“பால் சமத்துவத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டுமா?” என்கின்ற தபால்மூலக் கருத்துக்கணிப்பு ஒன்று அவுஸ்திரேலியாவில் விரைவில் இடம்பெற இருக்கிறது. தீவிரமான ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள், இருபெரும் அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைகள், நீதிமன்ற வழக்குகள் என்று இந்தப்பிரச்சனையில் அவுஸ்திரேலியா ஒரு தீர்வினை எட்டமுடியாமல் தள்ளாடினாலும்கூட தொடர்ச்சியாகச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப்பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆங்கில ஊடகங்களிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் மிக ஆழமாக இடம்பெறத்தொடங்கிவிட்டன. கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவுப்பு வெளிவந்தபின்னர் “வேண்டும்” என்கின்ற பிரிவும் “கூடாது” என்கின்ற பிரிவும் தத்தமக்கு ஆதரவுதேடி மிகப் பரவலான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் இதுபற்றியக் கலந்துரையாடல்கள் இன்னமும் பரவலாக இடம்பெறத் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் வாழும் சூழலில் இடம்பெறுகின்ற, நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களின், அதுவும் சிறுபான்மை மனிதர்களின் உரிமைசார்ந்த ஒரு விடயத்தை,