலை தான் சிலம்டோக் மில்லியனார் என்று குதறினார்கள். ராம் முஹமட் தோமஸ் என்ற தராவியில் வசிக்கும் இளைஞன் Who will win  a Billion? என்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டு கேள்விகளுக்கும் எப்படி சரியாக பதில்சொல்லி பில்லியன் ரூபாய்கள் வெல்கிறான்? என்கின்ற கதை. படத்தில் வந்த கதை தான். ஆனால் கேள்விகளும் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களும் வித்தியாசம்.

வியாழமாற்றம் 04-04-2013 - குப்பை

 

images“என்னடா இன்றைக்கு எழுதுவோம்?” என்று கஜனிடம் கேட்டபோது “ஏதோ ஒரு குப்பையை எழுதி ஒப்பேத்து” என்றான். அவன் சொன்னது போல குப்பையையே ஒரு சவாலாக எடுத்து எழுதிப்பார்க்கலாமா என்று நினைத்துப்பார்க்க குப்பை பற்றிய விஷயங்கள் கோபுரமாய் எழுந்து நின்றது. குப்பையை சாதாரணமாக குப்பை என்று மூக்கைப்பொத்திக்கொண்டு கடந்துபோக முடியாது. எங்கள் கலாச்சாரத்தில் அனேகமான விஷயங்கள் குப்பையில் தான் கிடக்கின்றன. அதை கொஞ்சம் நாற்றத்துடன் ட்ரை பண்ணியிருக்கிறேன். இந்த வாரம் ஒரு குப்பை வாரம்.


நாளை இன்று நேற்று!

 

download (1)

2123ம் ஆண்டு மே மாதம். 25ம் திகதி, இடம் யாழ்ப்பாணம் சென்றல் நேர்சிங்கோம்.

ஏழாம் நம்பர் பிள்ளை… அதான் கலைத்துறையில் நல்லா இருக்கப்போறார்!

முணுமுணுத்தபடி நேர்ஸ் பிறந்த நேரத்தை குறித்துக்கொண்டிருக்கும்போதே அவசரமாக உள்ளே நுழைந்த யாழ்ப்பாணம் கம்பன் கழக செயலாளர் வில்வராஜா தொட்டிலில் கிடந்த வயோதிபரை கண்டதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்.

“அப்பாடி .. எங்க டைமிங் பிழைச்சிடுமோ எண்டு பயந்திட்டன் .. வெளியீட்டு விழாவுக்கு நேராமாச்சுது .. ஐயாவை கெதியா ரெடிப்பண்ணுங்க”

வியாழமாற்றம் : 28-03-2013 - யாழ்தேவி

 

downloadஉரிஞ்சான்குண்டிச் சிறுவர்
ஓடிவந்து கையசைக்க வேகமெடுக்கும்.
இருமருங்கும் சணல்விளைந்த வயலூடு
மஞ்சள் பூவிடை மறைந்தும் எழுந்தும்
அது வரும்.
அறுவடை முடித்த வயலூடு போகும்.
வெறும் இரும்புக்கூடெனினும்
எத்தனை நாள் பார்த்தாலும் அலுக்காது.
தொட்டுப்பார்த்தால் சுகமிருக்காது
எனினும்
புகைவண்டிமீது எமக்கு பகையில்லை.

ஆச்சி பயணம் போகிறாள்!

3.4

ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள்.  பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,
ஆச்சி பயணம் போகிறாள்.
பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.
“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா? நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.
“மாத்தையா மொனவத பொண்ட”
“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”
இது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.

பார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய்,  பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை.  மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.

இதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா? என்று யாராவது கேட்டால், பதிலுக்கு புதுமைப்பித்தனை துணைக்கு அழைக்கவேண்டும்.  “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார். “ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல!”
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது. “இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி “பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு” என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.
“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்ப எனக்கு இல்லையா?”
புதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு!

வியாழமாற்றம் 21-03-2013 : ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்


Lanka-marina_1401367gஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்!


தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.

N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

 

z_p-24-Facelift-02
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு, கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது. “யாராக இருக்கும்?” என்று நினைத்துக்கொண்டே கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால்,

வெளியே நான்கைந்து பொலிஸ்காரர்கள்.

வியாழமாற்றம் 14-03-2013 : யாரடா அவன் துட்டகைமுனு


மஹாகவி!

ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.
40039_420717206414_3583362_n

பொன்னப்பன் துலாவின் மீது
போய் வந்து கொண்டிருந்தான்;
சின்னையன் இறைத்தான்; தண்ணீர்
சென்றோடி உருகும் வெள்ளி
என்னப் பாய்ந்தது வாழைக்குள்.
“ஏனிந்த கஞ்சிக் காரி
இன்னும் வந்திறங்க வில்லை?”
என்று பொன்னப்பன் பார்த்தான்.

கலட்டி

ஒரு சின்ன சிட்டுவேஷன். அளவெட்டிப்பக்கம் ஒரு வாழைத்தோட்டம். அந்த நாளில் தண்ணீர் இறைப்பு என்றால் துலாக்கிணறு தான் பாவிப்பார்கள். துலாவில் தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கும் படலம். நம்மட ஆள் அதை எப்படி எழுதுகிறார் என்று பாருங்கள்.
40039_420717206414_3583362_n

பொன்னப்பன் துலாவின் மீது
போய் வந்து கொண்டிருந்தான்;
சின்னையன் இறைத்தான்; தண்ணீர்
சென்றோடி உருகும் வெள்ளி
என்னப் பாய்ந்தது வாழைக்குள்.
“ஏனிந்த கஞ்சிக் காரி
இன்னும் வந்திறங்க வில்லை?”
என்று பொன்னப்பன் பார்த்தான்.